நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 14 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 14 2018

முக்கியமான நாட்கள்

நவம்பர் 14 – உலக நீரிழிவு தினம்

 • இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக 1991-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, கொண்டாடி வருகிறது.
 • சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையம் அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
 • உலக நீரிழிவு தினத்திற்கான தீம் 2018-19 Family and Diabetes.

நவம்பர் 14 – குழந்தைகள் தினம்

 • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் தினத்தை குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
 • குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர் நேரு. அதனால் அவரை குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என அழைத்தனர். இதனால் அவரின் நினைவாகவும், அவரின் விருப்பத்தின் பெயரில் அவரின் பிறந்த நாள் தினத்தை குழந்தைகள் தினம் என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டுகிறது.

தேசிய செய்திகள்

மேகாலயா

இந்தியா சர்வதேச செர்ரி ப்ளாசம் விழா துவக்கம்

 • இந்தியாவின் சர்வதேச செர்ரி பிளாஸம் விழாவின் மூன்றாவது பதிப்பு 2018 ஆம் ஆண்டு போலோ 5 வது மைதானம் ஷில்லாங்கில் நடந்தது. இது பல கலாச்சார நிகழ்வுகள் கொண்ட இமாலய செர்ரி மலர்களின் தனிப்பட்ட இலையுதிர் மலர்ச்சியை கொண்டாடுகிறது.

புது தில்லி

இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி

 • புது தில்லி பிரகதி மைதானத்தில் 38வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) நிகழ்ச்சியை கலாசார அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா திறந்துவைத்தார். இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் பார்ட்னர் நாடாகவும், நேபாளம் ஃபோகஸ் நாடாகவும் அறிவிப்பு.
 • இந்த ஆண்டின் தீம் – Rural Enterprises in India

சர்வதேச செய்திகள்

.நா. சபை கொண்டுவந்த மரண தண்டனை வரைவு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு

 • ஐ.நா. பொதுச் சபையின் 3-வது குழு சார்பில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ‘‘இந்தியாவில் மிகவும் அரிதாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 

அறிவியல் செய்திகள்

ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

 • ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 

வணிகம் & பொருளாதாரம்

போஸ் மூலம் மூவர்ணக் கொடி ஏற்றியதன் 75 வது ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்க 75 ரூபாய் நினைவு நாணயம் வெளியீடு

 • போர்ட் பிளேயரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றியதன் 75 வது ஆண்டு விழாவின் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது அரசு.

அமெரிக்க அரசு ஜவாத் நஸ்ரல்லாவை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது

 • லெபனான் தீவிரவாத குழுக்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மகனான ஜவாத் நஸ்ரல்லாவை, ஒரு உலகளாவிய பயங்கரவாதி என அமெரிக்க அரசு அறிவித்தது.

யுஏஇ 2வது வருடம் தொடர்ச்சியாக வைப்ரன்ட் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது

 • ‘வைப்ரன்ட் குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில்’ ஐக்கிய அரபு எமிரேட் பங்கேற்கிறது, இரண்டாவது ஆண்டு தொடர்ச்சியாக கூட்டணி நாடாக பங்கேற்பு. இந்த உச்சிமாநாடு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெறுகிறது.

மாநாடுகள்

உலக சுங்கக் குழுவின் பிராந்தியக் கூட்டம் ஜெய்ப்பூரில் துவங்கியது

 • ஆசியாவின் 33 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜெய்ப்பூரில் உலக சுங்க அமைப்பு நான்கு நாள் பிராந்தியக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் WCO துணை பொதுச்செயலாளர் ரிக்கார்டோ டிரவினோ மற்றும் மறைமுக வரிகளுக்கான மத்திய வாரியம், சுங்கத் தலைவர் எஸ்.ரமேஷ் ஆகியோரால் கூட்டாக தலைமை தாங்கப்பட்டது.

மத்திய மற்றும் மாநில அமைப்புகளின் 26வது பத்திரிகை தகவல் மாநாடு

 • இமாச்சல பிரதேசம் தர்மஷாலாவில் நவம்பர் 15-16, வரை மத்திய மற்றும் மாநில அமைப்புகளின் 26வது பத்திரிகை தகவல் மாநாடு (COCSSO) புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
 • இந்த ஆண்டு மாநாட்டின் தீம் “Quality Assurance in Official Statistics”.

பாதுகாப்பு செய்திகள்

இராணுவப்பயிற்சி  தர்ம கார்டியனின் நிறைவு விழா – 2018

 • இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானிய இராணுவம் அவர்களின் கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘தர்ம கார்டியன்’ – 2018 மிசோரத்தில் நிறைவடைந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்.

விளையாட்டு செய்திகள்

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் தொடக்கம்

 • 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
 • 2006-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்திய அணிக்கு மேரிகோம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!