Daily Current Affairs March 16, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 16, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

அந்நிய செலவாணி கையிருப்பில் இந்தியாவிற்கு 4 ஆம் இடம்!!

  • அந்நிய செலாவணி கையிருப்பில் ரஷ்யா நாட்டினை பின்னுக்கு தள்ளி இந்தியா 4 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. டாலர் வெளியேற்றத்தை சமாளிப்பதற்காக அந்நிய செலவாணி கையிருப்பினை ரிசர்வ் வங்கி கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.
  • இந்த ஆண்டு முழுவதும் இந்தியா மற்றும் ரஷ்யா இரு நாடுகளுடைய அந்நிய செலவாணி (ரொக்க கையிருப்பில்) ஒரு அளவில் இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது.
  • மார்ச் 5 ஆம் தேதியின் நிலவரப்படி இந்தியா வசம் உள்ள அந்நிய செலவாணியின் மதிப்பு 58,300 கோடி கோடி டாலர்கள் ஆகும்.

நாட்டிலேயே அதிக கல்வி கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்!!

  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்கள் அதிகளவில் கல்வி கடன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் மாணவர்கள் அதிகமாக கல்வி கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
  • இந்த ஆய்வு கணக்கெடுப்பு கடந்த 2020 ஆம் டிசம்பர் மாதம் வரை உள்ள நிலவரம் ஆகும். நாடு முழுவதும் மொத்தமாக 24,84,397 பேர் 89,883 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
  • தமிழகத்தில் மொத்தமாக 6,97,066 பேர் 17,193.30 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அடுத்த இடத்தில கேரளாவில் 3,25,703 பேர் 10,236 கோடி கடன் பெற்றுள்ளனர். கல்வி கடன் குறைவாக பெற்ற மாநிலம் பீகார் ஆகும்.

தஞ்சையில் உள்ள தொழிநுட்ப நிறுவனம் உட்பட 2 நிறுவனங்களை தேசியமயமாக்க அமைச்சரவை ஒப்புதல்!!

  • தமிழகத்தின் தஞ்சை மாநகரத்தில் உள்ள இந்திய பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய உணவு தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சி நிறுவனத்தை தேசியமயமாக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து தற்போது மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த இரு நிறுவனங்களும் தேசியமயமாக்கப்படுவதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடஒதுக்கீடு நடைமுறை அனைத்தும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2019 ஆம் ஆண்டே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இனி இந்த இரு நிறுவனங்களும் ஐஐடி போன்று செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

விருதுகள்

ஆஸ்கர் விருதுகளின் இறுதி பட்டியல் வெளியீடு!!

  • திரையுலகினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
  • 93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 300 படங்கள் இறுதி செய்யப்பட்டு, வாக்கு செலுத்தப்பட்டு ஆஸ்கார் வழங்கப்படுகின்றது.

கிராமி விருதுகள் 2021 அறிவிப்பு!!

  • உலக அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்பட்டுவருகிறது. இசைத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கிராமி விருது கருதப்படுகிறது.அமெரிக்காவின் லாஸ்வேகாஸிலுள்ள கன்வென்சன் மையத்தில் 63-வது கிராமி விருது இந்திய நேரப்படி நடைபெற்றது.
  • பாடகி பியான்ஸ், மிக அதிக விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். இவர், ‘சேவேஜ், பிளாக் பரேட், பிரவுன் ஸ்கின் கேர்ள்’ உட்பட, பாடல், வீடியோ என, ஒன்பது பிரிவுகளில் தேர்வாகி, அவற்றில் நான்கில் விருதுகளை பெற்றுள்ளார்.
  • இந்த ஆண்டிற்கான சிறந்த இசை ஆல்பமாக, டெய்லர் ஸ்விப்ட்டின், ‘போக்லோர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இவ்விருது வென்ற முதல் பெண் என்ற சிறப்பை, டெய்லர் ஸ்விப்ட் பெற்று உள்ளார்.
  • ‘நோ டைம் டு டை’ ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ‘டைட்டில்’ பாடலுக்காக, எய்லிஷ் விருது வென்றார். முதன் முறையாக, வெளியாகாத ஒரு படத்தின் பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

12 வது வர்த்தக விருதுகள் 2021!!

