நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 23 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 23 2018

முக்கியமான நாட்கள்

குரு நானக் ஜெயந்தி

  • குரு நானக் ஜெயந்தி அல்லது குர்புராப் நாடெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் மத சடங்குகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் தேவின் பிறந்த நாளை இந்த நாள் குறிக்கிறது. இந்த ஆண்டு குரு நானக் தேவின் 549 வது பிறந்த நாளை குறிக்கிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குரு நானக் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய செய்திகள்

மகாராஷ்டிரம்

ஜய்தாபூர் அணுசக்தி ஆலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது

  • மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தின் ஜய்தாபூரில் 9900 மெகாவாட் அணு உலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டம் இந்தியா மற்றும் பிரான்ஸால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஒடிசா

கார்த்திகை பௌர்ணமி ஒடிசாவில் கொண்டாட்டம்

  • புனிதமான கார்த்திகை மாதத்தின் உச்சநிலையாக கார்த்திகை பௌர்ணமி ஒடிஷாவில் கொண்டாடப்படுகிறது.

பஞ்சாப்

2019ல்ஜாலியன்வாலா பாக் படுகொலையின்நூற்றாண்டு நினைவு அஞ்சலி

  • அடுத்த ஆண்டு 2019ல் வரலாற்று நிகழ்வான ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 100 ஆண்டு நினைவு பெற்றதை நினைவு கூற இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி (100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தினத்தன்று இச்சம்பவம் நடந்தது) நினைவுத்தபால் தலை வெளியிடப்பட உள்ளது. 

தமிழ்நாடு

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை காண ஏழு பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகை

  • தமிழ்நாட்டில் கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை கண்டு மதிப்பிட ஏழு பேர் கொண்ட உறுப்பினர் மத்திய குழு சென்னைக்கு வந்தது.

சர்வதேச செய்திகள்

பெய்ஜிங் மக்கள்தொகை 2 தசாப்தங்களில் முதல் முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது

  • சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கின் மக்கள் தொகை 2017ல் இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக வீழ்ச்சியடைந்தது.

.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு குழுவை வட கொரியாவிற்குள் அணுசக்தி ஆய்வாளர்களை அனுமதிக்க ஒப்புக் கொள்ளுமாறு கோரிக்கை

  • ஐ.நாவின் முன்னணி அணுசக்தி கண்காணிப்புக் குழுவான சர்வதேச அணுசக்தி ஏஜென்சி, ஐ.ஏ.இ.ஏ வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தை கண்காணிப்பதற்காக வட கொரியாவிற்குள் அணுசக்தி ஆய்வாளர்களை அனுமதிக்க ஒப்புக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

அறிவியல் செய்திகள்

44 புதிய நிலக்கரி தொகுதிகள் நான்கு கிழக்கு மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது

  • கிழக்கு இந்தியாவின் நான்கு மாநிலங்களில் 44 புதிய நிலக்கரித் தொகுதிகளை கண்டுபிடித்துள்ளதாக இந்தியாவின் புவியியல் ஆய்வு (GSI) தெரிவித்துள்ளது.

மாநாடுகள்

இருதரப்பு ஒத்துழைப்பு பற்றிய இந்தியாலாவோஸ் PDR கூட்டு ஆணையத்தின் 9 வது கூட்டம்

  • வியன்டியனில் நடைபெறும் இந்தியா-லாவோஸ் PDR கூட்டு ஆணையத்தின் 9 வது கூட்டத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அந்நாட்டின் சக அமைச்சர் சலேம்க்சே கொம்மாசித் கூட்டுத்தலைமை தாங்குகின்றனர்.

இந்தியாயுஏஇ மூலோபாய கூட்டமைப்பு

  • இந்த மாதம் 27 ம் தேதி இந்தியா-ஐக்கிய அரபு எமிரேடஸின் மூலோபாய கூட்டமைப்பின் இரண்டாம் பதிப்பு தலைநகர் அபுதாபியில் நடக்கவுள்ளது. இருதரப்பு முதலீடுகளின் பரவலை விரிவுபடுத்துவதற்கு இந்த நிகழ்வு வழிவகுக்கும்.

நியமனங்கள்

  • பாடகர் நஹீத் அப்ரின் – வடகிழக்கு பிராந்தியத்தின் முதல்இளைஞர் வழக்கறிஞர் [குழந்தைகள் உரிமைக்கு போராடியதற்காக யுனிசெப் வழங்கியது]

திட்டங்கள்

ஒரு குடும்பம் ஒரு வேலை திட்டம்

  • சிக்கிம் அரசாங்கம் ஒரு குடும்பம் ஒரு வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 17,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் உள்நாட்டு தங்க கவுன்சில்

  • இந்தியாவில் உள்நாட்டு தங்க கவுன்சில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. புதுடில்லியில் நடைபெற்ற இந்தியா தங்கம் மற்றும் ஆபரண உச்சிமாநாட்டின் 2 வது பதிப்பை திறந்து வைக்கும் போது வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இவ்வாறு கூறினார்.

விளையாட்டு செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கத்திற்கான இறுதிப்போட்டியில் மகளிர் 48 கிலோ எடை பிரிவில் எம்.சி மேரி கோம் மற்றும் 57 கிலோ எடை பிரிவில் சோனியா சஹால் ஆகியோர் விளையாட உள்ளனர்.

ஆஸ்திரேலியா Vs இந்தியா டி20

  • மெல்போர்னில் ஆஸ்திரேலியா Vs இந்தியா 2 வது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!