நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 26, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 26, 2019

தேசிய செய்திகள்

6 மாநிலங்களுக்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது
  • தேர்தல் ஆணையம் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆறு மாநிலங்களுக்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களை நியமித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், குஜராத், கர்நாடகா, நாகாலாந்து மற்றும் தெலுங்கானா ஆகியவை அந்த 6 மாநிலங்களாகும்.
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான சிறப்பு செலவு ஆய்வாளர்களாக சி.பி.டி.டி.யின் முன்னாள் உறுப்பினர் கோபால் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இயக்குநர் ஜெனரல் I-T (விசாரணை), டி.டீ கோயல் அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய இடங்களில் பணியாற்றவுள்ளார்.
  • மகாராஷ்டிராவிற்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட ஷைலேந்திர ஹந்தா குஜராத்தின் கூடுதல் பொறுப்பையும், மது மகாஜன் கர்நாடகத்தை தமிழ்நாட்டையும் கண்காணிக்கவுள்ளார் .
மாநிலங்களுக்கு சிறப்பு மத்திய போலீஸ் கண்காணிப்பாளர்களை ECI நியமித்துள்ளது
  • மேற்கு வங்காளத்திலும், ஜார்கண்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்புப் போலீஸ் கண்காணிப்பாளராக இந்திய பாதுகாப்பு படை முன்னாள் இயக்குநர் கே.கே.சர்மாவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
  • திரிபுரா மற்றும் மிசோரம் சிறப்பு மத்திய போலீஸ் கண்காணிப்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மிரினால் காந்தி தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச செய்திகள்

ஆஸ்திரேலியா, தீவிரவாத சம்பந்தப்பட்ட விஷயங்கள் காரணமாக  சமூக ஊடக நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்படலாம் என்று எச்சரிக்கை விட்டுள்ளது
  • ஆஸ்திரேலியா, சமூக ஊடகங்கள் தீவிரவாத சம்பந்தப்பட்ட விஷயங்களை தங்கள் தளங்களில் இருந்து விரைவாக அகற்றாவிட்டால், நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்படலாம் என்று சமூக ஊடக நிறுவனங்களை எச்சரித்துள்ளது.
கோலான் ஹைட்ஸ் மீது இஸ்ரேலின் இறையாண்மையை அங்கீகரிக்கும் டிரம்ப் கையெழுத்து பிரகடனம்
  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோலான் ஹைட்ஸ் மீது இஸ்ரேலின் இறையாண்மையை அங்கீகரிக்கும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார், மேலும் இஸ்ரேல் தற்காப்புக்கு முழு உரிமை உண்டு என்று கூறினார்.
  • இஸ்ரேல் 1967 யுத்தத்தில் சிரியாவிலிருந்து கோலான் ஹைட்ஸ்யை கைப்பற்றியது, ஆனால் அந்த எல்லைக்குள் அதன் இறையாண்மையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை.
வெனிசுலாவிற்கு ஆதரவு அளித்து அமெரிக்கா ரஷ்யா மோதல்
  • மாஸ்கோ ஏராளமான சிப்பாய்கள் கராகஸுக்கு அனுப்பிய பின்னர், ,எண்ணெய் தயாரிக்கும் நாடான வெனிசுலாவிற்கு ஆதரவு அளித்து அமெரிக்கா ரஷ்யா பகிரங்கமாக மோதின, இது ஆட்சிக்கவிழ்ப்புக்கு அறிகுறியாக உள்ளது.

