நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 30 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 30 2019

சர்வதேச செய்திகள்

இந்தோனேஷியா ஜகர்த்தாவிலிருந்து தலைநகரத்தை நகர்த்த திட்டமிட்டுள்ளது

  • இந்தோனேஷியா ஒரு புதிய தலைநகரத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் நகரம் மூழ்கி வரும் பிரச்சனை ஆகியவற்றால் போராடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாசீனாவின் பார்மா அணி சந்திப்பு

  • அடுத்த மாதம் பெய்ஜிங்கில் திட்டமிடப்பட்ட சீனாவுடனான, மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முதல் கூட்டத்தில் இந்தியா ஒரு உயர் மட்ட குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

கம்போடியாவில் ஆங் சான் சூ கீ

  • மியன்மார் சிவிலியன் தலைவர் ஆங் சான் சூ கீ கம்போடியாவுக்கு முதல் அதிகாரப்பூர்வ பயணம் வருகிறார். கம்போடியாவிற்கு மூன்று நாள் பயணமாக வருகிறார்.

அறிவியல் செய்திகள்

காலநிலைஎதிர்ப்பு கொண்டைக்கடலை இனங்களின் மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

  • ஹைதராபாத்தைச் சார்ந்த செமி-அரிட் டிராபிக்ஸ்க்கான (ICRISAT) சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் தலைமையிலான ஒரு சர்வதேச குழு, கொண்டைக்கடலை இனங்களில் வெப்பநிலை சகிப்பு தன்மை கொண்ட நான்கு முக்கியமான மரபணு மற்றும் வறட்சி சகிப்பு தன்மை கொண்ட  மூன்று முக்கியமான மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

இந்திய விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து 11.6% அதிகரித்து 34.4 கோடியாக உள்ளது

  • 2018-2019ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த விமானநிலையங்களில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை4 கோடியாகும். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.6% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என விமான நிலைய அதிகாரசபை (ஏஏஐ) தரவுப்படி தெரிவித்துள்ளது.

மாநாடுகள்

நீர்வள வேலைகளில் தொழில்நுட்ப நெசவுகளைப் பயன்படுத்துதல்கருத்தரங்கு

  • புது டில்லியில் நீர்வள ஆதாரங்கள், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிர் அமைச்சகம், நீர்வள வேலைகளில் தொழில்நுட்ப நெசவுகளைப் பயன்படுத்துதல்’ தொடர்பான ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கை ஏற்பாடு செய்யதுள்ளது. இந்த கருத்தரங்கில் CWC தலைவரான ஸ்ரீ மசூத் ஹுசைன் தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு செய்திகள்

மே மாதம் இந்தியாவில் பாதுகாப்பு சைபர் ஏஜென்சி அமைக்கப்பட உள்ளது

  • தலைநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு அடுத்த மாதம், பாதுகாப்பு சைபர் ஏஜென்சி (டி.சி.ஏ) அமைக்கப்பட உள்ளது. மூத்த கடற்படை அலுவலக ரியர் அட்மிரல் மோஹித் குப்தா DCA இன் முதல் தலைவராக பதவி வகிக்க உள்ளார்.

விருதுகள்

PFA பிளேயர் ஆஃப் தி இயர் விருதுகள்

  • டச்சு நாட்டின் விர்ஜில் வான் டிஜிக் மற்றும் விவியானே மெய்டிமா ஆகியோர் 2018-19 ஆண்டிற்கான தொழில்முறை கால்பந்து வீரர்களின் சங்க விருதை பெற்றனர். ஆண்களுக்கான, ஆண்டின் சிறந்த இளம் வீரர் விருதை மான்செஸ்டர் சிட்டி அணியின் ஸ்டெர்லிங் வென்றார்.

கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பரிந்துரைக்கப்பட்டனர்

  • விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கும். இந்த விருதுகளுக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அந்தந்த விளையாட்டுத்துறை மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். அதன்படி இந்திய மல்யுத்த பெடரேசன் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

2024 உலக டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பம்

  • இந்தியாவின் டேபிள் டென்னிஸ் சம்மேளனம் (TTFI) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் 2024ம் ஆண்டிற்கான போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ளது. இதற்கு முன்பு 1987ல் இந்தியா ஒரு உலக சாம்பியன்ஷிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

PDF Download

Daily Current Affairs – April 30 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!