நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8, 2019

தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசம்

மணாலி மற்றும் குஃப்ரி மைனஸ் டிகிரி குளிரில் நடுங்கின

  • இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி மற்றும் குஃப்ரி ஆகிய இடங்களில் மைனஸ் டிகிரி குளிரில் நடுங்கின.

புது தில்லி

தனியார் தொலைக்காட்சி சேனல்களுடன் ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை பகிர்வதை ரத்தோர் தொடங்கி வைத்தார்

  • தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் ‘அனைத்து இந்திய வானொலி செய்திகளை தனியார் தொலைக்காட்சி சேனல்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்’ திட்டத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • தனியார் எஃப்.எம். சேனல்கள் இப்போது ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை இந்த ஆண்டு 31 மே வரை சோதனை அடிப்படையில் இலவசமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் திருவாரூர் சட்டசபை தேர்தலை ஒத்திவைத்தது

  • திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த மாதம் 28ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

உத்திரப்பிரதேசம்

பிரயாக்ராஜ் முதல் கத்ரா வரையிலான நேரடி பேருந்து சேவை தொடக்கம்

  • உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜிலிருந்து ஜம்மு & காஷ்மீரின் கத்ராவுக்கு நேரடி பேருந்து சேவைகள் தொடங்கியது. பிரயாக்ராஜில் நடைபெறும் கும்ப மேளாவுக்கு விஜயம் செய்யும் பக்தர்கள் நேரடியாக கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு செல்லலாம்.

சர்வதேச செய்திகள்

குவாத்தமாலா .நா. ஆதரவு ஊழல் எதிர்ப்பு ஆணையத்தில் இருந்து விலக முடிவு

  • குவாத்தமாலா ஐ.நா. ஆதரவு ஊழல் எதிர்ப்பு ஆணையத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறியுள்ளது.

உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் பிப்ரவரி 1 ம் தேதி பதவி விலக முடிவு

  • உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் பிப்ரவரி 1 ம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் – 2022 ல் தனது பதவி காலம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் சபாஹார் துறைமுகத்தில் இந்தியா வேலைகளை மேற்கொண்டு வருகிறது

  • ஈரான் தெற்கு கரையோரத்தின் சிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மூலோபாய சபாஹார் துறைமுகத்தில் இந்தியா வேலைகளை மேற்கொள்ளத் துவங்கியது.
  • இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு வெளியே ஒரு துறைமுகத்தை செயல்படுத்துவது இது முதல் முறையாகும்.

வணிகம் & பொருளாதாரம்

ஆர்பிஐ டிஜிட்டல் பேமண்ட்களை அதிகரிக்க குழுவை உருவாக்கியது

  • இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்கும் நிதி சேர்த்தலை மேம்படுத்துவதற்கும் உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.

சணல் பொருட்களின் ஏற்றுமதி 24% அதிகரிப்பு

  • 2014 ஆம் ஆண்டு முதல் சணலின் பல்வேறு உப பொருட்களின் ஏற்றுமதி 24 சதவீதம் உயர்ந்துள்ளது என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். 

மாநாடுகள்

ரைசினா உரையாடல் 4 வது பதிப்பு

  • ரைசினா உரையாடலின் நான்காவது பதிப்பு புது டெல்லியில் தொடங்கும். இந்த ஆண்டு உரையாடலின் தீம் “A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes”. 

நியமனங்கள்

  • இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் – சர்வதேச நாணய நிதியம், தலைமை பொருளாதார நிபுணர். உயர் ஐ.எம்.எப் பதவியை பெற்ற முதல் பெண்மணி. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டி.என். தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்ட மசோதா லோக் சபாவில் நிறைவேற்றம்

  • குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்டவர், காணாமல் போனோர் உள்ளிட்டோரை அடையாளம் காண, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை நடத்த அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.
  • இந்த மசோதா, டி.என்.ஏ., வங்கிகள் உருவாக்கவும், டி.என்.ஏ., சோதனைகள் செய்யும் பரிசோதனை கூடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் வகை செய்கிறது.குற்றவாளிகள், காணாமல் போனோரின் உறவினர்கள் தவிர, மற்றவர்களின், டி.என்.ஏ., மாதிரிகள், சம்பந்தப்பட்டோரின் அனுமதி பெறப்பட்டு, டி.என்.ஏ., வங்கிகளில் சேமிக்கப்படும்.

பொதுப்பிரிவில் உள்ள EWS க்கு 10% ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா

  • பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகளுக்கு (EWS) பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கும் ஒரு அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • 124வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, உயர்கல்வி நிறுவனங்களில் நேரடியாக ஆட்சேர்ப்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்புகளில் உயர் சாதியில் உள்ள EWS மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கிறது.

விளையாட்டு செய்திகள்

ஆஸ்திரேலியா டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி உறுப்பினர்களுக்கு பி.சி.சி.. பரிசு அறிவிப்பு

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியாவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு போட்டிக்கு தலா ரூ. 15 லட்சம் வீதம் ரொக்கப் பரிசுகளை அறிவித்தது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் 2 வது பதிப்பு

  • மகாராஷ்டிரா, புனேயில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாவது பதிப்பு தொடங்க உள்ளது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!