நடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 26 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 26 2019

எத்தனை மாநிலங்களுக்கு சிறப்புச் செலவு ஆய்வாளர்களை ECI நியமித்துள்ளது?

6 மாநிலங்களுக்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது

மேற்கு வங்காளத்திலும், ஜார்கண்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்புப் போலீஸ் கண்காணிப்பாளராக இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட்டவர் யார்?

மேற்கு வங்காளத்திலும், ஜார்கண்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்புப் போலீஸ் கண்காணிப்பாளராக இந்திய பாதுகாப்பு படை முன்னாள் இயக்குநர் கே.கே.சர்மாவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

சமூக ஊடகங்கள் தீவிரவாத சம்பந்தப்பட்ட விஷயங்களை தங்கள் தளங்களில் இருந்து விரைவாக அகற்றாவிட்டால், நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்படலாம் என்று சமூக ஊடக நிறுவனங்களை எந்த நாடு எச்சரித்துள்ளது?

ஆஸ்திரேலியா, சமூக ஊடகங்கள் தீவிரவாத சம்பந்தப்பட்ட விஷயங்களை தங்கள் தளங்களில் இருந்து விரைவாக அகற்றாவிட்டால், நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்படலாம் என்று சமூக ஊடக நிறுவனங்களை எச்சரித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) 29 செயற்கைக்கோள்களை எந்த நாளில் செலுத்த உள்ளது?

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) ஏப்ரல் முதல் நாளில் EMISAT உட்பட 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது .பி.எஸ்.எல்.வி-சி45 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சுமார் 9.30 மணி அளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி,SWIFT நடைமுறைக்கு எதிராக செயல்பட்டதால் _________ க்கு ரூபாய் 2 கோடி அபராதம் விதித்துள்ளது?

இந்திய ரிசர்வ் வங்கி,SWIFT நடைமுறைக்கு எதிராக செயல்பட்டதால் காரணமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூபாய் 2 கோடி அபராதம் விதித்துள்ளது.

கடற்படைத் தளபதி யார்?

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா மும்பை லோனாவலாவில் உள்ள ஐ.என்.எஸ் சிவாஜியில் இந்திய கடற்படை அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பயிற்சி நிலையத்தை (NBCTF) திறந்துவைத்தார்.

இந்தியாவின் சூப்பர் 500 பேட்மின்டன் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

புது தில்லியில் இந்தியாவின் சூப்பர் 500 பேட்மின்டன் தொடங்கப்பட்டது. பி.வி. சிந்து மற்றும் கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வெல்ல முயல்வர்.

இந்திய கடற்படை அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பயிற்சி நிலையம் (NBCTF) எங்கு திறக்கப்பட்டுள்ளது?

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா மும்பை லோனாவலாவில் உள்ள ஐ.என்.எஸ் சிவாஜியில் இந்திய கடற்படை அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பயிற்சி நிலையத்தை (NBCTF) திறந்துவைத்தார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here