நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 29 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 29 2019

தேசிய செய்திகள்

கோவா

கோவாவில் அடல் சேது சாலையை மத்திய அமைச்சர் கட்கரி திறந்து வைத்தார்

  • கோவாவின் பனாஜி நகரில், மண்டோவி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மூன்றாவது கேபிள் பாலம், 5.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட “அடல் சேது”சாலையை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.

மகாராஷ்டிரா

மேற்கு ரயில்வே ஆர்பிஎப் ஊழியர்களுக்குசெக்வேவழங்கியது

  • மும்பையில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) ஊழியர்களுக்கு ‘செக்வே’ எனப்படும் இரு சக்கர, தன்னியக்க சமநிலை, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்கியுள்ளது.

நாகாலாந்து

மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து தளம் திறப்பு

  • கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நாகாலாந்து மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து தளத்தை புகழ்பெற்ற கால்பந்து வீரரான டாக்டர் டி.ஏஓ. அவர்களின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக திறந்துவைத்தனர்.

ராஜஸ்தான்

3000 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு நெடுஞ்சாலை திட்டங்கள் தொடங்கப்பட்டது

  • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 237 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

சர்வதேச செய்திகள்

அபெர்என்று அழைக்கப்படும் பொதுவான டிஜிட்டல் நாணயம் அறிமுகம்

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் மத்திய வங்கிகள், “அபெர்” என்றழைக்கப்படும் ஒரு பொதுவான டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்த்து, இது இரு நாடுகளுக்கும் இடையில் பிளாக்செயின் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டட் லெட்ஜெர் தொழில்நுட்பம் மூலம் நிதி குடியேற்றங்களில் பயன்படுத்தப்படும். 

அமேரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர சீனாவின் உயர் அதிகாரி வாஷிங்டன் வந்தார்

  • சீனாவின் உயர் வர்த்தக அதிகாரி வாஷிங்டன் வந்தடைந்தார்; உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகள் முக்கியமான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு தயார் செய்கின்றன. 

ஈரானுடன் நீண்ட கால பொருளாதார ஒத்துழைப்புகான ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்து

  • ஈரானுடன் நீண்ட கால பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட்டது. இந்த புதிய உடன்படிக்கை தொழில்துறை, விவசாயம், சேவை, உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் துறை ஆகியவற்றை உள்ளடக்கியது. லடாகியா மற்றும் டார்டஸ் துறைமுகங்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்திட்டன.

அகதிகள் நாடு திரும்ப சிரியாவில் பாதுகாப்பான பகுதிகளை அமைப்பதற்கு துருக்கி நடவடிக்கை

  • துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வடக்கு சிரியாவில் பாதுகாப்பான பகுதிகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். இதன்மூலம் , துருக்கியில் வசிக்கும் சிரிய அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வழிவகுக்கும்.

மாநாடுகள்

சமூக வானொலி விழிப்புணர்வு ஒர்க்ஷாப்

  • போர்ட் பிளேரில் உள்ள TSG எமரால்டு வியூ மாநாட்டு மண்டபத்தில் சமூக வானொலி விழிப்புணர்வு ஒர்க்ஷாப்பை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நிர்வாக செயலாளர் ஸ்ரீ அஜய் குமார் குப்தா துவக்கி வைத்தார்.
  • இந்த ஒர்க்ஷாப் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, இது உண்மையான மாற்றத்திற்கான நவீன பயன்பாடுகள் (ஸ்மார்ட்) உடன் இணைந்து செயல்படுகிறது.

பாரத் யாத்ரா

  • ஸ்வஸ்த் பாரத் யாத்ரா, உலகின் மிகப்பெரிய சைக்லோத்தான் மக்கள் சரியான உணவை சாப்பிடுவதற்கான விழிப்புணர்வுக்காக புது தில்லியில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி உலக உணவு தினத்தன்று இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. செய்தி – ‘பாதுகாப்பனதை சாப்பிடுங்கள், ஆரோக்கியமானதை சாப்பிடுங்கள், சத்துக்கள் நிறைந்ததை சாப்பிடுங்கள்’.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நான்கு வழிச்சாலை கங்கை எக்ஸ்பிரஸ்வே கட்டுமானத்திற்கு உபி அரசு ஒப்புதல்

  • உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை, 36,000 கோடி ரூபாய் செலவில் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் நான்கு-வழிச்சாலை கங்கை எக்ஸ்பிரஸ்வே கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது.

PISA 2021 இல் பங்கு பெறுவதற்கு OECD உடன் இந்தியா உடன்படிக்கை

  • சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்டம் – PISA 2021 இந்தியாவின் பங்கேற்புக்கான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) உடன் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்திய புகையிலைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா மற்றும் சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் இந்திய புகையிலைகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சர்வதேச தரங்களுடன் ஒப்பிடும் போது தரமான புகையிலை இந்தியாவில் குறைந்த விலைகளில் கிடைக்கிறது. இதனால் சீனாவிற்கு இந்திய புகையிலை ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.

ஹஜ் மீதான ஜிஎஸ்டி 18% முதல் 5% வரை குறைக்கப்பட்டது

  • ஹஜ் மீதான ஜி.எஸ்.டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். இதனால் இந்த வருடம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு விமான கட்டணத்தை கணிசமாகக் குறைத்து 113 கோடி ரூபாய்களை சேமிக்க உதவும்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.7,214.03 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்

  • மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, கூடுதல் நிதியாக, ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ரூ.7214.03 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்படி, புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசம், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், குஜராத் மாநிலம், கர்நாடக மாநிலம், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விருதுகள்

நியூயார்க் டைம்ஸ் டிராவல் ஷோ 2019

  • ‘சிறந்த ஷோவுக்கான’ சிறப்பு விருது – இந்தியா

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

 “தேர்வு குறித்த விவாதம் 2.0”

  • புதுதில்லியில் தல்கோத்ரா மைதானத்தில் “தேர்வு குறித்த விவாதம்0” நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடினார்.

விளையாட்டு செய்திகள்

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப்போட்டி

  • விஸ்வநாதன் ஆனந்த் விதித் குஜ்ராத்தியுடன் நடந்த போட்டியை சமன் செய்து மூன்றாம் இடம் பிடித்தார்.

ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை 2020 அட்டவணை

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2020 ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது, இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அம்பத்தி ராயுடுவுக்கு ஐசிசி தடை விதித்தது

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராகிய அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது.

இந்தியா Vs நியூசிலாந்து பெண்கள் ஒருநாள் தொடர்

  • இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!