நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 28, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 28, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019 

தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றும் ஆலை
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் டெஹ்ராடூனில் பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றும் ஆலை ஒன்றை திறந்து வைத்தனர். இந்த ஆலை இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது, அதன் விஞ்ஞானிகள் கழிவு பிளாஸ்டிக்குகளை எரிபொருளாக பதப்படுத்துவார்கள். இந்த ஆலை ஒரு டன் பிளாஸ்டிக்கிலிருந்து 800 லிட்டர் டீசலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

அருண் ஜெட்ல்லி ஸ்டேடீயும்
  • டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம் அருண் ஜெட்லி ஸ்டேடியம் என்று  பெயர் மாற்றப்படவுள்ளது. டி.டி.சி.ஏ-வில் தனது பதவிக் காலத்தில், உலகத் தரம் வாய்ந்த ஆடை அறைகள் மற்றும் அதிக ரசிகர்கள் அமரும் வசதிகள்அமைத்து ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தை நவீன வசதியாக புதுப்பித்த பெருமைக்குரியவர் அருண் ஜெட்லி ஆவார்.

சர்வதேச செய்திகள்

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து  இந்தியாவின் சிலிகுரி வரை பஸ் சேவை தொடங்கியது
  • நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுக்கும் மேற்கு வங்காளத்தின் இந்தியாவின் சிலிகுரிக்கும் இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் ரகுபீர் மகாசேத் மற்றும் இந்திய தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் காத்மாண்டுவிலிருந்து பேருந்தை கோடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
காசி நஸ்ருல் இஸ்லாமின்  43 வது நினைவு தினம் பங்களாதேஷில் அனுசரிக்கப்பட்டது
  • கிளர்ச்சிக் கவிஞரான காசி நஸ்ருல் இஸ்லாமின் 43 வது நினைவு தினம் ஆகஸ்ட் 27 அன்று பங்களாதேஷில் அனுசரிக்கப்பட்டது. கிளர்ச்சி கவிஞர் அல்லது பித்ரோஹி கோபி என்றழைக்கப்படும் நஸ்ருல் கிட்டத்தட்ட 3000 பாடல்களை எழுதி, அவற்றில் பலவற்றை இயக்கியுள்ளார், அவை அணைத்தும் நஸ்ருல் கீதி என்று அழைக்கப்படுகின்றது. அவரது கவிதைகள் பங்களாதேஷின் விடுதலைப் போரின் போது மக்களுக்கு  பெரிய தூண்டுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அறிவியல்

விழுப்புரம் மாவட்டத்தில் அரிய ஸ்பைடர்
  • பொதுவாக மயில் பாராசூட் ஸ்பைடர் அல்லது கூட்டி டரான்டுலா என அழைக்கப்படும் போய்சிலோதெரியா இனத்தைச் சேர்ந்த அரிய வகை சிலந்தி புதுச்சேரியை தளமாகக் கொண்ட சுதேசிய பல்லுயிர் அறக்கட்டளை (ஐ.பி.எஃப்) ஆராய்ச்சியாளர்களின் குழுவினரால் விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சியின்  அருகிலுள்ள பக்கமலை ரிசர்வ் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

செயலி & இனைய போர்டல்

தேசிய நினைவுச்சின்ன அதிகாரசபைக்கான என்ஓசி ஆன்லைன் விண்ணப்ப செயலாக்க அமைப்பு
  • புது தில்லியில் ஆறு மாநிலங்களின் 517 உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேசிய நினைவுச்சின்ன ஆணையத்திற்கான ஒருங்கிணைந்த என்.ஓ.சி ஆன்லைன் விண்ணப்ப செயலாக்க முறையை கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  ஸ்ரீ பிரஹ்லாத் சிங் படேல் தொடங்கினார். ஏஎஸ்ஐ யின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் தடைசெய்யப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் கட்டுமான தொடர்பான பணிகளுக்கு என்ஓசி கோரும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய இது உதவும்.
மொபைல் பயன்பாடு- “ஜனஅவ்ஷதி சுகம் தொடங்கப்பட்டது
  • மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் ஸ்ரீ டி.வி. சதானந்த கவுடா “ஜனஅவ்ஷதி சுகம்” என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார், மேலும் “ஜனஅவ்ஷதி சுவிதா ஆக்ஸோ-பயோடீகிரேடபிள் சானிட்டரி நாப்கின்” ஒரு பேட் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் என்று அறிவித்திருந்தார். ஜனஅவ்ஷதி சுகம் மொபைல் பயன்பாட்டின் மூலம் மக்கள் ஜனஅவ்ஷதி பொதுவான மருந்துகள் மற்றும் கடைகளை நொடி பொழுதில் தேட முடியும்.

மாநாடுகள்

பாலைவனமாதலை எதிர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  COP14 ஐ இந்தியா நடத்த உள்ளது
  • அடுத்த மாதம் 2 முதல் 13 ஆம் தேதி வரை பாலைவனமாதலை எதிர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடான சிஓபி 14 ஐ இந்தியா நடத்த உள்ளது. புதுடில்லியில் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 10 ஆண்டுகளில் 50 லட்சம் ஹெக்டேர் அழிந்த நிலங்களை வளமாக்கவும்  மேலும் டெஹ்ராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு சிறப்பான மையம் அமைக்கவும்  அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்றார்.

விருதுகள்

டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருது 2018
  • இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் சாகசத் துறைகளில் தனிநபர்களின் சாதனைகளை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது லேண்ட் அட்வென்ச்சர், வாட்டர் அட்வென்ச்சர், ஏர் அட்வென்ச்சர் மற்றும் லைஃப் டைம் சாதனை என நான்கு பிரிவுகளாக வழங்கப்படுகிறது.
  • அபர்ணா குமார், மறைந்த ஸ்ரீ தீபங்கர் கோஷ், ஸ்ரீ மணிகண்டன் கே.ஆகியோருக்கு லேண்ட் அட்வென்ச்சர் ,ஸ்ரீ பிரபாத் ராஜு கோலிக்கு  வாட்டர் அட்வென்ச்சர் , ஸ்ரீ ராமேஷ்வர்ஜங்ராவுக்கு மற்றும் ஏர் அட்வென்ச்சர் விருதும் மற்றும் ஸ்ரீ வாங்சுக் ஷெர்பாவுக்கு லைஃப் டைம் சாதனையாளர்விருதும்  வழங்கப்பட்டது .

தரவரிசை & குறியீடுகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை
  • துபாயில் வெளியான சமீபத்திய ஐ.சி.சி கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முன்னிலை வகித்தார்,அவருக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்தையும், இந்தியாவின் சேடேஷ்வர் புஜாரா நான்காவது இடத்தையும் பிடித்தனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் முறை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார்.

விளையாட்டு செய்திகள்

வேர்ல்ட்ஸ்கில்ஸ் கசான் போட்டியில் இந்தியா நான்கு பதக்கங்களைப் வென்றது
  • ரஷ்யாவில் நடைபெற்ற 45 வது உலக ஸ்கில்ஸ் கசான் 2019 போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. எஸ் அஸ்வதா நாராயணா நீர் தொழில்நுட்பத்தில் தங்கப்பதக்கமும்,பிரணவ் நூட்டலபதி வலை தொழில்நுட்பங்களில் வெள்ளிப் பதக்கமும், நகை மற்றும் கிராஃபிக் டிசைன் தொழில்நுட்பத்தில் சஞ்சோய் பிரமானிக் மற்றும் ஸ்வேதா ரத்தன்புரா தலா ஒரு வெண்கலப் பதக்கம் என்று மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றனர்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!