Daily Current Affairs March 1, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs March 1, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs March 1, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01 மார்ச்  2021

தேசிய நிகழ்வுகள்

இந்திய பொம்மை கண்காட்சி 2021″ பிரதமர் துவக்கி வைத்தார்!!

  • “இந்திய பொம்மை கண்காட்சி 2021” கண்காட்சியினை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மாநாடு மூலம் திறந்து வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மத்தியமைச்சர் நிதின் கட்கரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • பொம்மை கண்காட்சி பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

Download TNPSC Notification 2021 

வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றி!!

  • வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் அமேசானியா-1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் 78-வது ராக்கெட் மற்றும் பிஎஸ்எல்வி பிரிவில் 53-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2 ஆம் தேதி அன்று பிரதமர் கடல்சார் இந்தியா மாநாட்டைத் துவக்கி வைக்கிறார்!!

  • பிரதமர் நரேந்திர மோடி, கடல்சார் இந்தியா 2021 என்ற உச்சி மாநாட்டை மார்ச் 2-ந் தேதியன்று காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
  • மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021 www.maritimeindiasummit.in என்ற இணையத்தளத்தில் மார்ச் 2-ந் தேதியிலிருந்து 4-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
  • அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் கடல்சார் துறைக்கான வரைபடத்தை வடிவமைத்து, உலக கடல்சார் துறையில் இந்தியாவை முன்னணியில் திகழச் செய்வதற்காக இந்த மாநாடு முயற்சிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி அமைச்சர் “சுகம்ய பாரத்” என்ற செயலியை துவக்கி வைத்தார்!!

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட் “சுகம்ய பாரத்” என்ற பெயரில் ஒரு புதிய செயலியை துவக்கி வைத்தார். இத்துடன் அணுகல் – புகைப்பட டைஜஸ்ட்” என்ற கையேட்டையும் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த செயலி மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை உருவாக்கி உள்ளது.
  • இந்த செயலியை வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான 19-வது உள்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கூட்டம்!!

  • “முஜிப் பார்ஷோ” மற்றும் வங்கதேசம் இடையேயான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 50 வருடங்கள் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான 19-வது உள்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை காணொலி மூலம் நடைபெற்றது.
  • இந்தியாவின் சார்பில் மத்திய உள்துறை செயலாளர் அஜித் குமார் பல்லா மற்றும் வங்கதேசத்தின் சார்பில் உள்துறை அமைச்சகத்தின் பொது பாதுகாப்பு பிரிவின் மூத்த செயலாளர் முஸ்தபா கமாலுதீன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு தலைமை ஏற்றனர்.
  • ஒரு நாட்டின் பகுதியை மற்றொரு நாட்டுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதில் இரு தரப்பும் உறுதியை வெளிப்படுத்தின.

வங்க தேசம் பற்றி

தலைநகரம் – டாக்கா

பிரதமர் – ஷேக் ஹசினா

நாணயம் – பங்களாதேஷின் டாக்கா

நேபால் அரசுடன் இந்தியா 4 புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது!!

  • இந்திய அரசு நேபால் அரசுடன் புதிதாக 4 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. நேபாளில் உள்ள தாடிங் என்ற மாவட்டத்தில் சுகாதார அமைப்புகளை நிறுவ இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 530 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் அனைத்தும் கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளில் ஏற்பட்ட பூகம்பத்தால் சேதம் அடைந்துள்ளது. அதனை சரி செய்யவே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் Central Building Research Institute என்ற முன்னணி நிறுவனம் இந்த மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட உள்ளது.

நேபால் பற்றி

தலைநகரம் – காத்மாண்டு

பிரதமர் – பித்யா தேவி

முக்கிய நாட்கள்

Zero Discrimination Day 2021!!

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி பூஜ்ஜிய பாகுபாடு நாள், அதாவது Zero Discrimination Day கொண்டாடப்பட்டு வருகின்றது. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பதனை அனைவரும் இந்த நாளில் உணர வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இந்த நாளிற்கான சின்னம் பட்டாம்பூச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மனிதர்கள் மத்தியில் பாகுபாடு இருக்க கூடாது என்ற காரணத்திற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுவதாக கூறப்படுகின்றது.

நியமனங்கள்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு புதிய நிர்வாக அதிகாரியாக வெங்கட் ராவ் நியமனம்!!

  • மத்திய வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மூன்று வருட காலத்திற்கு மாதம் வெங்கட ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
  • இந்திய மத்திய வங்கியில் ராவின் நியமனம் 2021 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இவர் இந்த பதவியில் 3 வருட காலத்திற்கு நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பற்றி

எம்.டி – வெங்கட ராவ்

தலைமையகம் – மும்பை, மகாராஷ்டிரா

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!