நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 08, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 08, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77 வது ஆண்டுவிழா எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆகஸ்ட் கிராந்தி தினத்தின் 77 வது ஆண்டு விழா ஆகஸ்ட் 08 அன்று அனுசரிக்கப்படுகிறது.1942ல், பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் குழுவின் அமர்வில் மகாத்மா காந்தி வெள்ளையேனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.

உத்தரபிரதேச அரசு எந்த நாட்டுடன் பல துறைகளில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது?

உத்தரபிரதேச அரசும் நெதர்லாந்தும் பல துறைகளில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளன. முன்னதாக கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், திடக்கழிவு மேலாண்மை, இடஞ்சார்ந்த திட்டமிடல், நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பது மற்றும் இயக்கம் திட்டமிடல் உள்ளிட்ட துறைகளில் அறிவு மற்றும் நுட்பங்களின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ளது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை எப்போது நிறுவப்பட்டது?

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 30 வது ஆண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த அறக்கட்டளை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனால் 1988 இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒரு சில வெளிநாடுகளில் இந்த அறக்கட்டளை ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

2019 ஐ எந்த ஆண்டாக ஐ.நா பொதுச் சபை அறிவித்துள்ளது?

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 2019 ஐ சுதேச மொழிகளின் சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது.பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ‘வாழும்’ சுதேசிய மொழிகளைக் கொண்டுள்ளது (840), இந்தியா 453 உடன் நான்காவது இடத்தில் உள்ளது.

எத்தனை மல்டி மிஷன் சீஹாக் ஹெலிகாப்டர்களை சவுத் கொரியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 12 மல்டி மிஷன் சீஹாக் ஹெலிகாப்டர்களை தென் கொரியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் நிலங்களில் ஏற்படும் தாக்குதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாய் ஏற்படும் தாக்குதல் தொடர்பான பணிகளை மேம்படுத்துகின்றன, மேலும் தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற இரண்டாம் நிலை பணிகளையம் இதனால் கையாள முடியும்.1950-53 கொரியப் போரிலிருந்தே இரு நாடுகளும் பாதுகாப்பு கூட்டணியில் உள்ளன.

கடல் வெப்பமயமாவதாலும் மற்றும் அதிகப்படியான மீன்களைப் பிடிப்பதாலும் மீன்களில் எந்த நச்சுத்தன்மையை அதிகரிக்கிறது?

உணவுச் சங்கிலியில் அதிகமாக இருக்கும் சில மீன்களில் சேரும் மெத்தில்மெர்குரி நச்சுகளின் அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.காலநிலை மாற்றத்தின் விளைவாக மீன் நுகர்வு மூலம் மனிதர்களிடமும் இந்த நச்சுத்தன்மை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நாட்டின் தற்போதைய ரெப்போ விகிதம் என்ன?

ரெப்போ வீதத்தை 35 புள்ளிகள் குறைத்து 5.40 சதவீதமாக மாற்றி தொடர்ச்சியாக நான்காவது கொள்கை மறுஆய்வுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது .ரெப்போ விகிதம் என்பது நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும் வீதமாகும் .

மனநலம் குறித்த என்.எச்.ஆர்.சி யின் தேசிய அளவிலான மறுஆய்வுக் கூட்டம் எந்த நகரத்தில் நடைபெற்றது?

புதுடெல்லியின் இந்திய சர்வதேச மையத்தில் மனநலம் குறித்த என்.எச்.ஆர்.சி யின் தேசிய அளவிலான மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் சட்டத்திற்கும் அதன் செயல்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள பல சிக்கல்களை எடுத்துரைத்தது.பாதுகாப்பு செய்திகள்

புதுச்சேரியின் டிஜிபியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

பாலாஜி ஸ்ரீவாஸ்தவா புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ள எஸ்.சுந்தரி நந்தாவிற்கு பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார். அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யூடி) கேடரில் ஐபிஎஸ் அதிகாரியான திரு. ஸ்ரீவாஸ்தவா முன்பு மிசோரத்தின் டிஜிபியாக பணியாற்றியுள்ளார் .

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற உள்ளன?

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பிற்கு ஆறு முறை உலக சாம்பியனான எம் சி மேரி கோம் மற்றும் லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் சமீபத்திய போட்டிகளில் அவர்களது சிறப்பான ஆட்டத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபர் 3 முதல் 13 வரை ரஷ்யாவில் நடைபெற உள்ளன.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 08, 2019 video – Click Here

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here