CSK அணியின் கேப்டன் ‘தல’ தோனியின் 7ம் எண் ஜெர்சி சீக்ரெட் இது தான்? ரசிகர்கள் உற்சாகம்!

0
CSK அணியின் கேப்டன் 'தல' தோனியின் 7ம் எண் ஜெர்சி சீக்ரெட் இது தான்? ரசிகர்கள் உற்சாகம்!
CSK அணியின் கேப்டன் 'தல' தோனியின் 7ம் எண் ஜெர்சி சீக்ரெட் இது தான்? ரசிகர்கள் உற்சாகம்!
CSK அணியின் கேப்டன் ‘தல’ தோனியின் 7ம் எண் ஜெர்சி சீக்ரெட் இது தான்? ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான MS தோனி தனது 7ம் எண் ஜெர்சி சீக்ரெட் குறித்து முதன் முதலாக வெளியிட்டிருக்கும் தகவல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

MS தோனி

உலக கிரிக்கெட்டில் MS தோனி ஒரு பெரிய வீரராகவும், பலராலும் புகழப்படக்கூடிய ஒரு சிறந்த மனிதராகவும் இருக்கிறார். கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட தோல்விகளையும், இழப்புகளையும் சந்தித்து வந்த MS தோனி இந்திய அணியில் தனக்கான இடம் கிடைத்ததும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு இன்றைக்கு இவ்வளவு பெரிய வீரராக உயர்ந்து நிற்கிறார். இவரது எளிமையும், களத்தில் காட்டும் சாந்தமும், அணியை வழிநடத்தி செல்லும் விதமும் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து தந்தது.

IPL 2022 லீக்: சிக்கல்களில் தவிக்கும் CSK, MI & DC அணிகள் – இதுதான் காரணம்? முழு விபரம் இதோ!

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு பாத்திரங்களை வகித்து வந்த தோனி கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். இந்த ஓய்வுக்கு பிறகு அவரது அதிரடியான ஆட்டத்தை மிஸ் செய்து வந்த தீவிர ரசிகர்கள் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் அவரை கண்டு களித்து வருகின்றனர். இப்படி இருக்க தற்போது 40 வயதான தோனி தனது ஜெர்சி எண் 7 மீதான ரகசியத்தை முதன் முதலாக உடைத்திருக்கிறார். ஆரம்ப நாட்களிலிருந்து சர்வதேச கிரிக்கெட், IPL என எல்லாவற்றிலும் 7 என்ற எண்ணை பயன்படுத்தி விளையாடியது எதற்காக என்பதை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார் தோனி.

அதாவது மார்ச் 16ம் தேதியன்று நடந்த சிஎஸ்கே நிகழ்வில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ‘7 என்பது எனக்கு அதிர்ஷ்டமான எண் என்று நிறைய பேர் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் நான் மிகவும் எளிமையான காரணத்திற்காக அந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஜூலை 7 ஆம் தேதி பிறந்தேன். அதாவது 7வது மாதம் 7வது நாள். அது தான் அந்த எண்ணிற்கான காரணம். எந்த எண் நல்ல எண் என தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதற்கு பதிலாக, எனது பிறந்த தேதியை எண்ணாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

நிறைய பேர் 7 ஒரு நடுநிலை எண் என்று சொன்னார்கள். அது உங்களுக்கு வேலை செய்யாவிட்டாலும், அது உண்மையில் உங்களுக்கு எதிராக இருக்காது என்றும் சிலர் கூறினார்கள். என் மனதுக்கு நெருக்கமான அந்த எண்ணை நான் பல ஆண்டுகளாக என்னுடன் வைத்திருந்தேன்’ என்று தோனி கூறினார். குறிப்பாக தோனியை அவரது ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடுகிறார்களோ அந்த அளவுக்கு இந்த 7ம் எண் ஜெர்சியும் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!