நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 20,21 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 20,21 2019

தேசிய செய்திகள்

பஞ்சாப்

பதக்கம் வென்ற அனைத்து பஞ்சாப் வீரருக்கும் அரசு வேலை

  • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைத்து பஞ்சாப் வீரருக்கும் அரசு வேலை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவிப்பு.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடங்கப்பட்டது

  • திருச்சியில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • திருச்சிராப்பள்ளியில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஒரு பகுதியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியான திட்டங்களைத் தொடங்கினார். திருச்சி, கோவை, சேலம், ஒசூர், சென்னை ஆகிய நகரங்களை இணைத்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 10 நிறுவனங்கள் ரூ.3,123 கோடி முதலீடு செய்துள்ளன.

உத்தரகாண்ட்

டெஹ்ராடூனில் இருந்து அமிர்தசரஸ்க்கு விமான சேவை துவக்கம்

  • உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் டெஹ்ராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து டெஹ்ராடூன் மற்றும் அமிர்தசரஸ்க்கு இடையே துவக்கி வைத்தார்.

சர்வதேச செய்திகள்

சீன மக்கள்தொகை வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் மெதுவாகத் தொடர்கிறது

  • 2018 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை23 மில்லியனாக அதிகரித்துள்ளது, உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகின்றது.
  • உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில்362 பில்லியன்களுடன் மெதுவான மக்கள் வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

நேபாளத்தின் மத்திய வங்கி இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை

  • நேபாளத்தின் மத்திய வங்கி ரூ 2,000, ரூ 500 மற்றும் ரூ 200 நாணயங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. புதிய கட்டுப்பாட்டின் கீழ், நேபாள குடிமக்கள் இந்தியாவைத் தவிர வேறு நாடுகளுக்கு இந்த ரூபாய் நோட்டுக்களை கொண்டு செல்ல முடியாது.

2020 ஆம் ஆண்டிற்கான உலக கட்டிடக்கலை தலைநகரம்

  • 2020 ஆம் ஆண்டுக்கான உலக கட்டிடக்கலை தலைநகரமாக பிரேசிலிய நகரம் ரியோ டி ஜெனிரோ ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் யுஐஏ உலகக் காங்கிரஸ் 2020 ஜூலையில், இந்த நகரத்தில் நடைபெறும்.

அறிவியல் செய்திகள்

அமெரிக்க உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது

  • அமெரிக்க உளவு செயற்கைகோள் கலிஃபோர்னியாவிலிருந்து விண்வெளி சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்டது.
  • வான்டன்பெர்க் விமானப்படை தளத்திலிருந்து தேசிய புலனாய்வு அலுவலக செயற்கைக்கோளை சுமந்து கொண்டு சக்தி வாய்ந்த டெல்டா 4 கனரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 

தரவரிசை & குறியீடு

உலகளாவிய ஆலோசனை நிறுவனம் PwC அறிக்கை

  • 2019 உலகின் மிகப்பெரிய பொருளாதார தரவரிசைப் பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை விட முன்னேறி, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என உலகளாவிய ஆலோசனை நிறுவனமான PwC தெரிவித்துள்ளது.
  • 1) அமெரிக்கா – 19.39 டிரில்லியன் டாலர்கள் 2) சீனா – 12.23 டிரில்லியன் டாலர்கள்

மாநாடுகள்

உலக பொருளாதார மன்ற ஆண்டு சந்திப்பு

  • உலக பொருளாதார மன்றம், WEF, வருடாந்திர சந்திப்பு டாவோஸில் தொடங்க உள்ளது.
  • இந்த நிகழ்வின் தீம் ‘Globalization 4.0: Shaping a Global Architecture in the Age of the Fourth Industrial Revolution’

நியமனங்கள்

  • பெலிக்ஸ் ஷிஷேக்கேடி – காங்கோவின் ஜனாதிபதி
  • ஆண்ட்ரி ராஜோ எலினா – மடகாஸ்கரின் ஜனாதிபதி 

விளையாட்டு செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

  • மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 16 வது இடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
  • ரஃபேல் நடால் கால் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

டாட்டா ஸ்டீல் சதுரங்க போட்டி

  • நெதர்லாந்தில் நடைபெறும் டாட்டா ஸ்டீல் சதுரங்க போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் எட்டாவது சுற்றில் அஜர்பைஜானின் ஷகிரியார் மாமடயாரோவை வென்றார். இதன்மூலம் நோர்வேயின் மக்னஸ் கார்ல்ஸனுடன் முன்னணி இடத்தை பகிர்ந்துகொண்டார்.

மும்பை மராத்தான்

  • கென்யாவின் காஸ்மாஸ் லாகட் மற்றும் எத்தியோப்பியாவின் வொர்க்நேஷ் அலமு ஆகியோர் மும்பையில் நடைபெற்ற டாடா மும்பை மராத்தான் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரிவில் வென்றனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு

  • புனேயில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன. ஒட்டுமொத்த கோப்பையை மகாராஷ்டிரா கைப்பற்றியது.
  • 1) மகாராஷ்டிரா 228 பதக்கம் 2) ஹரியானா 178 பதக்கம் 3) டெல்லி 136 பதக்கம்.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு போட்டிகள்

  • சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் 25,000 டாலர் மதிப்பிலான பெண்கள் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெற்றி பெற்றுள்ளார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!