நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 10,11 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 10,11 2019

தேசிய செய்திகள்

மத்தியப் பிரதேசம்

ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசு அவசரச் சட்டம்

  • மத்தியப் பிரதேச அரசு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி)க்கு தற்போது உள்ள 14% சதவீத இட ஒதுக்கீட்டை 27 சதவீதமாக உயர்த்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

நாகாலாந்து

நாகலாந்து முதல் சுற்று போலியோ தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது

  • நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட பல்ஸ் போலியோ திட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்தில் முதல் சுற்று போலியோ தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது. போலியோ ஒழிப்புக்காக போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்கு கீழ் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

புது தில்லி

பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு

  • நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று புதுதில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா அறிவித்தார்.
  • 17-வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார். ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு, மே மாதம் 19 ஆம் தேதியன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்.
  • ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் கூட்டாக வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தனர்

  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர், வங்கதேசத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம், மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைந்து துவக்கி வைத்தனர்.
  • வங்கதேசத்திற்கு பேருந்துகள் மற்றும் லாரிகள் வழங்குதல், 36 சமூக மருத்துவமனைகள், 11 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மற்றும் தேசிய அறிவு நெட்ஒர்க் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு இரு தலைவர்களும் அடிக்கல் நாட்டினார்கள்.

சர்வதேச செய்திகள்

மதத்தின் மீதான கொள்கைகளை விமர்சனம் செய்த அமெரிக்காவிற்கு சீனா எதிர்ப்பு

  • பெய்ஜிங்கின் முஸ்லிம் மற்றும் திபெத்திய பௌத்த சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளை விமர்சனம் செய்த அமெரிக்காவிற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

சீனா, அமெரிக்கா பல முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துக்களை அடைந்துள்ளது

  • வாஷிங்டனில் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளில், பரிமாற்ற விகிதங்கள் உட்பட, பல முக்கிய விஷயங்களில் சீனாவும் அமெரிக்காவும் ஒருமித்த உடன்பாட்டை எட்டியுள்ளன.

வட கொரியர்கள் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்

  • வட கொரியர்கள் நாட்டின் ரப்பர்-ஸ்டாம்ப் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க இன்று வாக்களித்தனர், கிம் ஜோங்-உன் பதவிக்கு வந்த பின் நடக்கும் இரண்டாவது தேர்தல்.
  • சுப்ரீம் மக்கள் பேரவைக்கு வாக்களிப்பது அவசியம் மற்றும் வேட்பாளர்களுக்கு வேறு வழி இல்லை. வாக்களிப்பு எப்பொழுதும் கிட்டத்தட்ட100 சதவிகிதம் வரை இருக்கும், ஆட்சி அமைக்க எப்பொழுதும் பெரும்பானமையுடன் திகழும். தேர்தல் தினத்தன்று, 17 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்.

வணிகம் & பொருளாதாரம்

இந்தியா 2025க்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்

  • கோஸ்டா ரிக்காவில் உள்ள சான் ஜோஸில் இந்திய சமூகத்தினரிடையில் உரையாற்றிய துணைக் குடியரசுத்தலைவர், 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார நாடு மற்றும் உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என்று தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சூரத் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

  • மத்திய அரசு 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரத் மெட்ரோ திட்டத்தின் இரண்டு காரிடார் அமைக்க திட்டமிட்டு உள்ளது. முதல் காரிடார் – சர்தானா முதல் ட்ரீம் சிட்டி லைன் – 21.61 கி.மீ., இரண்டாவது காரிடார் – பிஷன் – சரோலி – 18.74 கி.மீ.
  • மத்திய அரசு மற்றும் மாநில அரசு 50-50 சதவீதம் சமபங்கு மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கும்.

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய விசா ஒப்பந்தம்

  • மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய விசா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் வணிக வாய்ப்புகளைத் தேடும் மாலத்தீவர்களுக்கான தாராளவாத விசா கொள்கையை வழங்குகிறது.
  • கடந்த நவம்பரில் இருந்து மாலத்தீவில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்த்துடன் பல உயர் நிலைப் பரிமாற்றங்கள் மற்றும்4 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி அளித்துள்ளது இந்தியா.

பாதுகாப்பு செய்திகள்

சி..எஸ்.எஃப்.-ன் 50-வது உருவாக்கதின விழா

  • காஸியாபாதில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 50-வது உருவாக்கதின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

புல்வாமா வகை தாக்குதல், போரினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க இந்திய பாதுகாப்பு ஆய்வகம்காம்பேட் மருந்துகளைஉருவாக்கியது

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) மருத்துவ ஆய்வகம் 90 சதவிகிதம் கடுமையான காயமடைந்த பாதுகாப்புப் படையினரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரம் வரை தாக்குபிடிக்கக்கூடிய ‘காம்பேட் விபத்து மருந்து’-ஐ உருவாக்கி உள்ளது.

விருதுகள்

ஜனாதிபதி கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்

  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகளை வழங்கினார்.

விளையாட்டு செய்திகள்

பின்லாந்து குத்துச்சண்டை போட்டி

  • பின்லாந்து ஹெல்சின்கியில் நடைபெறும் 38வது கீபீ குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ பிரிவில் கவீந்தர் சிங் பிஷ்த் தங்கம் வென்றார்; சிவா தாபா 60 கிலோ பிரிவில், கோவிந்த் சஹானி, முகமது ஹூசுமுதின் மற்றும் தினேஷ் தாகர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். சுமித் சங்வான், சச்சின் சிவாச் மற்றும் நவீன் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ்

  • அமெரிக்காவில் நடைபெறும் இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் உலகத் தரவரிசையில் 18வது இடத்தில் உள்ள நிகோலொஸ் பஸிலாஷ்விலியைத் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!