நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 05, 2018

0

நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 05, 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 5 – உலக ஆசிரியர்கள் தினம்

 • உலக ஆசிரியர்கள் தினம், சர்வதேச ஆசிரியர் தினமாகவும் அறியப்படுகிறது, அக்டோபர் 5 அன்று ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 1994 இல் நிறுவப்பட்டது, “உலகின் கல்வியாளர்களை பாராட்டுவது, மதிப்பிடுதல், மேம்படுத்துதல்” ஆகியவற்றை மையமாகக் கொண்டது.

அக்டோபர் 5 – உலக புன்னகை தினம்

 • உலக புன்னகை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வர்செஸ்டர், மாஸசூசெட்ஸில் இருந்த ஒரு வணிக ரீதியான கலைஞரான ஹார்வி பால் என்பவரால் தொடங்கப்பட்டது. உலகின் முதல் உலக புன்னகை தினம் 1999 ஆம் ஆண்டு நடைபெற்றது.

தேசிய செய்திகள்

அசாம்

அசாம் அரசு விவசாயிகளுக்கு 1 லட்சம் ஆழமற்ற குழாய்களை[டியூப்வெல்] வழங்க திட்டம்

 • அசாம் அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 1 லட்சம் ஆழமற்ற குழாய்களை[டியூப்வெல்] வழங்க திட்டமிட்டுள்ளது.

புது தில்லி

மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவில் மல்டிமீடியா கண்காட்சி

 • மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவில் ஒரு வாரகால மல்டிமீடியா கண்காட்சி புது தில்லியில் நடைபெறுகிறது.

உத்திரப்பிரதேசம்

இந்திய சர்வதேச அறிவியல் விழா

 • நான்கு நாள் இந்திய சர்வதேச அறிவியல் விழா (ஐஐஎஸ்எஃப்) 2018 உத்தரப் பிரதேசம் லக்னோவில் தொடங்கியது.
 • தீம்: – “Science for transformation”.

சர்வதேச செய்திகள்

சவுதி அரேபியாவின் உதவியுடன் பலூசிஸ்தானில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பாகிஸ்தான் திட்டம்

 • பாகிஸ்தான் தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக சவுதி அரேபியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதான பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய அமெரிக்கர்

 • சக்தி துறையின் அணுசக்திப் பிரிவின் தலைவராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முக்கிய இந்திய அமெரிக்க அணுசக்தி நிபுணரான ரீதா பரன்வால் பரிந்துரைக்கப்பட்டார்.

அறிவியல் செய்திகள்

கேரளம் மற்றும் தமிழ்நாட்டிற்கு IMD சிவப்பு எச்சரிக்கை விடுத்தது

 • அக்டோபர் 7 ம் தேதி கேரளம் மற்றும் தமிழ்நாட்டிற்கு IMD சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.

வணிகம் & பொருளாதாரம்

ரிசர்வ் வங்கி முக்கிய கட்டணங்களளை  மாறாமல் வைத்திருக்கிறது

 • இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5%லியே வைக்க முடிவு. ரிவர்ஸ் ரெபோ விகிதம் 6.25%. ரொக்க இருப்பு விகிதம் (CRR) 4% மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகும்.

தரவரிசை & குறியீடு

ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2018

1) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி [தொடர்ந்து 11 வது வருடம்]

2) விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி

3) ஆர்சலார் மிட்டல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மிட்டல்

மாநாடுகள்

இரண்டாவது IORA புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மந்திரிகள் கூட்டம்

 • இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தில்[IORA] உள்ள ஏறத்தாழ 21 நாடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
 • தில்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இரண்டாவது IORA புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மந்திரிகள் கூட்டத்தில் டெல்லி பிரகடனத்தை இந்த நாடுகள் ஏற்றுக்கொண்டன.

ரயில்வே மற்றும் மெட்ரோ திட்டங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச மாநாடு (IC-TRAM 2018)

 • புது தில்லியில் ரயில் மற்றும் மெட்ரோ திட்டங்களில் (IC-TRAM 2018) தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டை இரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சர் பியுஷ் கோயல் திறந்து வைத்தார்.

உறுப்புகளுக்கான கூட்டணி சுகாதார படை மாநாடு – அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு படி’

 • உறுப்புகளுக்கான கூட்டணி சுகாதார படை மாநாடு – அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு படி’யை அமைச்சர் எஸ்.எம்.டி. அனுப்ரியா படேல் துவக்கிவைத்தார்.

நியமனங்கள்

 • சஞ்சய் வர்மாஸ்பெயினுக்கான இந்தியா தூதர்
 • ஸ்ரீனிவாசன் கே. சுவாமிதலைவர் & சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAA) உலகத் தலைவர்

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் கஜகஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்க ஒப்புதல்

 • இந்தியா மற்றும் கஜகஸ்தான் பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல்.

இந்தியா, ரஷ்யா எஸ்-400 ஏவுகணை அமைப்பு மற்றும் எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்து

 • இந்தியா, ரஷ்யா இடையே 5.43 $ பில்லியன் மதிப்பில் ஏவுகணை, விண்வெளி, விவசாயம், அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு பற்றிய ஒப்பந்தங்களில் கையெழுத்து.

ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்து

 • மத்தியப் பிரதேசத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 110 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 816 கோடி) கடனுதவியில் பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்தின் (PMGSY) கீழ் 2,800 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செய்திகள்

சஹ்யோக் [Sahyog HOP TAC-2018] பயிற்சி

 • இந்தியா மற்றும் வியட்நாம் கடலோரக் காவலர்கள் இணைந்து சஹ்யோக்[Sahyog HOP TAC-2018] பயிற்சி – அவர்களுக்கு இடையேயான பணிநிலை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டு சென்னையில் நடந்தது.

விருதுகள்

 • அமைதிக்கான நோபல் பரிசு – காங்கோ டாக்டர் டெனிஸ் முக்விகே, யாஜிடி உரிமை ஆர்வலர் நாடியா முராட் [போர் மற்றும் ஆயுத மோதலின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு]
 • டாக்டர் ராமினேனி ஃபவுண்டேஷன் மூலம் 2018 ‘விசிஷ்ட புரஸ்காரம் – பேட்மின்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்

விளையாட்டு செய்திகள்

36 வது தேசிய விளையாட்டு

 • கோவாவில் 36 வது தேசிய விளையாட்டு 2019ல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 14 வரை நடைபெறும்.

U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட்

 • டாக்காவில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நுழைந்தது.

இளம் வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர்

 • சச்சின் டெண்டுல்கருக்குப்பின் டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்று சாதனை படைத்தார் பிருத்வி ஷா.

விரைவாக 24 டெஸ்ட் சதத்தை எடுத்த கிரிக்கெட் வீரர்

 • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து டொனால்ட் பிராட்மேனிற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 24 சதங்களை அடித்து இந்தியாவின் கேப்டன் விராட் கோஹ்லி சாதனை.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here