Daily Current Affairs March 18, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 18, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தை” இந்திய உணவுக் கழகம் கொண்டாடியது!!

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் மார்ச் 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த அரசின் நிகழ்ச்சியான பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவகத்தில் (தெற்கு) பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தின் தொடக்க நிகழ்வு முறைப்படி நடைபெற்றது.

  1. இது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு இந்திய உணவு கழகத்தின் இயக்குனர் ஆர்டி நசீம் தலைமை தாங்கினார்.
  2. இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் 75 வாரங்களுக்கு (2021 மார்ச் 15 முதல் 2022 ஆகஸ்ட் 22 வரை) நடைபெறவுள்ள அனைத்து விதமான கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார்.

சர்வதேச நிகழ்வுகள்

சர்வதேச பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் உரை!!

சர்வதேச பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். ஃபிஜி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

  1. அரசுகளில் பணியாற்றுவோர், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார்துறை உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

வலைதள சேவைகளை வழங்குவதற்காக நோக்கியா, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் கூட்டு சேர்ந்துள்ளது!!

புதிய கிளவுட் அடிப்படையிலான 5 ஜி ரேடியோ தீர்வை உருவாக்க நோக்கியா மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் கூகிள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த  5ஜி ரேடியோ தீர்வு மூலமாக ரேடியோ அணுகல் நெட்வொர்க் (RNA) தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. RNA என்பது மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பின் ஒரு பகுதியாகும்.

பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு உணவுப் பொருளின் முதல் ஏற்றுமதி துவங்கியது!!

உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் முதல் ஏற்றுமதி, நரசிங்டியில் உள்ள பாலாஷிலிருந்து பிரான் தொழில்துறை பூங்காவில் இருந் இந்தியா வர உள்ளது. வங்க தேசத்தின் கப்பல் போக்குவரத்து அமைச்சர் காலித் மஹ்மூத் சவுத்ரி எம்வி அலிஃப் லாம் மிம் இந்த கப்பலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  1. இது கொல்கத்தாவுக்கு சுமார் 710 கிலோமீட்டர் தூரத்தை 8 நாட்களில் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. உள்நாட்டு நீர்வழிகள் வழியாக இரு நாடுகளையும் இணைக்க 1972 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையில் உள்நாட்டு நீர் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான நெறிமுறை {Protocol for Inland Water Trade & Transit (PIWTT)} கையெழுத்திடப்பட்டது.

UNODC அமைப்பிடம் பிபா (FIFA) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

பிபா UNODC என்று கூறப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்துடன் உலகளாவிய ஒருமைப்பாடு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒருமைப்பாடு திட்டம் என்பது அனைத்து 211 உறுப்பினர் சங்களுக்கும் மேம்பட்ட வசதிகள் மற்றும் கருவிகளை வழங்குவதை தனது நோக்கமாக கொண்டுள்ளது.

  1. பிபா நடத்தும் கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் போன்றவை இருக்க கூடாது என்பதனையும் தனது நோக்கமாக கொண்டுள்ளது.
  2. இந்த நோக்கத்தின் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கனவே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

விண்வெளி நிகழ்வுகள்

செவ்வாய் கிரகத்தில் நீர்வளம் இருப்பதாக நாசா தகவல்!!

  • செவ்வாய் கிரகத்தின் உட்பிரிவில் மிக பெரிய அளவிலான பெரிய பள்ளத்தில் நீர்வளம் இருக்கலாம் என்று நா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாசாவின் ஜேஎப்எல் அமைப்பும் காலிஃபோர்னியாவின் தொழிநுட்ப மையமும் இணைத்து இது குறித்து “டைம்ஸ்” இதழில் பேட்டி அளித்துள்ளனர்.
  • செவ்வாய் கிரகத்தில் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 100 முதல் 1500 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக, நீர்வளத்தின் மொத்த அளவு 30 சதவீதம் முதல் 99 சதவீதம் அந்த கிரகத்தின் கனிமங்களில் உறைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

சந்திரயான் 2 செயற்கைகோள் 7 ஆண்டுகள் வரை செயல்படும் என்று இஸ்ரோ தகவல்!!

இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தினை ஆய்வு செய்ய சந்திரயான் 2 செயற்கைகோளினை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோது 1 ஆண்டு வரை மட்டுமே செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  1. ஆனால், தற்போது இந்த செயற்கைகோள் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வரை செயல்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  2. இது மட்டுமின்றி நிலவில் காணப்பட்ட பள்ளத்தினை சந்திரயான் 2 படம் பிடித்து காட்டியது. இதனை அடுத்து அந்த பள்ளத்திற்கு “சாராபாய் பள்ளம்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

Download TNPSC Notification 2021 

மரணங்கள்

இமாச்சலப் பிரதேச எம்பி ராம் ஸ்வரூப் சர்மா மரணம்!!

இமாச்சலப் பிரதேச பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மாவை டெல்லியில் உள்ள அவரின் இல்லத்தில் தூக்கில் தொங்கியடி சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டார். 62 வயதாகும் ராம் ஸ்வரூப் சர்மா பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி. ஸ்வரூப் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதையடுத்து, பாஜக நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டது.

  1. ராம் ஸ்வரூப் ஷர்மா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கிய நாட்கள்

தேசிய தியாக தினம் 2021!!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 ஆம் தேதி தேசிய தியாக தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் போது நாட்டிற்காக தியாகம் செய்தவர்களை நினைவு கூற வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

  1. மற்றவர்களின் நலனுக்காக தங்களது உயிரினை தியாகம் செய்தவர்களையும் இந்த தினத்தில் நினைவுகூற வேண்டும் என்பதே ஆகும்.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!