நடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 08, 2019

0
208

நடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 08, 2019

சர்வதேச மகளிர் தினம்.............................?

சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8), உலகில் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுகிறது. பாலின சமத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு இந்த தினம் அழைப்பு விடுக்கின்றது.

சவூதி அரேபியா மீது மனித உரிமைகள் மீறல் பதிவை திறந்த கடிதத்தில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டு விமர்சித்துள்ளன?

சவூதி அரேபியா மீது மனித உரிமைகள் மீறல் பதிவை திறந்த கடிதத்தில் முப்பத்தி ஆறு நாடுகள் கையெழுத்திட்டு விமர்சித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, நோர்வே, நியூசிலாந்து, லிச்டென்ஸ்டீன், மொனாகோ மற்றும் மாண்டினெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டுக் கண்டனக் கடிதத்தில் கையெழுத்திட்டது.

எந்த மாநிலத்தில் தேசிய பெண்கள் வாழ்வாதார கூட்டம் நடைபெற்றது?

பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச மகளிர் தினத்தன்று, உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற தேசிய பெண்கள் வாழ்வாதார கூட்டம் 2019ல் கலந்து கொண்டார்.

மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மிசோரமின் ஆளுநராக அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜக்திஷ் முகீயை கூடுதல் பொறுப்பில் நியமித்தார். மிசோரமிற்கு ஆளுனர் நியமிக்கப்படும் வரை இவர் இந்த பதவியில் வகிப்பார்.

சவூதி அரேபியாவிற்கான இந்தியாவின் புதிய தூதர்----------------------?

ஆசாப் சயீத் – சவூதி அரேபியாவிற்கான இந்தியாவின் புதிய தூதர்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.)எங்கு இரண்டு புதிய பெஞ்ச் அமைக்க அரசு அங்கீகரித்துள்ளது?

ஆந்திராவின் அமராவதியிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரிலும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.) இரண்டு புதிய பெஞ்ச் அமைக்க அரசு அங்கீகரித்துள்ளது.

எந்த நிர்வாகத்துடன் இணைந்து, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் “மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டத்தை” ஆதரவு அளிக்கிறது?

இந்தியாவின் ஸ்டீல் ஆணையத்தின் கீழ், ஹரியானாவில் உள்ள நுஹ் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் “மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டத்தை” ஆதரவு அளிக்கிறது.

குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்தை வரையறுத்துள்ளது உலகில் முதல் நாடு எது?

உலகில் முதல் நாடாக ஒரு விரிவான குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்தை வரையறுத்துள்ளது, இது ஒரு நீண்ட கால பார்வை கொண்டது, இது பல்வேறு துறைகளில் உள்ள குளிர்விக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், குளிரூட்டும் கோரிக்கைகளை குறைக்க உதவும் செயல்களை பட்டியலிடும். சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இந்தியா குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்தை (ஐ.சி.ஏ.பி) துவக்கி வைத்தார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here