நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 07,08 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 07,08 2019

எந்த ஆண்டு முதல் ஏப்ரல் 07 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது?

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. சுகாதார நடவடிக்கைகளை அறிந்து உடல்நலப் பிரச்சினையின்றி துல்லியமாக தங்கள் பணிகளை நிறைவேற்ற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 2019 உலக சுகாதார நாள் கருப்பொருள்: Universal health coverage: everyone, everywhere

அடுத்த இந்தியக் கடற்படை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங் நியமிக்கப்பட உள்ளதால் அவரின் ஆயுதப்படைத் பதவி, பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மே 31 ம் தேதி இந்திய கடற்படைத் தளபதி சுனில் லன்பாவின் மூன்று வருட கால பதவி நிறைவடைவதால், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங் பதவியேற்க உள்ளார்.

எந்த ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியத்தை பயன்படுத்தி வாசனை கலவைகளை சிதைக்கும் யுக்தியை கண்டுபிடித்துள்ளனர்?

பெட்ரோலியம் பொருட்களால் மாசுபட்ட மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியத்தின் தனித்துவமான திரிபுகளைப் பயன்படுத்தி, ஐ.ஐ.டி பாம்பே ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் நச்சுத்தன்மை ஏற்படுத்தும், பென்சோயேட் (சோடியம் பென்சோயேட் உணவுப் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது), பென்சில் ஆல்கஹால் மற்றும் நப்தலைன் போன்றவற்றை சிதைக்கும் யுக்தியை கண்டுபிடித்துள்ளனர்.

ஏகே - வின் எந்த ரக துப்பாக்கியை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது?

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.-203 ரக தாக்குதல் துப்பாக்கிகளை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வீச்சை 400 கி.மீ.லிருந்து எத்தனை கி.மீட்டருக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது?

ரஷ்யா மற்றும் இந்தியா கூட்டு சேர்ந்து தயாரிக்கப்படும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வீச்சு வரம்பை 400 கிமீ இருந்து 500 கி.மீ. (311 மைல்கள்) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பூஷண் ஸ்டீலை வாங்கிய பிறகு, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தியானது 2019 ஆம் நிதியாண்டில் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

பூஷன் ஸ்டீல் வாங்கிய பிறகு டாடா ஸ்டீல் கடந்த ஆண்டை விட 46 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 2019 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த உற்பத்தியாக 4.47 மில்லியன் டன்கள் உற்பத்தியை அடைந்துள்ளது.

உலக ஹோமியோபதி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

ஹோமியோபதி மருத்துவத்தின் நிறுவனரான டாக்டர் கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிச் சாமுவேல் ஹன்மான்மன் பிறந்த நாள் நினைவாக ஏப்ரல் 10 அன்று உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.

காங்லா டோங்பி போர் நினைவகம் எங்கு அமைந்துள்ளது?

07 ஏப்ரல் 2019, காங்லா டோங்பி போர் நினைவகத்தில் இராணுவத் துறையினரால் 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த இடம் மணிப்பூரில் அமைந்துள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

ஏப்ரல் 8,9 நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Videoகிளிக் செய்யவும்
முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here