ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 14 2018

0
313

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 14 2018

 • மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
 • மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
 • அசோக் கெலாட் ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளனர்.
 • சர்வதேச நாணய நிதியம், உலகளாவிய கடன் 184 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என அறிவிப்பு.
 • இன்டர்போல் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் வெளியிட்டது.
 • விசாகப்பட்டினத்தில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ சாதனங்கள் மீதான 4வது உலகளாவிய கருத்துக்களம் நடைபெற்றது.
 • ப்ரிஜேந்திர பால் சிங் இந்தியாவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன (FTII) சங்கத்தின் புதிய தலைவராகவும் ஆளும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
 • ஸ்ரீ ராம்பால் பவார் – தேசிய குற்றப்பதிவு பணியகம் இயக்குநர் [NCRB]
 • ஸ்ரீ அசோக் குமார் சிங் – அட்டவணை பழங்குடியின தேசிய ஆணையத்தின் பொறுப்பு செயலாளர்(NCST)
 • மகிலா கிசான் விருதுகள் திட்டம், பெண் விவசாயிகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை நாட்டிற்கு முன்னால் கொண்டுவரும் முயற்சியாகும்.
 • இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தால், ஐ.சி.ஏ.ஆர். பெண் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 • 2019ஆம் ஆண்டு ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க சவுதி அரேபியாவிடம் இந்தியா கோரிக்கை. இருதரப்பு ஆண்டு ஹஜ் 2019 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 • 683 தனியார் FM ரேடியோ சேனல்களின் ஏலம் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 • ரயில்வே அமைச்சகம் சுமை வீதத்தில் 25 சதவீத தள்ளுபடி செய்ய முடிவு.
 • எக்கோ நிவாஸ் சம்ஹிதா 2018 – குடியிருப்பு கட்டிடங்களுக்கான ஆற்றல் பாதுகாப்பு கட்டட குறியீடு தொடங்கப்பட்டது.
 • ஆண்கள் ஹாக்கி உலககோப்பை கால்இறுதிப் போட்டியில் இந்தியா நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் ஜெர்மனியை தோற்கடித்தது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here