நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 02 2019

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 02 2019

தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா

கலா ​​கோதா கலை விழா

  • இந்தியாவின் மிகப்பெரிய பல கலாச்சார தெரு திருவிழாவான கலா ​​கோதா கலை விழா KGAF 2019 பிப்ரவரி 2மத்தேதி தொடங்க உள்ளது. 20 ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு கலை, கலாச்சாரம், சினிமா, நாடகம், நடனம், இலக்கியம் மற்றும் சிற்பம் ஆகியவை மும்பையின் வரைபடத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாட உள்ளன.
  • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் மும்பையின் சில முக்கிய வரலாற்றை கொண்டாடும் வகையில் ஜஹாங்கீர் கலைக்கூடத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி

இந்திய மாணவர்களுக்கு உதவ அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக ஹாட்லைன் 24/7 தயார்நிலை

  • அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறிய குற்றத்திற்காக இந்திய மாணவர்களை கைது செய்துள்ளனர், அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் 24/7 ஹாட்லைன் திறந்துள்ளது. அமெரிக்காவில் வசிப்பதற்காக போலி பல்கலைக் கழகத்தில் மாணவர்களாக பதிவு செய்த குற்றத்திற்காக 129 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேசம்

கும்ப மேளாவின் சிறப்பு தபால்தலை வெளியீடு

  • ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா ​​இந்திய தபால் துறையின் கும்ப மேளாவின் ஒரு சிறப்பு அஞ்சல் தபால்தலையை வெளியிட்டார். அதன் விலை 5 ரூபாயாகும்.

மேற்கு வங்கம்

294 கிமீ நீளமுள்ள அண்டல்சைந்தியாபாகுர்மால்தா இடையிலான ரயில் மின்மயமாக்கல்

  • பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் உள்ள 294 கிமீ நீளமுள்ள அண்டல்-சைந்தியா-பாகுர்-மால்தா மற்றும் கானா-சாய்ந்தியா இடையிலான இரயிலை மின்மயமாக்கி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

சர்வதேச செய்திகள்

வெளிநாட்டு பண இருப்புக்களை அதிகரிக்க பாகிஸ்தானுக்கு 2.5 பில்லியன் டாலர் கடனை சீனா வழங்க திட்டம்

  • வெளிநாட்டு பண இருப்புக்களை அதிகரிக்க கூட்டாளி நாடான பாகிஸ்தானுக்கு5 பில்லியன் டாலர் கடன் வழங்க சீனா திட்டம். பாகிஸ்தான் தற்போது குறைந்த வெளிநாட்டு பண இருப்புக்களை கொண்டுள்ளது மற்றும் வெளிநாட்டு கடன்கள் பெருகிக்கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி (WB) ஆகியவற்றின் குறைந்தபட்ச அளவிற்கு குறைவாக பாகிஸ்தான் நாட்டின் மொத்த 8.12 பில்லியன் டாலர் இருப்புக்கள் உள்ளன.

அமெரிக்க இறக்குமதிகளை விரிவுபடுத்துவதற்கான முக்கிய சலுகைக்கு சீனா ஒப்புதல்

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பிரதான கோரிக்கைகளான விவசாயம், ஆற்றல், உற்பத்தி மற்றும் சேவைகளில் அமெரிக்க இறக்குமதிகளை விரிவுபடுத்துவதற்கு முக்கிய சலுகைகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டது.

ரஷ்யாவுடன் முக்கிய குளிர் யுத்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிப்பு

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவுடனான இடைக்கால வரம்பு அணு ஆயுத(INF) ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார், கிரெம்ளின் குளிர் யுத்தகால ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டினார்.
  • 1987 ல் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மற்றும் சோவியத் தலைவர் மைக்கேல் கோர்பச்சேவ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட INF ஒப்பந்தம், 500-5,500 கிலோமீட்டர் வரம்பில் அணுசக்தி ஏவுகணைகளை தயாரிக்க பயன்படுத்த தடை செய்தது.

வணிகம் & பொருளாதாரம்

அஞ்சல் துறை விரைவில் அதன் சொந்த காப்பீட்டு நிறுவனத்தை அமைத்துக்கொள்ள திட்டம்

  • அஞ்சல் துறை விரைவில் அதன் சொந்த காப்பீட்டு நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது, தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டு வகையான திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

மாநாடுகள்

20 வது பாரத் ரங் மஹோட்சவ்

  • இந்தியாவின் சர்வதேச நாடக திருவிழாவான பாரத் ரங் மஹோட்சவ்வின் (பி.ஆர்.எம்) 20 வது பதிப்பு உலகின் முக்கிய பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான தேசிய நாடக பாடசாலையால் (என்எஸ்டி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய அரசின் கலாசாரத்திற்கான மாநில அமைச்சர் (I / C), டாக்டர் மகேஷ் ஷர்மா, 21-நாள் தேசிய நாடக அரங்கத்தை புது தில்லியில் திறந்து வைத்தார்.

தேசிய சுகாதார திட்டத்தின் ஸ்டீரிங் குழுவின் 6 வது கூட்டம்

  • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, தேசிய சுகாதாரத் திட்டத்தின் ஸ்டீரிங் குழுவின் 6 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

நியமனங்கள்

  • ஸ்ரீ ரிஷி குமார் சுக்லா – சிபிஐ இயக்குனர்

விளையாட்டு செய்திகள்

அரசு விளையாட்டு துறைக்கான பட்ஜெட்டை 214 கோடி ரூபாய் உயர்த்தியது

  • அடுத்த நிதி ஆண்டிற்கான விளையாட்டுத்துறை பட்ஜெட்டை அரசு 214 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளது. இதில் இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் (SAI) மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றிற்கான நிதி உயர்வும் அடங்கும்.
  • ஒட்டுமொத்த விளையாட்டுத்துறைக்கான 2019-2020ன் பட்ஜெட் தொகை 2002 கோடி ரூபாயிலிருந்து 2216 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவை வீழ்த்தி இத்தாலி டேவிஸ் கோப்பை உலக இறுதிப் போட்டிக்கு தகுதி

  • இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி டேவிஸ் கோப்பை உலக இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.

PDF Download

ஜனவரி மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!