நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 13, 2018

0

நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 13, 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 13 – உலக பேரழிவு குறைப்பு தினம்

 • ஐநா பொதுச் சபை 1990 களை இயற்கை பேரழிவு குறைபாட்டிற்கான சர்வதேச தசாப்தமாக (IDNDR) அறிவித்தது.
 • நிலநடுக்கம், ஆழிப்பேரலை, வெள்ளம், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், வறட்சி, வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்குள்ளாகிற உயிரிழப்பு, சொத்து அழிவு மற்றும் சமூக மற்றும் பொருளாதார இடையூறுகள் போன்றவற்றின் இழப்பைக் குறைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

தேசிய செய்திகள்

கேரளம்

ரேகா நாயர் புதிய ஆர்.சி.சி. இயக்குனர்

 • மாநிலத்தின் புற்றுநோய் மையத்தில் நோய்க்குறியியல் கூடுதல் பேராசிரியர் ரேகா நாயர், நிறுவனத்தின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • மாநிலத்தின் பழமையான மற்றும் பிரதானமான புற்றுநோய் சிகிச்சை மையத்தின்[ஆர்.சி.சி] தலைவராகும் முதல் பெண், டாக்டர் ரேகா நாயர்.

மேகாலயா

ஜவுளி அமைச்சகம் ஜவுளி சுற்றுலா வளாகத்தை கட்டமைக்க திட்டம்

 • மேகாலயாவின் ரிபோய்-மாவட்டத்தின் நொங்போவில் ஜவுளித் துறை சுற்றுலா வளாகம் அமைக்க ஜவுளி அமைச்சகம்8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஜவுளித் துறை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்தார்.

மகாராஷ்டிரம்

இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி மறைந்தார்

 • அன்னபூர்ணா தேவி, புகழ்பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் 91 வயதில் மறைந்தார்.
 • அன்னபூர்ணா தேவி ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் இந்திய சுர்பாகர் வாசிப்பாளர் ஆவார். இவர் அலாவுதீன் கானின் மகள் மற்றும் சீடர் ஆவார். அவர் சிதார் மேஸ்ட்ரோ பண்டிட் ரவி ஷங்கருடன் திருமணம் செய்து கொண்டார்.

ராஜஸ்தான்

ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவுகிறது

 • இதுவரை ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் எனும் கொடிய நோயால் 50 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.
 • பிரதம மந்திரி அலுவலகம் (பிஎம்ஓ) ஜிகா வைரஸ் பாதிப்பைப்பற்றி சுகாதார அமைச்சகத்தின் விரிவான அறிக்கை ஒன்றைக் கோரிய சில நாட்களுக்குப் பிறகு இந்த பாதிப்பு வந்துள்ளது.

சர்வதேச செய்திகள்

.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வெற்றி பெற்றது

 • 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட மனித உரிமை அமைப்புக்கான ஆசியா-பசிபிக் பிரிவில் 188 வாக்குகள் பெற்று, அனைவரையும் விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது இந்தியா.
 • ஆசியா பசிபிக் பிரிவில் இந்தியா 188 வாக்குகளும், பிஜி 187 வாக்குகளும், பங்களாதேஷ் 178, பஹ்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் 165 வாக்குகளும் பெற்றுள்ளன.

சூறாவளி லெஸ்லி ஸ்பெயின் போர்ச்சுகல் நோக்கிச் செல்கிறது

 • சூறாவளி லெஸ்லி போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினை நோக்கி செல்கிறது, இது ஐபீரிய தீபகற்பத்தின் சில பகுதிகளில் கணிசமான மழையையும் ஆபத்தான காற்றையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிக நீண்ட விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது

 • சிங்கப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 18 மணி நேர பயணம் செய்து ​​நியூயார்க்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்து, உலகின் மிக நீண்ட வணிக விமானம் எனும் சாதனை படைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட இந்த பாதையில் மீண்டும் இந்த பயணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் செய்திகள்

இந்தியர்கள் மரபணுக்களை வரிசைபடுத்தத் திட்டம்

 • சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், ‘தனிப்பயனாக்கப்பட்ட மருந்தை வடிவமைக்கவும் உலகளாவிய அளவில் இந்தியர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்துவதற்கு இந்தியா ஒரு பெரிய பணியைத் திட்டமிட்டுள்ளது.
 • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் உயிர் தொழில்நுட்பத்துறையின் கீழ் இந்த திட்டம் செயல்படும்.

