
CUTN ஆட்சேர்ப்பு 2025 – Project Research Scientist I பணியிட அறிவிப்பு வெளியீடு | மாத சம்பளம் ₹56,000
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of Tamil Nadu – CUTN) Project Research Scientist I பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16-10-2025 ஆகும். இந்த பணியிடம் மைய அரசின் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. உயிரியல் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
கல்வித் தகுதி
-
M.Sc / Integrated PG in Microbiology, Life Sciences, Medical Lab Technology (MLT), Molecular Biology, Biotechnology
-
தொடர்புடைய துறையில் PhD பட்டம் பெற்றிருக்க வேண்டும்
-
Lateral flow, Point of Care Assay, Real Time PCR, ELISA மற்றும் Molecular Biology தொடர்பான அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை பெறுவர்
வயது வரம்பு
-
குறிப்பிடப்படவில்லை
சம்பளம்
-
மாத ஊதியம்: ₹56,000 + 10% HRA
-
இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்திற்குப் பிறகு 5% உயர்வு வழங்கப்படும் (Performance review அடிப்படையில்).
தேர்வு முறைகள்
-
தேர்வு Hybrid Mode Interview மூலம் நடைபெறும்.
-
தேர்வுக்கான தேதி குறுகிய பட்டியலில் இடம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
-
விண்ணப்பதாரர்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, Covering Letter மற்றும் விரிவான Curriculum Vitae (CV) உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
-
அத்துடன் பின்வரும் ஆவணங்களின் மூலப் பிரதிகள் மற்றும் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்:
-
கல்வி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சிட்டுகள்
-
NET/JRF/DBT/UGC/ICMR போன்ற தேசிய அளவிலான தேர்வு சான்றிதழ்கள்
-
தேவையான அனுபவச் சான்றுகள்
-

























