நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 11 2018

0
381

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 11 2018

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 11 – சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 -வது ஆண்டு விழா

 • சுவாமி விவேகானந்தர் செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் உள்ள உலக மதங்களின் பாராளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். வேதாந்தா மற்றும் யோகா போன்ற தத்துவங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய முக்கிய நபர்களில் ஒருவராக அவர் நினைவுபடுத்தப்படுகிறார்.

தேசிய செய்திகள்

கர்நாடகம்

இந்தியாவின் முதல் 205 டன் குப்பை கொட்டும் வண்டி BEML மைசூரில் அறிமுகப்படுத்தப்பட்டது

 • இந்தியாவின் முதல் 205 டன் எலக்ட்ரிக் டிரைவ் ரியர் குப்பை கொட்டும் வண்டி (BH205-E) – பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.எம்.எல்) மைசூரு ஆலையில் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிரம்

மார்பத் திருவிழா நாக்பூரில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது

 • மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தின் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மார்பத் திருவிழாவை கொண்டாடினர்.

கோவா

துயரத்தில் உள்ள பெண்களுக்கு யுனிவர்சல் உதவிச் சேவை

 • கடலோர மாநிலமான கோவாவின் மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் துன்பத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு யுனிவர்சல் உதவிச் சேவையை (181 என்ற இலக்கத்தினை) துவக்கியது.

உத்திரப்பிரதேசம்

பாக்பாத்தில் தில்லிசஹரன்பூர் நெடுஞ்சாலையின் அடிக்கல் நாட்டப்பட்டது

 • சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் 154 கி.மீ. நீளமுள்ள தில்லி-சஹரன்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு பாக்பாத்தில் அடிக்கல் நாட்டினார்கள்.

சர்வதேச செய்திகள்

பீகார் மற்றும் நேபாளம் இடையே முதல் பஸ் சேவை கொடியசைத்து துவக்கம்

 • பீகார் மற்றும் நேபாளம் இடையே முதல் தடவையாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை தொடர்ந்து பஸ் சேவை தொடங்கியது.

அமெரிக்க 9/11 தாக்குதல்களின் 17 வது ஆண்டு நினைவு நாள்

 • அமெரிக்கர்கள் செப்டம்பர் 11, 2001, நியூயார்க், வர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியாவில் கிட்டத்தட்ட 3,000 பேரைக் கொன்ற பயங்கரவாத தாக்குதல்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அறிவியல் செய்திகள்

அணு உலை அப்சரா

 • 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிராம்பே வளாகத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஆராய்ச்சி அணு உலை அப்சரா செயல்படத் தொடங்கியது. இந்த உலை 2009 ஆம் ஆண்டு மூடப்பட்டது. தரம் மேம்படுத்தப்பட்டு தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது நீச்சல்குளம் போன்ற ஆராய்ச்சி அப்சரா அணு உலை.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

.சி.டி... அமைக்க நிதி ஆயோக், இன்டெல், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் இடையே ஒத்துழைப்பு

 • உருமாற்றும் செயற்கை நுண்ணறிவு மாதிரி சர்வதேச மையம் அமைக்க நிதி ஆயோக், இன்டெல், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஐ.எஃப்.ஆர்) ஆகியவற்றின் இடையே ஒத்துழைப்பு. செயற்கை அறிவு அடிப்படையிலான ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரதமர் ஊதிய உயர்வு அறிவித்தார்

 • ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு செய்திகள்

யுத் அபியாஸ்(Yudh Abhyas) 2018

 • இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவ பயிற்சி யுத் அபியாஸ் 2018 உத்தரகாண்டிலுள்ள சௌபாத்தியாவில் இமயமலை அடிவாரத்தில் நடத்தப்படவுள்ளது.

கஜின்ட்(KAZIND) 2018

 • இந்திய மற்றும் கஜகஸ்தான் படைகளுக்கு இடையே ஒரு கூட்டு இராணுவப் பயிற்சி,கஜின்ட்-2018 கஜகஸ்தானின் ஓடார் இராணுவப் பகுதியில் தொடங்கப்பட்டது.

விருதுகள்

 • பிஎஸ்என்எல் – WiFi தலைமைக்கான விருதுகள் 2018
 • விபின் தியாகி – ஆண்டின் WiFi தலைவர்

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

ரயில் சஹயோக் வலைத் தளம்

 • ரயில் சஹயோக் வலைத் தளம், சி.எஸ்.ஆர்.நிதி மூலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே / அருகிலுள்ள வசதிகளை உருவாக்குவதற்கு கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஒரு தளத்தை வழங்கும்.

விளையாட்டு செய்திகள்

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப்

 • ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜூனியர் துப்பாக்கிச் சூடு வீரர்கள் நாட்டின் முதல் ஸ்கீட் பதக்கங்களை வென்றனர்.
 • கர்னிஹால், அனன்ஜீத் சிங் நருகா, ஆயுஷ் ருத்ரராஜூ அடங்கிய ஆண்கள் அணி வெள்ளி வென்றது.
 • குர்னிஹால் சிங் கர்சா தனிநபர் பிரிவில் வெண்கலத்தை வென்றார்.

இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்

 • இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில்118 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 143 ஆட்டங்களில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஸ்திரிலேயாவின் மெக்கிராத்தை பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 11, 2018 வினா விடை

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here