  • உலக வர்த்தக விருதுகள் அமைப்பின் 12 வது வர்த்தக விருதுகள் விழா 2020 – 2021 ஆம் ஆண்டிற்காக நடைபெற்றது. ஹவுஸ்வேர் தயாரிப்புகள் பிரிவில் 2020-2021 உலக வர்த்தக விருதுகளில் மில்டன் மதிப்புமிக்க “ஆண்டின் சிறந்த பிராண்ட்” விருதை வென்றுள்ளது.
  • மில்டன் இந்தியாவிலும் உலகெங்கிலும் ஹவுஸ்வேர் தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தி நிறுவனமாகவும் அதனை சந்தைபடுத்தும் நிறுவனமாகவும் இருந்து வருகின்றது.
  • இந்த உலகம் முழுவதும் 250,000 க்கும் மேற்பட்ட நுகர்வோரால் பரிந்துரைக்கப்பட்டது.

நியமனங்கள்

கியான்வந்த் சிங் மேற்கு வங்கத்தின் புதிய பாதுகாப்பு இயக்குநராக நியமனம்!!

  • தேர்தல் ஆணையம் மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து ஐ.பி.எஸ் அதிகாரி கியான்வந்த் சிங் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புதிய பாதுகாப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்வந்த் சிங் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (ஏடிஜிபி) பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
  • இவர் ஏற்கனவே மேற்கு வங்கத்தின் கூடுதல் இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தைப் பற்றி

ஆளுநர் – ஜகதீப் தங்கர்

முதல்வர் – மம்தா பானர்ஜி

தலைநகரம் – கொல்கத்தா

விளையாட்டு நிகழ்வுகள்

தேசிய தடகள போட்டியில் அன்னு ராணி தங்கம் வென்றார்!!

  • தேசிய தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் உத்தரபிரதேச மாநிலத்தின் அன்னு ராணி தங்க பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
  • தனக்கு கிடைத்த மூன்றாவது வாய்ப்பில் அன்னு ராணி 63.24 மீ., தூரம் எறிந்து முதலிடம் பெற்றுள்ளார். இதன் மூலமாக தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
  • இந்த போட்டிகளில் அடுத்த இடத்தில் ராஜஸ்தானின் சனா சவுத்திரி வெள்ளி பதக்கமும், ஷர்மிளா குமாரி வெண்கல பதக்கம் வென்றார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் ரஷிய வீரர் மெட்விடேவ் 2-வது இடத்துக்கு முன்னேறினார்!!

  • உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ரபெல் நடாலை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 15 ஆண்டுகளாக ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோர் தான் இருந்து வந்தனர்.
  • இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த டேனில் மெட்விடேவ் (9,940 புள்ளிகள்) கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஒரு இடம் முன்னேறி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • இதன் மூலம் அவர் 15 ஆண்டுகளில் 4 முன்னணி வீரர்களை தவிர்த்து 2-வது இடத்துக்குள் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Download TNPSC Notification 2021 

மரணங்கள்

கதகளி நடனக்கலைஞர், குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் மரணம்!!

  • கேரளாவின் கதகளி நடனக்கலைஞர் குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் தனது 104 வது வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் கதகளி நடனத்திற்காக ஆற்றிய தொண்டின் காரணமாக இவருக்கு இந்திய அரசு சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
  • நடனக்கலைஞர் குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் தனது 14 வயது முதல் நடனமாடி வருகிறார்.
  • கடந்த 1945 ஆம் ஆண்டு இவர் முதல் நடனபள்ளியான “பாரதீய நாட்டியகலாலயம்” என்ற பெயரில் துவக்கினார்.

முக்கிய நாட்கள்

இன்று சமூக சேவையாளர்கள் தினம் 2021!!

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி உலகளவில் “சர்வதேச சமூக சேவையாளர்கள் தினம்” கொண்டாடப்படுகிறது. சமூக சேவை புரிபவர்களின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இந்த வருடம் இந்த நாளிற்கான கருப்பொருள் “I am Because We Are – நான் என்பதால் நாங்கள்” என்பதே ஆகும்.
  • அனைவரும் சமூக சேவை ஆற்ற உதவுவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!