நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 09 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 09 2019

சிறப்பு அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலம் (ULEZ) என்னும் திட்டத்தை செயல்படுத்தும் உலகின் முதல் நகரம் எது?

சிறப்பு அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலம் (ULEZ) என்னும் திட்டத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன் ஆகும், இங்கு உமிழ்வு தரங்களை பூர்த்தி செய்யாத பழைய வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல் படுத்தியுள்ளது.

எந்த நகரம் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை திறந்துள்ளது?

புதிய இஸ்தான்புல் விமான நிலையம், உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக பதிவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தால் வருடத்திற்கு 90 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

கிங் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

இந்திய கால்பந்து அணி ஜூன் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து [ரெமிட்டன்ஸ்] அதிக பணம் பெறும் உலகின் முதன்மையான நாடு எது?

2018ஆம் ஆண்டில் தன் சொந்த நாட்டிற்கு புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புவதில் உலகின் மிகப்பெரிய பெறுநராக இந்தியா தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

மத்திய அரசின் NIRF தரவரிசைகளில் முதல் இடம் பிடித்த உயர் கல்வி நிறுவனம் எது?

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், NIRF உயர் கல்வி தரவரிசைகளை அறிவித்தார் அதில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை (ஐஐடி-சென்னை) மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது, இரண்டாம், மூன்றாம் இடத்தை இந்திய அறிவியல் கழகம்-பெங்களூரு, மற்றும் ஐஐடி-தில்லி ஆகிய கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் யார்?

முன்னாள் ஆஸ்திரேலிய ஹாக்கி வீரரான கிரஹாம் ரீட் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.

ஸ்வீடிஷ் போஃபர்ஸ் துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட இந்திய வகை துப்பாக்கி எது?

தி ஆர்டின்ஸ் தொழிற்சாலை வாரியம் (OFB) ஆறு Bofors பீரங்கித் துப்பாக்கிகளின் முதல் தொகுதியை இராணுவத்திற்கு அளித்தது. 1980 களில் சேகரிக்கப்பட்ட ஸ்வீடிஷ் போஃபர்ஸ் துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட இந்திய வகை துப்பாக்கியே தனுஷ் ஆகும்.

உலகின் எத்தனை சதவீதம் பவளப்பாறைகளில் “corallicolid” எனும் விசித்திரமான உயிரினம் காணப்படுகிறது?

ஒரு சமீபத்திய ஆய்வில் முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள், 70% பவளப்பாறைகளில் காணப்படும் “corallicolid” என்ற விசித்திரமான உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர். இது குளோரோபிளை உற்பத்தி செய்யக்கூடியது ஆனால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

ஏப்ரல் 10 நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Videoகிளிக்செய்யவும்

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here