நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 20 2018

0
192

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 20 2018

2018 விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை வென்றது எந்த அணி?

மும்பை டெல்லி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது

12 ஆசிய பாதுகாப்பு மந்திரிகள் கூட்டம் (ADMM) எங்கு நடைபெற்றது?

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிங்கப்பூரில் அமெரிக்க, ஆசியான் உறுப்பினர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

எந்த கூட்டு விமானப்படை பயிற்சிக்கு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா திட்டம்?

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை இருதரப்பு ‘Cope India’ விமானப்படை பயிற்சியை முத்தரப்பு பயிற்சியாக உயர்த்தத்திட்டம். ஏற்கனவே மூன்று நாடுகளும் விரிவுபடுத்தப்பட்ட மலபார் கடற்படை பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் நீளமான கடல் பாலம் எந்த நாடுகளுக்கு இடையே திறக்கப்படும்?

உலகின் மிக நீண்ட கடல் பாலம் ஹாங்காங்-ஜுஹாய்-மாகோ பாலம் அக்டோபர் 24ல் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.

உலகின் மிகப்பெரிய நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் விமானம் எந்த நாட்டால் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது?

உலகின் மிகப் பெரிய சாதனையாக சீனாவின் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் விமானம் AG600 வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

என்று உலக புள்ளிவிவர தினம் அனுசரிக்கப்படுகிறது?

அக்டோபர் 20 - உலக புள்ளிவிவர தினம் சமூகத்தில் நல்ல முடிவெடுக்க நல்ல தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அவசியமானவை என்பதைக் காட்ட அக்டோபர் 20 ம் தேதி உலக புள்ளிவிவர தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. ஜூன் 3, 2015 அன்று ஐ.நா. பொதுச் சபையால் இதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இரண்டாவது உலக புள்ளிவிவர தினம் ஆகும். தீம்: Better Data, Better Lives

12வது ஆசிய ஐரோப்பா கூட்ட (ASEM) உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

பெல்ஜியத் தலைநகர் ப்ரூசெல்ஸில் 12 வது ஆசிய ஐரோப்பியக் கூட்ட(ASEM) உச்சிமாநாடு நடைபெற்று முடிந்தது.

"M dwarf"[எம் ட்வார்ப்] என்பது வானியலில் எதைக் குறிக்கும்?

HAZMAT - வாழத்தகுந்த மண்டலங்கள் மற்றும் "M dwarf"[எம் ட்வார்ப்] [சிவப்பு குள்ள நட்சத்திரம்] செயல்பாடு எனும் பெரிய திட்டத்தின் இத்தகைய நட்சத்திரங்களை ஹப்புள் தொலை நோக்கி மூலம் கவனித்து வருகிறார்.

இளம் நட்சத்திரங்களிடமிருந்து வரும் சூப்பர்ஃபிளேர்கள் கிரகங்களுக்கு அபாயகரமானதாக மாற வாய்ப்பு என நாசா எதை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளது?

நட்சத்திர மண்டலத்திலிருந்து வரும் பயங்கர ஃபிளேர்கள், அதனைச் சுற்றும் கிரகத்தின் வளிமண்டலத்தை பாதித்து வசிக்க முடியாதபடி செய்ய வாய்ப்பு உள்ளது என நாசாவின் ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here