நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 11 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 11, 2019

தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேசம்

யூரியா உரங்களின் விலை 11% குறைக்கப்பட்டது

  • உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு யூரியா உரங்களின் விலையை 11 சதவீதம் குறைத்தார். இயற்கை எரிவாயு மீதான கூடுதல் வாட் கட்டணத்தின் காரணமாக யூரியாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

15 வது ப்ரவசி பாரதிய திவாஸ்

  • பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இந்த மாதம் 21 ம் தேதி 15 வது ப்ரவசி பாரதிய திவாஸை திறந்து வைக்கிறார்.

அறிவியல் செய்திகள்

டிசம்பர் 2021 இல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டம்

  • டிசம்பர் 2021 க்குள் ககன்யான் திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை பூர்த்தி செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ், ஏழு நாட்களுக்கு விண்ணிற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பவும், அவற்களை மீண்டும் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. 

மாநாடுகள்

கூட்டாண்மை உச்சிமாநாட்டின் 25 வது பதிப்பு

  • இந்தியாவின் பொருளாதார கொள்கை மற்றும் வளர்ச்சி போக்குகளின் மீது இந்திய மற்றும் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாடல், விவாதங்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றிற்கான, கூட்டாண்மை உச்சிமாநாட்டின் 25 வது பதிப்பு மும்பையில் நடைபெற்றது.
  • இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இரண்டு நாள் நிகழ்ச்சியை திறந்து வைத்தார்.

கவிஞர்களின் தேசிய கருத்தரங்கம்

  • அகில இந்திய வானொலியால் ஏற்பாடு செய்யப்பட்ட 64 ஆவது தேசிய மாநாடு, சென்னையில் தொடங்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் உள்ள அனைத்து 22 மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 23 கவிஞர்கள் இந்த கருத்தரங்கில் பங்குபெறுகின்றனர்.

இந்திய பெண்கள் கரிம விழா

  • மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் சண்டிகரில் மூன்று நாள், 6 ஆவது இந்திய பெண்கள் கரிம விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் உள்ள கரிம விவசாயத்தில் ஈடுபடும் பெண் விவசாயிகளையும் தொழில் முயற்சிகளையும் கொண்டாடுவதும், ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். 

நியமனங்கள்

  • சூ செங்-சாங் – தைவான் பிரதமர்
  • பைரேந்திர பிரசாத் பைஷியா [இந்திய பளு தூக்கும் கூட்டமைப்பின் தலைவர் (IWF)] – 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான செஃப் டி மிஷன். 

திட்டங்கள்

ரேணுகாஜி பல்வகைப்பட்ட அணை திட்டம்

  • தில்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் நீர்வள ஆதாரங்கள், நதி வளர்ச்சி மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் புது டில்லியில் ரேணுகாஜி பல்வகைப்பட்ட அணை திட்டம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின் படி, மூன்று சேமிப்புத் திட்டங்கள் யமுனா நதி மற்றும் உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் உள்ள அதன் துணை நதியான டான்ஸ் மற்றும் கிரியில் அமைக்கத்திட்டம். 

ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்கள்

  • சமீபத்தில் மேகாலயா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் சுற்றுலாத்துறை அமைச்சகம் நான்கு புதிய திட்டங்களுக்கு ரூ.190.46 கோடி ரூபாய் சுற்றுலாத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களான ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முத்தலாக் அவசரச் சட்டத்தை மறு பிரகடனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

  • உடனடி முத்தலாக், குற்றவியல் குற்றம் என உறுதிசெய்யும் அவசரச் சட்டத்தை மறு பிரகடனம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசரச்சட்டம் உடனடி முத்தலாக் செல்லாது, சட்டவிரோதமானது என உறுதிப்படுத்துகிறது. இந்த குற்றத்தை புரிபவர்கள் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

மூன்று புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • நாட்டிலுள்ள சுகாதார வசதிகளை அதிகரிக்க மூன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஜம்மு & காஷ்மீரில் இரண்டும், குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒன்றும் அமைக்கத் திட்டம்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

அடல் டிங்கிரிங் லேப் கையேடு

  • நிதி ஆயோக்கின் அடல் புதுமை மிஷன் தேசிய இளைஞர் தினத்தன்று அடல் டிங்கிரிங் லேப் கையேட்டை வெளியிட்டது.

விளையாட்டு செய்திகள்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் பதவி நீக்கம்

  • இந்திய ஆண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜூனியர் அணியை வழிநடத்தும் பணியை தேசிய கூட்டமைப்பு வழங்கியது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!