ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 14 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 14 2018

செப்டம்பர் 14 – இந்தி திவாஸ்

  • அசாம் அரசு, கிட்டத்தட்ட 1000 அரசு மருத்துவமனைகளுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது.
  • நாட்டின் முதல் பழங்குடி சுற்றுலா சுற்று மையத்தை சத்தீஸ்கரில் திறந்து வைக்கப்பட்டது.
  • மேற்கு ஒடிசாவில், அறுவடை நுவாகாய் திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே அனைத்து ஆளில்லா லெவல் கிராஸிங்கை அகற்றியது.
  • குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, செர்பியா, மால்டா, ரொமானியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
  • தூர்தர்ஷன் அதன் 59வது துவக்க ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது
  • தும்கூர் ஜில்லா பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இ-பீட் அமைப்பை மூன்று காவல் நிலையத்தில் திறந்து வைத்தார்.
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் கடுமையாக தாக்கியது.
  • சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • அமெரிக்கா வட கொரியாவிற்கு நிதி அளித்ததற்காக ரஷ்யா மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைவிதித்தது
  • அமைச்சர் சுரேஷ் பிரபு, ஜி-20, வர்த்தக மற்றும் முதலீட்டு மந்திரி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
  • மின் அமைச்சகம் குளிர்விப்பானில் ஆற்றல் செயல்திறன் குறித்த லட்சிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
  • இட ஒதுக்கீடு மற்றும் பல்வேறு நலன்புரி நலன்களைப் பெறுவதற்காக தொழுநோய் நோயாளிகளுக்கு ஊனமுற்ற சான்றிதழ்களை வழங்குவதற்காக தனி விதிகளை வடிவமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு அறிவுறுத்தல்.
  • சிஸ்கோ நிறுவனம் நிதி ஆயோக், பிஎஸ்என்எல் உடன் டிஜிட்டல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து
  • மைசூர் வளாகம், இன்போசிஸ் – LEED EBOM (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு தலைமை – தற்போதுள்ள கட்டிடம் செயல்பாடு மற்றும் பராமரிப்பு) அமெரிக்க பசுமை கட்டிட கவுன்சில் பிளாட்டினம் சான்றிதழ்.
  • 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்குகிறது.

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி

  • ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் உதய்வீர் சித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!