வணிகம் & பொருளாதாரம்

ஸ்பைஸ்ஜெட் விரைவில் விமானங்களில் WiFi வசதியை வழங்கத்திட்டம்

 • ஸ்பைஸ் ஜெட் அதன் பயணிகள் இணையத்தளத்தை பயன்படுத்த அதன் விமானத்தில் WiFi வசதியை வழங்கத்திட்டம். ஏர்லைன் சிஎம்டி அஜய் சிங் தனது முதல் போயிங் 737 MAX 8 விமானத்தை அறிமுகப்படுத்தும் ஒரு விழாவில் இதை அறிவித்தார், இது செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சாதனத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செய்திகள்

இராணுவ தளபதிகள் மாநாடு

 • அக்டோபர் மாதம் 09-15ம் தேதி 2018 ஆம் ஆண்டு ஆண்டுக்கு இருமுறை நிகழ்கிற உச்சநிலை நிகழ்வு, பேச்சுவார்த்தைகள் மூலம் முக்கியமான கொள்கை முடிவுகளை உருவாக்குகிற இராணுவத் தளபதிகள் மாநாடு புது தில்லியில் நடைபெறவுள்ளது.

விருதுகள்

இளம் கண்டுபிடிப்பாளர் விருது

 • ஹைதராபாதில் இருந்து இளம் சமூக கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜவ்வாத் கிஜார் பட்டேல் இந்திய அரசாங்கத்தால் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய இளைஞர் விருதினைப் பெற்றார்.
 • பெல்காமின் சந்தோஷ் காவேரி விவசாய துறையில் தனது பங்களிப்புக்காக இவ்விருதினை பெற்றார்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

நம்பகமான இரயில் தரவை வழங்க ஆண்ட்ராய்டு செயலிரயில் பார்ட்னர்

 • ‘இரயில் பார்ட்னர்’ எனும் ஆண்ட்ராய்டு செயலி இந்திய இரயில்வேக்கு, தெற்கு இரயில்வேயின் வர்த்தகத் துறையின் பயணிகள் சந்தைப்படுத்தல் பிரிவின் மூலம் தகவல் மற்றும் சேவைகளின் ஒரு வரிசை வழங்குகிறது மற்றும் பயணிகள் மற்றும் இரயில்வேகளுக்கிடையில் நேரடியான தகவல் தொடர்பு ஊடகமாக செயல்படுகிறது.
 • ‘ரெயிட் பார்ட்னர்’ நேரடி அழைப்பு வசதிகளை 20 மிக தேவையான ஹெல்ப்லைன் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

விளையாட்டு செய்திகள்

நவம்பர் 10 ம் தேதி நேரு டிராபி படகு போட்டி நடைபெறுகிறது

 • கேரளாவின் புகழ்பெற்ற நேரு டிராபி படகு போட்டிகள் நவம்பர் 10 ம் தேதி ஆலப்புழாவின் குட்டநாட்டில் நடைபெறும்.
 • கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப்போட்டி இரண்டு மாதங்கள் தாமதமாகி விட்டன.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

 • ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் இந்தோனேசியாவின் உகுன் ருகெண்டியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 • ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் இந்தியாவின் தருண் சீனாவின் யுயாங் காவோவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.

இளைஞர் ஒலிம்பிக்ஸ்

 • இளைஞர் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் சீனாவின் லீ ஷிஃபெங்கிடம் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரரான லக்ஷியா சென் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 • இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜூடோக்கா தபாபி தேவிக்குப் பின்னர் இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியராக மானு பேக்கர் சாதனை படைத்தார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here