நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 11 2018

0

நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 11 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 11 – சர்வதேச பெண் குழந்தை தினம்

 • சர்வதேச பெண் குழந்தை தினம் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பு தினமாகும்; இது பெண்கள் தினம் மற்றும் சர்வதேச பெண்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. 2018 தீம் – With Her: A Skilled Girl Force.

தேசிய செய்திகள்

அசாம்

புதிய ரோரோ வசதி

 • மஜூலி தீவு மாவட்டத்தில் அசாம் அரசுடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவின் உள்நாட்டு நீர்வழங்கல் ஆணையம் புதிய ரோ-ரோ வசதி ஒன்றை துவக்கியுள்ளது.
 • அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் ரோ-ரோ சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புது தில்லி

ஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு அமைப்பின் (OAMS) திறப்பு விழா

 • பாராளுமன்ற விவகாரத்துறை, புள்ளிவிவரம் மற்றும் நிகழ்ச்சித் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் விஜய் கோயெல், ஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு அமைப்பை (OAMS) திறந்துவைத்தார்.

நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையம்

 • பிரதமர் நரேந்திர மோடி, புது தில்லியில் நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையத்தின் துவக்கத்தை குறிப்பதற்கான நிகழ்வை அறிமுகப்படுத்தி, உரையாற்றினார்.

ஒடிசா

இரண்டாவது தலைமுறை (2 ஜி) எத்தனால் உயிர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்ககல் நாட்டல்

 • ஒடிசாவின் ஆளுநர் பேராசிரியர் கணேஷ் லால் அவர்களால் பர்கார் மாவட்டம் பாலசிங்கா கிராமத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் இரண்டாம் தலைமுறை (2 ஜி) எத்தனால் உயிர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

சர்வதேச செய்திகள்

மலேசியா அமைச்சரவை மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு

 • மலேசிய அமைச்சரவை மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு. கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு மலேசியாவில் மரண தண்டனை தற்போது கட்டாயமாக உள்ளது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் தலையிட்டு, அமெரிக்கா மற்றும் சீனாவை வர்த்தக விதிமுறைப்படி நடந்து கொள்ள வலியுறுத்தல்

 • உலகளாவிய பொருளாதாரத்திற்கு நீடித்த சேதத்தை செய்யக்கூடிய பெய்ஜிங்கின் தொழில்நுட்ப வளர்ச்சி மூலோபாயத்தின் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்கள் உலக வர்த்தக விதிகளை பின்பற்ற அமெரிக்க மற்றும் சீனாவை வலியுறுத்தல்.

கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

 • இலங்கை தீவின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றியது.

உலகின் மிகப்பெரிய மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது

 • உலகின் மிகப்பெரிய மீன் சந்தை 83 ஆண்டுகள் பழமையான ட்சுக்ஜீ [Tsukiji] சந்தை டோக்கியோவில் புதிய தளத்தில் மீண்டும் திறக்கிறது.

வணிகம் & பொருளாதாரம்

ஜெட் எரிபொருளுக்கு 14 சதவீதத்திலிருந்து கலால் வரி விலக்கு 11 சதவீதமாக குறைக்கப்பட்டது

 • விமான எரிபொருள் விலை உயர்வால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள, விமான எரிபொருளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சியில், தற்போதைய எரிபொருளுக்கான எரிபொருள் மீதான கலால் வரியை 11 சதவீதமாக குறைத்துள்ளது.

மாநாடுகள்   

மொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32வது உலக மாநாடு

 • ஹரியானாவிலுள்ள குருகிராமில் WUWM மொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32 வது உலக மாநாட்டை விவசாய மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் புரூஷோத்தம் ரூபல் திறந்து வைத்தார்.
 • முதல் தடவையாக இந்தியாவில் WUWM மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • தீம் – ‘The Wholesale Markets in the Digital Era: Challenges and Opportunities.’

சர்வதேச நீதிமன்றத்தின் சிறந்த நடைமுறைகள் பற்றிய ஒர்க்ஷாப்

 • நிதி ஆயோக் மற்றும் சர்வதேச ஐசிசி சர்வதேச நீதிமன்றம் இணைந்து புது தில்லியில் சர்வதேச நீதிமன்றத்தின் சிறந்த நடைமுறைகள் பற்றிய ஒர்க்ஷாப் ஒன்றை துவக்கியது.

தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டம்

 • ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேசத்திற்கு இடையே கடக்கவிருக்கும் டிட்லி சூறாவளிப் புயலால் ஏற்படும் சேதம் குறித்த புது தில்லியில் நடந்த தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு மந்திரி சபை செயலாளர் பி.கே.சின்ஹா ​ தலைமை தாங்கினார்.

பொது கணக்காளர்கள் மாநாடு

 • இந்தியக் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், புது தில்லியில் 29 வது பொது கணக்காளர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.

நியமனங்கள்

 • சச்சின் சதுர்வேதி, ரேவதி அய்யர்இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினர்கள்
 • அசிம் முனிர்பாகிஸ்தானின் புதிய ஐஎஸ்ஐ[ISI] தலைவர்

திட்டங்கள்

நிதி ஆயோக்கின் AIM & IBM இந்தியாவின் வேலைவாய்ப்புத் திட்டம்

 • நிதி ஆயோக் மற்றும் IBM அடல் கண்டுபிடிப்பு மிஷன் (AIM) முதல் முறையாக தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா லெபனான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • விவசாய மற்றும் அதன் கூட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியா ருமேனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் ருமேனியா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியா பின்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மீது இந்தியா மற்றும் பின்லாந்து இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்.

பாதுகாப்பு செய்திகள்

IFR இல் பங்கேற்க தென் கொரியா விரைந்தது INS ரானா

 • ஐ.என்.எஸ். ரானா சர்வதேச கப்பல் மதிப்பீட்டு ஆய்வில் (IFR) பங்கேற்க கொரியாவின் ஜிஜு, தென் கொரியா வந்து சேர்ந்தது.

32 இந்தியாஇந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சி (CORPAT)

 • இந்தியா-இந்தோனேசியா இடையேயான 32 வது வருடாந்திர ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி(IND-INDO ​​CORPAT)ல் பங்குபெற இந்திய கடற்படைக் கப்பல் குலிஷ் பெலாவன் துறைமுகம், இந்தோனேசியா வந்தடைந்தது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

ஏரோஇந்தியா[Aeroindia] 2019

 • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி 24ம் தேதி வரை பெங்களூரில் விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியா 2019 நடைபெறவுள்ளது. கண்காட்சி அமைப்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பதிவு செய்ய (https://aeroindia.gov.in) புதிய வலைதளம் அறிமுகம்.

விளையாட்டு செய்திகள்

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு

 • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றார்.

பாரா ஆசிய விளையாட்டு

 • சுந்தர் சிங் குர்ஜர் ஈட்டி எறிதல் ஆண்கள் F46 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்திய கால்பந்து அணி சீனா பயணம்

 • இந்திய கால்பந்து அணி 76 வது இடத்தில் இருக்கும் சீனாவிற்கு எதிராக சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க சீனா பயணம்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here