நடப்பு நிகழ்வுகள் – மே 22, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 22, 2019

முக்கியமான நாட்கள்

மே 22 – உயிரியல் பல்வகைமைக்கான சர்வதேச நாள்
  • ஐக்கிய நாடுகள் சபை மே 22 அன்று பல்வேறு பல்லுயிரிய விவகாரங்களை புரிந்துகொள்ள மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உயிரியல் பல்வகைமைக்கான சர்வதேச தினத்தை (IDB)  அறிவித்துள்ளது.
  • 2019 தீம் – Our Biodiversity, Our Food, Our Health

தேசிய செய்திகள்

புது தில்லி
தேர்தல் ஆணையம் நிர்வாச்சன் சதானில் 24 மணிநேர EVM கட்டுப்பாட்டு அறையை நிறுவியது
  • புது தில்லியில் உள்ள நிர்வாச்சன் சதானில் 24 மணி நேர EVM கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்தல் ஆணையம் நிறுவியுள்ளது. இது EVM க்கள் தொடர்பான புகார்களை கண்காணிக்கும்.

சர்வதேச செய்திகள்

ஜோகோ விடோதோ இரண்டாவது முறையாக இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • இந்தோனேசியாவின் ஓய்வுபெற்ற தளபதியான பிரபபோவோ சுபியாண்டோவை தோற்கடித்து ஜோகோ விடோதோ நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செர்பியாவில் சட்டமியற்றுபவர்கள் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை  அறிமுகப்படுத்துவதற்கு தண்டனைக் குறியீட்டை சீர்திருத்தியுள்ளனர்
  • செர்பியாவில், சட்டமியற்றுபவர்கள் ஐரோப்பா கவுன்சில் தெரிவித்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்துவதற்கு தண்டனைக் குறியீட்டை சீர்திருத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர முற்படுகின்ற  செர்பியாவில் தற்போது வரை அதிகபட்ச தண்டனை  40 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகும்.
இந்தியாவிற்கான உயர் ஆணையராக மொய்னுல் ஹக் -ஐ பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது
  • இந்தியாவிற்கான உயர் ஆணையராக தற்போதையய பிரான்ஸ் தூதரக உள்ள மொய்னுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் பாகிஸ்தான் அரசின்  வெளியுறவு துறை நெறிமுறைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விண்வெளி அறிவியல்

PSLV-C46 ராக்கெட் மூலம் RISAT-2B செயற்கைக்கோள்   வெற்றிகரமாக விண்ணில் செலுத்தபட்டது .
  • ஆந்திரப் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி தளத்திலிருந்து PSLV-C46 ராக்கெட்டின் மூலம் RISAT-2B செயற்கைகோள்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட்து .ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிதளத்தில் இருந்து ஏவப்படும் 72வது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • சுமார் 615 கிலோ எடைக்கு கொண்ட RISAT-2B ராடார் செயற்கைகோள் பூமியை துல்லியமாக படம் பிடிப்பதற்கும், விவசாயம், காடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளின் வளர்ச்சிக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது

வணிகம் & பொருளாதாரம்

ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க உள்ளது
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவானது  ஒரு சிறப்பு மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. வணிக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில் அந்தக் குழு உருவாக்கப்படவுள்ளது.
உயர்-கமிட்டி கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்தது
  • கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான இந்தியாவின் சார்பை குறைப்பதற்காக மத்திய அரசின் உயர் மட்ட குழு அதன் பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. டாக்டர் அனில் ககோத்கர், சிறந்த விஞ்ஞானி மற்றும் சிதார்த் பிரதான், நிதி மற்றும் வரி விவகாரங்களில் நிபுணர் இந்த உயர்மட்ட குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

மாநாடுகள்

SCO வெளியுறவுத் துறை மந்திரிகள் கிர்கிஸ்தான், பிஷ்கேக்கில் சந்திக்கின்றனர்
  • வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் கிர்கிஸ்தான், பிஷ்கேக்கில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) வெளியுறவுத் துறை மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் .இந்த கூட்டம் சர்வதேச மற்றும் பிராந்திய முக்கியத்துவத்தின் மேற்பார்வை பிரச்சினைகளைக் குறித்து பரிமாற்றம் செய்யும் வகையில் உள்ளது.
  • இந்தியா SCO இல் முழு உறுப்பினரான பிறகு பங்கேற்கும் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தின் இரண்டாவது குழு இதுவாகும்.

விருதுகள்

மேன் புக்கர் சர்வதேச பரிசு
  • .ஓமன் நாட்டை சேர்ந்த ஜோகா அல்-ஹரத்தி (Jokha Alharthi) என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ் (Celestial Bodies) என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த கதை ஒரு பாலைவன நாட்டைச் சேர்ந்த மூன்று சகோதரிகளின் உரிமை மற்றும் சிக்கலை மையமாக கொண்டது.
ஷியாம் சரனுக்கு  ஜப்பானிய விருது
  • ஜப்பான் அரசாங்கம் 72 வயதான சரனுக்கு ‘ஆர்டர் ஆப் த ரைசிங் சன், கோல்ட் அண்ட் சில்வர் ஸ்டார்ட் என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. 2004-2006 காலப்பகுதியில் இந்தியாவின் வெளியுறவு செயலாளராக இருந்த சரண், ஜப்பான்-இந்தியா உறவுகளை உயர்த்துவதற்கான ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

பி.சி.சி.ஐ. தேர்தல் அக்டோபர் 22 அன்று நடக்கவுள்ளது
  • அக்டோபர் 22 ஆம் தேதி பி.சி.சி.ஐ. தேர்தல் நடைபெறும் என்று நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அமிகஸ் குறியேவவாக நியமித்த பி.எஸ். நரசிம்ஹா அவர்களின் ஆலோசனையின் படி இந்த தேர்தல் தேதியை நிர்வாகிகள் குழு அறிவித்துள்ளது.

Download PDF

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!