நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 25,26 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 25,26 2018

முக்கியமான நாட்கள்

டிசம்பர் 25 – நல்ல ஆட்சி தினம்
 • உத்திரப்பிரதேசத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95 வது பிறந்த தினம் நல்ல ஆட்சி தினமாகக் கருதப்படுகிறது.

தேசிய செய்திகள்

பீகார்
பாட்னா மிருகக்காட்சிசாலை மூடப்பட்டது
 • மிருகக்காட்சிசாலையில் ஆறு மயில்களைக் கொன்ற H5NI வைரஸ் உறுதிப்படுத்தியதன் பின்னர், பாட்னா மிருகக்காட்சிசாலை காலவரையற்று மூடப்பட்டது.
மகாராஷ்டிரா
வாஜ்பாய் சர்வதேச பள்ளிகள் தொடங்கப்பட்டன
 • மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் மும்பையில் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச பள்ளிகளை தொடக்கிவைத்தார்.
புது தில்லி
தில்லி  விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது
 • தில்லி விமான நிலையத்தில் பார்க்கக்கூடிய தொலைவு குறைந்தபட்ச அளவைக்காட்டிலும் குறைவாக இருந்ததனால் விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது மேலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
 • புறப்பட தேவையான குறைந்தபட்ச பார்க்கக்கூடிய தொலைவு 125 மீட்டர் ஆகும்.
தமிழ்நாடு
படுகர் பழங்குடியினர் சமூகத்தின் வருடாந்த ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது
 • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் படுகர் சமூகம் வருடாந்த ஹெத்தையம்மன் திருவிழாவை கொண்டாடியது. படுகர் நீலகிரிகளில் உள்ள பழங்கால பழங்குடியினர் சமூகமாகும்.

சர்வதேச செய்திகள்

ஈராக் நாடு கிறிஸ்துமஸ் தினத்தை  ஒரு பொது விடுமுறை தினமாக அறிவித்தது
 • நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தை விடுமுறை தினமாக ஈராக் அறிவித்துள்ளது.
மரிஜுவானாவை  மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்த  தாய்லாந்து ஒப்புதல் அளித்தது
 • தாய்லாந்து மருத்துவ பயன்பாடு மற்றும் ஆராய்ச்சிக்காக உரிமம் பெற்ற மரிஜுவானா பயன்பாட்டை அங்கீகரித்தது.
 • இந்த ஒப்புதலானது உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, உடைமை மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானா பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்கியது.
 • தென்கிழக்கு ஆசியாவில் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல் நாடு தாய்லாந்து ