நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 13 2018

0
339

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 13 2018

தேசிய செய்திகள்

அசாம்

அசாம் அரசு 1 லட்சம் பம்ப் செட்களை விநியோகிக்க உள்ளது

 • 2022 ஆம் ஆண்டில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க அசாம் அரசாங்கம் 1 லட்சத்திற்கும் அதிகமான பம்ப் செட்களை விநியோகிக்க உள்ளது.

புது தில்லி

எய்ம்ஸில் பேட்டரி மூலம் இயக்கப்படும் பஸ் சேவை அறிமுகம்

 • புதுடில்லி, எய்ம்ஸில் பேட்டரி மூலம் இயக்கப்படும் பஸ் சேவையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நடா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில அரசு இ-சிகரெட்டை தடை செய்தது

 • தமிழக அரசு மின்னணு நிகோடின் டெலிவரி சிஸ்டம்ஸ் எனப்படும் இ-சிகரெட்டை மாநிலத்தில் தடை செய்தது.

சர்வதேச செய்திகள்

சூறாவளி புளோரன்ஸ் இரண்டாம் கட்ட புயலாக வலுவிழந்தது

 • அமெரிக்காவை நெருங்கி வரும் சூறாவளி புளோரன்ஸ் இரண்டாம் கட்ட புயலாக வலுவிழந்தது.

டைஃபூன் மாங்குட்

 • பிலிப்பைன்ஸ், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளை நோக்கி நகர்கிறது சூப்பர் டைஃபூன் மாங்குட்.

அறிவியல் செய்திகள்

மனிதர்களின் பயன்பாட்டிற்கான 328 நிலையான அளவு கலவை மருந்துகளை அரசு தடை செய்தது

 • 328 நிலையான அளவு கலவை மருந்துகளை (FDC கள்) உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தை அரசு உடனடியாகத் தடை செய்துள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

கோப்பர்நிக்கஸ் பிரீமியம் பிரிவு மின்-பைக்கை அறிமுகப்படுத்தியது

 • மின்சார வாகனங்கள் வடிவமைப்பை உருவாக்கி, உற்பத்தி செய்யும் கோப்பர்நிக்கஸ், இந்திய மோட்டார் வாகன நிறுவனம் தனது முதல் பிரீமியம் பிரிவு மின்-பைக்கை அறிமுகப்படுத்தியது.

தரவரிசை & குறியீடு

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஆராய்ச்சி நிறுவன(IARC) அறிக்கை

 • புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஏ.ஆர்.சி.) சர்வதேச மருத்துவ முகாமையாளர், இந்த ஆண்டில் 18 மில்லியன் பேர் புற்றுநோயை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவர் என்று கூரியுள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் பல்வேறு வகையான நோயால் 9.6 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநாடுகள்

கிழக்கு பொருளாதார மன்றம்

 • மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ரஷ்யாவின் வ்லாடிவோஸ்டோக்கில் நடந்த கிழக்கு பொருளாதார மன்றத்திற்கு சமீபத்தில் விஜயம் செய்தார்.

டிஜிபி க்கள், ஐஜிபி க்கள் மற்றும் வடகிழக்கு மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் மாநாடு

 • அருணாச்சல பிரதேச தலைநகர் இட்டாநகரில் டி.ஜி.பி., ஐ.ஜி.பீ. மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் பங்குபெறும் 25 வது மாநாடு துவங்கியது.

IRIGC-TEC சந்திப்பு

 • வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவு, IRIGC-TEC இன் சர்வதேச அரசாங்க ஆணையத்தின் 23 வது கூட்டத்தில் கலந்து கொள்ள மாஸ்கோவை அடைந்தார். அவர் ரஷ்ய கூட்டமைப்பின் துணை பிரதம மந்திரி யூரி போரிசோவ் உடன் இணைத் தலைவராக இருப்பார்.

நியமனங்கள்

 • நீதிபதி ரஞ்சன் கோகோய் – உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி

திட்டங்கள்

பால் நடைமுறைப்படுத்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி

 • புது தில்லியில் பால் பண்ணை மற்றும் விவசாய மேம்பாட்டு நிதி அமைச்சர் ராதா மோகன் சிங் பால் நடைமுறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை துவங்கினார்.

பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம்(PM-AASHA)

 • மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த,பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதோடு, விவசாயத் துறையை வலுப்படுத்தும்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

தேசிய உதவித்தொகை போர்ட்டல் மொபைல் செயலி

 • ஏழை மற்றும் கீழ்மட்ட பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கு மென்மையான, அணுகக்கூடிய, தொந்தரவு இல்லாத கல்வி உதவித் திட்டத்திற்காக நாட்டின் முதல் தேசிய உதவித்தொகை போர்ட்டல் மொபைல் செயலியை புது தில்லியில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தொடங்கினார்.

விளையாட்டு செய்திகள்

ISSF உலக துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்

 • உலக துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பில் ஜுனியர் 25 மீ. ஆண்கள் பிஸ்டல் பிரிவில் உதயவீர் சிங் தங்கம் வென்றார்.

SAFF சாம்பியன்ஷிப்

 • டாக்காவில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொள்ள உள்ளது இந்தியா.

சர்தார் சிங் ஓய்வு அறிவிப்பு

 • சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து முன்னாள் இந்திய கேப்டன் சர்தார் சிங் ஓய்வு பெறுகிறார்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பவுல் காலிங்வுட் ஓய்வு பெறுகிறார்

 • முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பவுல் காலிங்வுட் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது

 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னணி வகிக்கிறது.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 13, 2018 வினா விடை

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here