அறிவியல் செய்திகள்

29 செயற்கைக்கோள்களை ISRO விண்ணில் செலுத்த உள்ளது
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) ஏப்ரல் முதல் நாளில் EMISAT உட்பட 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது .பி.எஸ்.எல்.வி-சி45 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சுமார் 9.30 மணி அளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது
  • இந்திய ரேடார் நெட்வொர்க்கை கண்காணிப்பதற்காக EMISAT உருவாக்கப்பட்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

பி.என்.பி. மீது ரூபாய் 2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
  • இந்திய ரிசர்வ் வங்கி,SWIFT நடைமுறைக்கு எதிராக செயல்பட்டதால் காரணமாக  பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூபாய் 2 கோடி அபராதம் விதித்துள்ளது.
  • SWIFT என்பது சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு வங்கிகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் செய்யும் ஒரு மென்பொருளாகும்.
இந்திய கூட்டமைப்புக்கு ADNOC ஆய்வு உரிமை வழங்கியது
  • இரண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பான, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அபுதாபி ஆன்ஷோர் பிளாக் 1இல் ஆய்வு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நியமனங்கள்

  • ரெயில் அட்மிரல் ராஜேஷ் பெண்டர்கர், VSM – மகாராஷ்டிரா கடற்படைப் பகுதியின் flag officer
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு, மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை விதிகள் 2019 யை அறிவித்தது

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை விதிகள் 2019 யை நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக அறிவித்துள்ளது. புதிய விதிகள் நாட்டில் மருத்துவ பரிசோதனைகள், புதிய மருந்துகள் மற்றும் அதன் ஒப்புதலின் ஒழுங்குமுறையை மாற்றும்.

பாதுகாப்பு செய்திகள்

கடற்படையின்  அணுசக்தி, உயிரியல், வேதியியல் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டது
  • இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா மும்பை லோனாவலாவில் உள்ள ஐ.என்.எஸ் சிவாஜியில் இந்திய கடற்படை அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பயிற்சி நிலையத்தை (NBCTF) திறந்துவைத்தார்.
இராணுவ பயிற்சி மித்ரசக்தி
  • இலங்கையில் தியத்தலாவவில் இந்திய மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இடையில் கூட்டு பயிற்சிக் MITRASHAKTI – VI நடை பெற்றது. இந்த பகுதியில் நடத்தப்படும் மிகப்பெரிய இருதரப்பு இராணுவ பயிற்சியில் இது ஒன்றாகும்.
LIMA 19
  • இந்திய கடற்படையின் ASW கோர்வெட், ஐஎன்எஸ் கட்மட் ஏழு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக லங்காவி மலேசியாவிற்கு வந்தடைந்தது
  • Langkawi International Maritime மற்றும் Aerospace Exhibition, LIMA-19 இன் 15 வது பதிப்பில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
மவுண்ட் மகலுவிற்கு மலையேறும் பயணம்
  • ஐந்து அதிகாரிகள்,இரண்டு jco மற்றும் பதினோரு or அதிகாரிகள் கொண்ட முதல் இந்திய ராணுவத்தின் மவுண்ட் மகலுவிற்கு மலையேறும் பயணத்தை பொது இராணுவ டைவிங் இன் டைரக்டர் மார்ச் 26,2019 இல் தொடங்கி வைத்தார்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

PWD செயலி (app)
  • மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்வதை எளிதான முறையில் வழங்குவதற்கு ‘பி.டபிள்யு.டி.’ என்றழைக்கப்படும் ஒரு மொபைல் செயலி பயன்படுத்தப்படவுள்ளது.
  • இந்த செயலி லோக் சபா தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு, சக்கர நாற்காலி, சாய்வுப்பாதைகள் மற்றும் வீட்டிலிருந்து, வாக்குச்சாவடிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கும் பயன்படும்.

விளையாட்டு செய்திகள்

இந்தியா ஓபன் சூப்பர் 500 பேட்மின்டன்
  • புது தில்லியில் இந்தியாவின் சூப்பர் 500 பேட்மின்டன் தொடங்கப்பட்டது. பி.வி. சிந்து மற்றும் கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வெல்ல முயல்வர்.

பிப்ரவரி 26 நடப்பு நிகழ்வுகள் video – கிளிக் செய்யவும்

PDF Download

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!