TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மார்க் மற்றும் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!

0
TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மார்க் மற்றும் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!
TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மார்க் மற்றும் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!
TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மார்க் மற்றும் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!

TNPSC குரூப் 2 & 2A தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல கட் ஆப் மதிப்பெண்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 2 & 2A தேர்வு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எந்த வித அரசு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்து வந்தது. பின்னர், கொரோனா பரவல் வெகுவாக குறைந்த காரணத்தால் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்தது. அந்த வகையில் பலரும் எதிர்பார்த்திருந்த TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் 28ம் தேதி TNPSC குரூப் 2 & 2A தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!

மே மாதம் ப்ரீலின் தேர்வுகள் முடிவுற்ற நிலையில், அடுத்ததாக முதன்மை தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு நேர்முகத்தேர்வு மற்றும் பிற தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, இந்த தேர்வுகளுக்கான அன்சார் கீ வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டதால் தான் தேர்வர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு செல்ல தகுதி உடையவர்களா? என்பது குறித்து தெரியும்.

Exams Daily Mobile App Download

அதே போல தேர்வுக்கான முடிவுகள் இந்த மாதத்தின் இறுதியில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது கட் ஆப் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. பிரிவு வாரியாகவும் ஆண் மற்றும் பெண் என்று இருபாலாருக்குமான கட் ஆப் மதிப்பெண்கள் பற்றிய பட்டியல் வெளியப்பட்டது. தேர்வர்கள் இதனை கருத்தில் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் பிரிவு  ஆண் கட் ஆஃப் ஸ்கோர்  பெண் கட் ஆஃப் ஸ்கோர்
பொது விண்ணப்பதாரர்  161 மார்க்ஸ்  158 மார்க்ஸ்
BC விண்ணப்பதாரர்கள்  159 மார்க்ஸ் 157 மார்க்ஸ்
MBC விண்ணப்பதாரர்கள்  156 மார்க்ஸ்  154 மார்க்ஸ்
SC விண்ணப்பதாரர்கள்  153 மார்க்ஸ்  150 மார்க்ஸ்
ST விண்ணப்பதாரர்கள் 144 மார்க்ஸ் 140 மார்க்ஸ்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!