நடப்பு நிகழ்வுகள் – மே 4 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 4 2019

முக்கியமான நாட்கள்

மே 4 – சர்வதேச தீயணைப்பு படைவீரர்கள் தினம் (IFFD)

  • சர்வதேச தீயணைப்பு படைவீரர்கள் தினம் (IFFD) மே 4ல் அனுசரிக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூறுவதற்காக, உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ம் நாள் சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் பின்பற்றப்படுகிறது.

தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா

கோஹினூரின் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சி 2019

  • மும்பை சர்வதேச நுகர்வோர் கண்காட்சியுடன் இணைந்து, மிக வேகமாக வளரும் மின்னணு சில்லறை நிறுவனமான கோஹினூர் அதன் மூன்றாம் பதிப்பு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு விழாவான 2019 நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியை அறிவித்தது.

கேரளா

குழந்தைகளுக்கான திரைப்பட ஒர்க்ஷாப்

  • நவ்யுக் குழந்தைகள் திரையரங்கு மற்றும் திரைப்பட கிராமம், கேரள சிறுவர் திரைப்பட சங்கத்துடன் இணைந்து தன்மையா மீடியா சென்டரில் குழந்தைகளுக்கான ஐந்து நாள் திரைப்பட ஒர்க்ஷாப்-ஐ ஏற்பாடு செய்து வருகிறது.

ஒடிசா

பானி புயல்

  • வங்கக்கடலில் உருவாகி ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டிய பெயர் ஆகும். அந்த நாட்டு மொழியில் (வங்காளி) ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம். இங்கு மணிக்கு 170 முதல் 180 கி.மீ. வரை காற்றின் வேகம் வீசியது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செய்திகள்

நேபாளம், காத்மாண்டுவை இந்தியா மற்றும் சீனாவுடன் இணைக்கும் இரயில்வே கட்டுமானத்தை ஆரம்பிக்க திட்டம்

  • நேபாளம் காத்மாண்டுவை இந்தியா மற்றும் சீனாவுடன் இணைக்கும் இரயில்வே கட்டுமானத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது; இது பிர்குஞ்ச்-காத்மாண்டு மற்றும் ரசுவகாதி-காத்மாண்டு இரயில்வேயின் விரிவான திட்ட அறிக்கை மூலம் காத்மாண்டுவை இந்தியா மற்றும் சீனாவுடன் இரயில் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

அறிவியல் செய்திகள்

ஸ்பேஸ்எக்ஸ் [SpaceX], சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு சிப் மூலம் உறுப்புகளை அனுப்பத் திட்டம்

  • விண்வெளி பயண மனிதர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவுவதற்காக, வாழும் மனித உயிரணுக்களோடு இணைக்கப்பட்ட மைக்ரோசிப்கள் அல்லது ஒரு சிப்பில் உறுப்புகள் உட்பொதிக்கப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
  • சிறுநீரகங்கள், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள், இரத்த-மூளைத் தடுப்பு மற்றும் நுரையீரல் திசு மாதிரிகள் கொண்ட ஒரு சிப் அடுத்த சில நாட்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

நிதி ஆணையத்தின் ஆலோசனைக் குழுவின் புதிய உறுப்பினர்

  • இந்திய அரசின் பிரதான பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இவர் கவுன்சிலின் பன்னிரண்டாவது உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

அலி அலியெவ் மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்  

  • ரஷ்யாவின் கஸ்பீஸ்கில் நடைபெற்ற அலி அலியெவ் மல்யுத்தப் போட்டியில் ஆண்கள் 65கிலோ ஃப்ரீஸ்டைல் ​​இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான பஜ்ரங் புனியா விக்டர் ரஸ்ஸாடினை வீழ்த்தி தங்கம் வென்றார். அலி அலியெவ் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி

  • ஆக்லாந்தில் நடைபெறும் நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஜப்பானின் கான்ட்டா டிசுனேலயமா இந்தியாவின் எச்எஸ் பிரனோய் வீழ்ந்தார்.

PDF Download

Daily Current Affairs – May 04 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!