நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 30 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 30 2019

முக்கியமான நாட்கள்

ஜனவரி 30 – தேசிய தியாகிகள் தினம்

  • நாடு முழுவதும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 71 வது நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்தினர். இந்த தினத்தை தியாகிகள் தினமாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் 1948 ல் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

மத்திய அரசு 900 கோடி ரூபாய் வறட்சி நிதி அறிவிப்பு

  • மத்திய அரசு வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ஆந்திர மாநிலத்திற்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மகாராஷ்டிரா

CPRI பிராந்திய சோதனை ஆய்வகத்தின் அடிக்கல் நாட்டுவிழா

  • மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள மத்திய ஆற்றல் ஆய்வு நிறுவனத்தில் (CPRI) பிராந்திய சோதனை ஆய்வகத்திற்கு இந்திய அரசின் மின்சாரத்துறை, எரிசக்தி புதுப்பிக்கக்கூடிய மாநிலத்திற்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ ஆர் கே சிங்  அடிக்கல் நாட்டினார்.

லோகாயுக்தாவின் வரம்பிற்குள் மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகம்

  • மகாராஷ்டிரா அமைச்சரவை, லோகாயுக்தாவிற்கு அதிகாரம் வழங்குவதற்காக, முதலமைச்சரின் அலுவலகத்தை அதன் வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது. லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டத்தின்படி, லோக்ஆயுக்தாவின் வரம்பிற்குள் மாநிலங்களின் முதலமைச்சரை சேர்ப்பது அவசியமில்லை. ஆனால் மகாராஷ்டிரா அமைச்சரவை, லோகாயுக்தாவுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் மாநிலங்களோடு இணைந்தது.

கற்கள் மற்றும் நகைகளுக்கான உள்நாட்டு கவுன்சில்

  • மும்பையில் கற்கள் மற்றும் நகைகளுக்கான உள்நாட்டு கவுன்சிலின் துவக்க விழாவில் இந்தியாவின் தங்க கொள்கை தொடங்கப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

சிக்கிம்

முதல் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்

  • சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ. கே.ஜே.அல்போன்ஸ், “வடகிழக்கு சர்க்யூட் வளர்ச்சி: சிக்கிம் மாநிலத்தின் கேங்க்டோக்கில் சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம்

தேசிய அருங்காட்சியக நிறுவனம் நொய்டாவில் திறக்கப்பட்டது

  • நொய்டாவில் தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் புதிய வளாகத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.

சர்வதேச செய்திகள்

பிரிட்டன் நாடாளுமன்றம் ஐரிஷ் எல்லை சட்டதிருத்தத்திற்கு பிரெக்ச்சிட் ஒப்புதல் அளித்தது

  • பிரிட்டனில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அயர்லாந்தின் முதுகெலும்பாக அறியப்பட்ட ஐரிஷ் எல்லையை மாற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகளைத் தேடுவதற்காக பிரெக்ச்சிட் திட்டத்தில் ஒரு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மியான்மார் பாராளுமன்றம் பட்டய மாற்றத்திற்கு ஒப்புதல்

  • நாட்டின் இராணுவத்தால் இயற்றப்பட்ட அரசியலமைப்பு, இராணுவம் எந்தவொரு மாற்றத்தையும் தடுக்கும் சக்தியை வழங்கியது. இதனை மாற்றும் வகையில் சட்டத்திருத்தத்தை முன்மொழிவதற்கு ஒரு குழுவை உருவாக்க மியான்மரின் பாராளுமன்றம் வாக்களித்தது

அறிவியல் செய்திகள்

மலேரியா மருந்துகள் ஜிகா வைரஸ் வளர்ச்சியை தடுக்கின்றன என ஐஐடி மண்டி குழு கண்டுபிடிப்பு

  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி), மண்டி ஆராய்ச்சியாளர்கள், ஹைட்ரோக்சிக்ளோரோகுயின் அல்லது எச்.சி.க்யூ. ஏற்கனவே மலேரியா நோய்க்கு பயன்படுத்துகிற ஜிகா வைரஸ் வளர்ச்சியை தடுக்கின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வணிகம் & பொருளாதாரம்

ரிசர்வ் வங்கி ரூ. 37,500 கோடியை செலுத்தத் திட்டம்

  • பணப்புழக்கத்தை அதிகரிக்க பிப்ரவரி மாதத்தில் அரசு பத்திரங்களை வாங்குவதன் மூலம், 37,500 கோடி ரூபாயை செலுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தரவரிசை & குறியீடு

ஊழல் நிறைந்த நாடுகளின் குறியீடு

1) டென்மார்க் 2) நியூசிலாந்து 78) இந்தியா

ரயிலின் எதிர்காலம்

  • ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயல், சர்வதேச எரிசக்தி முகமை (ஐ.இ.ஏ.)வின் ஒரு நிகழ்வில் “ரயிலின் எதிர்காலம்” எனும் அறிக்கையை வெளியிட்டார்.

நியமனங்கள்

  • வைஸ் அட்மிரல் ஜி. அசோக்குமார் – .வி.எஸ்.எம், வி.எஸ்.எம். கப்பற்படையின் துணைத் தளபதி
  • சுமன் குமாரி – பாகிஸ்தானில் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்துப் பெண் 

திட்டங்கள்

குழந்தை இறப்புகளை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்

  • மகாராஷ்டிரா குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு சாதனத்தை வழங்கினார்.
  • இந்தத் திட்டம் முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும், இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள நான்கு லட்சம் பெண்கள் பயன் பெறுவர்.

விருதுகள்

  • ஜீனோம் சேவியர் விருதுகள் – பி.வி. ஜோஸ், சாலக்குடி & ஜெயன் கே.ஆர்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!