நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 29, 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 29, 2018

தேசிய செய்திகள்

அரியானா
ஆலிம்கோ துணை தயாரிப்பு நிறுவனம் மற்றும் மூட்டு பொருத்தி மையத்தின்  ”பூமி பூஜன்’ விழா
  • பரிதாபாத்,பல்லப்கர்ரில் ஆலிம்கோ துணை தயாரிப்பு நிறுவனம் மற்றும் மூட்டு பொருத்தி மையத்தின் ”பூமி பூஜன்’ விழாவில், சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பிற்கான மாநில அமைச்சர் ஸ்ரீ கிருஷ்ண் பால் குர்ஜர் பங்கேற்றார்.
ஜம்மு & காஷ்மீர்
லடாக்கில் குளிர்ச்சியான வெப்பநிலையானது  குளிர்கால விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கிறது
  • லடாக்கில் உள்ள உறைபனி வெப்பநிலை குளிர்கால விளையாட்டு மற்றும் குளிர்கால சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது.
தமிழ்நாடு
மதுரை மீனாட்சி கோவிலில் சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது
  • அனைத்து வகையான உணவையும் தீவனத்தையும் காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் தனிப்பட்ட சப்பரத் திருவிழா, தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் பாரம்பரிய சடங்குகளோடு கொண்டாடப்பட்டது .
  • திருவிழாவின் சிறப்பம்சம் மீனாட்சி தேவியின் தேரை பெண் பக்தர்கள் மட்டுமே இழுக்கிறார்கள்.

சர்வதேச செய்திகள்

மிந்தானோவை தாக்கிய 6.9 அளவு நிலநடுக்கம் 
  • பிலிப்பைன் தீவின் மிந்தானோவில் 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக பெரிய சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.

வணிகம் & பொருளாதாரம்

2019ற்கான கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 அதிகரிப்பு
  • அரவை கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலை [எம்.எஸ்.பி.] குவிண்டாலுக்கு 7750 ரூபாயிலிருந்து 9920 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ. துறைக்கு ரூபாய் 37,400 கோடி மதிப்புள்ள கடன் வழங்க  PSB கள் ஒப்புதல் அளித்துள்ளது
  • நவம்பர் மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ’59 நிமிட கடன் திட்டத்தின் கீழ், 37,412 கோடி ரூபாய் மதிப்புள்ள MSME களுக்கு 1.12 லட்சம் கடன் விண்ணப்பங்களை பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ளன.
  • ஜிஎஸ்டி-பதிவுசெய்யப்பட்ட மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ‘psbloansin59minutes.com’ portal மூலம் 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் பெறலாம்.
மத்திய அரசு வெங்காய விவசாயிகளுக்கு ஏற்றுமதி ஊக்கத்தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது
  • மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு ஊக்கத்தொகையை தற்போதுள்ள 5 சதவீதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

தரவரிசை & குறியீடு

உயிரியல் பன்முகத்தன்மைக்கான மாநாட்டிற்கு இந்தியாவின் ஆறாவது தேசிய அறிக்கை (CBD)
  • இந்தியா தனது ஆறாவது தேசிய அறிக்கையை(NR6) உயிரியல் பன்முகத்தன்மைக்கான மாநாட்டிற்கு (CBD) சமர்ப்பித்துள்ளது. தேசிய பல்லுயிர் அதிகாரசபை (NBA) ஏற்பாடு செய்த மாநில பல்லுயிர் வலையமைப்பின் (SBBs) 13 வது தேசிய கூட்டத்தின் தொடக்க அமர்வு காலத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
  • இந்தியா,பல்லுயிர் பெருக்க நாடுகளில் முதன்முதலாக CBD செயலகத்திற்கு NR6 ஐ சமர்ப்பித்த உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகும் மேலும்  NR6 ஐ சமர்ப்பித்த நாடுகளில் ஆசியாவில் முதல் நாடாகவும் உள்ளது.

மாநாடுகள்

ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு உச்சி மாநாடு
  • பிரதம மந்திரி நரேந்திர மோடி வாரணாசியில் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

திட்டங்கள்

தேனீ திட்டம்
  • இரயில் பாதையில் யானைகளை வராமல் தடுக்கும் அசாமின் தேனீ திட்டம், நாட்டின் மற்ற பகுதிகளில் விரிவாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்தார்.
  • யானைகளை இரயில் பாதையில் இருந்து விலக்கி வைக்க தேனீக்களின் பதிவுசெய்யப்பட்ட ஒலியை பயன்படுத்தும் இது ஒரு எளிய சாதனம் ஆகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் விண்வெளித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்வெளித் திட்டத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பயணம் அதிகபட்சமாக 7 நாட்கள் இருக்கும்.  மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு தாங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்படும் விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் விண்ணில் செலுத்தும்.

பாதுகாப்பு செய்திகள்

சிக்கிமில் 2,500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை இராணுவம் மீட்டுள்ளது
  • சிக்கிமில் இந்திய -சீனா எல்லையின் நாது லா பாஸ் மற்றும் சோம்கோ (சாங்கு) ஏரியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவில் சிக்கிய 2,500 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம்  காப்பாற்றியுள்ளது.

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு ‘இணைய பாதுகாப்பு பற்றிய ஒரு கையேடு’
  • சைபர் பாதுகாப்பிற்கான பல்வேறு அம்சங்களைப் பற்றி தெரிவிக்க பள்ளி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு பற்றிய ஒரு சிறு புத்தகத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
  • அடையாளத்திருட்டு, வேலை மோசடி, மின்னஞ்சல் ஏமாற்றுதல் போன்ற பல வகையான குற்றச் செயல்களைப் புத்தகம் விளக்குகிறது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

SAMPANN மென்பொருள்
  • லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு உதவி செய்ய தொலைத் துறையால் உருவாக்கப்பட்ட ஒரு விரிவான ஓய்வூதிய நிர்வாக அமைப்பான SAMPANN மென்பொருளை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

விளையாட்டு செய்திகள்

தென் ஆப்ரிக்கா Vs பாகிஸ்தான் கிரிக்கெட்
  • தென்னாபிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!