நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 24, 2018

0

நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 24, 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம்

 • இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி மற்றும் பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு சபையே ஐக்கிய நாடுகள் சபை. ஐ.நாவின் பொதுசபை (General Assembly) நியூயார்க்கில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை10.1945 உருவாக்கப்பட்டது.

அக்டோபர் 24 – உலக அபிவிருத்தி தகவல் தினம்

 • ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உலக அபிவிருத்த தகவல் தினமானது அக்டோபர் 24 ம் தேதி உலக அபிவிருத்திக்கான பிரச்சனைகளுக்கு உலகளாவிய பொது அபிப்பிராயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கும், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அவற்றை தீர்க்கவும் அனுசரிக்கப்படுகிறது.

அக்டோபர் 24 – உலக போலியோ தினம் 2018

 • உலகளாவிய போலியோ தினம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் போலியோ அழிக்கப்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உலக சுகாதார அமைப்பின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் முயற்சி, ஒழிப்புக்கு உறுதியளித்த மற்ற தொண்டர்களின் பங்களிப்புக்காக அனுசரிக்கப்படுகிறது. உலக போலியோ தினம் தீம் 2018 – “End Polio Now”.

தேசிய செய்திகள்

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் என்ஜின் இல்லா ரயில்

 • இந்தியாவின் முதல் என்ஜின் இல்லா ரயில் 18, 30 ஆண்டுகளான சதாப்தி எக்ஸ்ப்ரஸுக்கு அடுத்தபடியாக இது கருதப்படுகிறது, இது அக்டோபர் 29 ல் சோதனை ஓட்டத்திற்கு தயார் ஆகிவருகிறது. ரயில் 18, 16-பெட்டி முன்மாதிரி, 18 மாதங்களில் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை ஐசிஎப் பில் தயார் செய்யப்பட்டது.

கோவா

கோவா, 1867 போர்த்துகீசிய சிவில் குறியீட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பெற்றது

 • கோவாவில் 1867 ஆம் ஆண்டின் போர்த்துகீசிய சிவில் குறியீட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இப்போது அதிகாரப்பூர்வ அரசிதழில் கிடைக்கிறது.

புது தில்லி

பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லையைக் கையாளவும், தடுக்கவும் ஆராயவும் மத்திய அரசு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது

 • பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லையைக் கையாளவும், தடுக்கவும் தற்போதுள்ள சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை ஆராயவும், மத்திய அரசு (24.10.2018) அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு தற்போதுள்ள விதிமுறைகளை சிறப்பாக அமல்படுத்துவதற்கும், பணியிடங்களில் பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்ய சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தேவையான செயல்பாட்டுக்கு பரிந்துரைகளை அளிக்கும்.

சர்வதேச செய்திகள்

நேபாளம் காத்மாண்டுவில் மின் பஸ் சேவையை தொடங்கியது

 • நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் கே.பி.சர்மா ஓலி, நிலங்களால் சூழப்பட்ட நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க இத்தகைய வாகனங்கள் செயல்படுவதை வலியுறுத்தியுள்ளார்.

நீர், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி துபாயில் தொடங்குகிறது

 • இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் முன்னணி நிலைத்தன்மை கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. WETX 2018 இல் இந்தியா பெவிலியன், இந்தியாவின் துணைத் தூதரகம், துபாய் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன், தொழில்துறை, சுத்தமான தண்ணீர், மின்சாரம் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றிற்காக பிரதமர் நரேந்திர மோடியின் நிலையான மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன் இணக்கமாக உள்ளது.

அறிவியல் செய்திகள்

இந்திய பருவமழை அட்லாண்டிக் சூறாவளிகளை அதிகரிக்கிறது

 • இந்தியப் பெருங்கடலில் உருவாகும் வலுவான பருவ மழையால் ஈஸ்டர்லி விண்ட் அட்லாண்டிக் பெருங்கடலின் சூறாவளிகளை மேற்கு நோக்கி தள்ளி அது அமெரிக்காவில் தாக்கத்தை ஏற்படுத்த சாத்தியம் என ஒரு ஆய்வு கூறுகிறது.

வணிகம் & பொருளாதாரம்

இணைய திருட்டிற்கு விரைவாக தீர்வு காண ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு வலியுறுத்தல்

 • இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.பி.ஐ இணைய திருட்டிற்கு விரைவாக தீர்வு காண வங்கிகளுக்கு வலியுறுத்தல். விரைவாக மீட்டெடுப்பதை உறுதிப்படுத்தவும் ஒரு நெறிமுறையைப் பெற வங்கிகளைக் கேட்டுக் கொண்டது. சமீப காலத்தில் இந்திய வங்கிகளைக் குறிவைத்து நடக்கும் பல இணைய திருட்டு முயற்சியின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநாடுகள்

உலக விவசாய தலைமை உச்சி மாநாடு 2018

 • உலக விவசாய தலைமை உச்சி மாநாடு 2018 புது டெல்லியில் தொடங்கப்பட்டது . உலக விவசாய தலைமை உச்சிமாநாட்டின் தீம் – Connecting Farmers to Market’.

நியமனங்கள்

 • இடைக்கால சிபிஐ இயக்குநர் – எம். நாகேஷ்வர் ராவ்
 • டிவிஎஸ் மோட்டார் தலைமை நிர்வாக அதிகாரி – என். ராதாகிருஷ்ணன்

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் மலாவி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • பயங்கரவாதிகள், பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இந்தியாவில் இருந்து மலாவிக்கும் மலாவியில் இருந்து இந்தியாவிற்கும் திருப்பி அனுப்புவது குறித்த சட்டக் கட்டமைப்பை உருவாக்க இந்த ஒப்பந்தம் வழங்கும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 • அரசு தனியார் பங்களிப்பு மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் தேவை மற்றும் உட்கட்டமைப்பு வசதி அடிப்படையில் இந்திய திறன் நிறுவனத்தை மேம்படுத்தும் வாய்ப்புகள் ஆராயப்படும்.

பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் (24.10.2018) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சுற்றுசுழல், சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியா – சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • இந்தியா – சிங்கப்பூர் இடையே நிதி சார்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய – ஆப்கானிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • “ஆப்கானிஸ்தான் கணக்கியல் வாரியத்தின்” திறன் கட்டமைப்பில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுத்துவதையும், அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் ஐ.டி திறன் மற்றும் தரத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதையும், மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பரிமாற்றத்தையும், பரஸ்பரம் பயனளிக்கும் கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டு செயல்பாடுகளையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலைநிறுத்தும்.

தாய்பெய் – இந்தியா இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்

 • தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • இரு தரப்பு முதலீடுகளை ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தாய்பெய் கழகம் மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான பரஸ்பர முதலீடுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

விருதுகள்

 • 2018ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசு – பிரதமர் நரேந்திர மோடியின் சர்வதேச பங்களிப்பு மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியையில் அவரது பங்கிற்காக 2018 ம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
 • சியோலில் நடைபெற்ற 24 வது ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் 1990 ஆம் ஆண்டு சியோலின் அமைதிக்கான பரிசு முதல் முறையாக வழங்கப்பட்டது..

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலி

 • “மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் துவக்கிவைத்தார். “பொதுசேவையில் நான்” என்ற மையப்பொருளுடன் செயல்படவிருக்கும் இந்த இணையப்பக்கம் தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஈடுபட்டிருப்போர் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் முயற்சிகளை சமூக நோக்கங்கள், சமூக சேவை என்ற ஒரே தளத்திற்கு கொண்டுவர உதவும்.

விளையாட்டு செய்திகள்

விராட் கோலி ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை

 • இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையாக இருந்தது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here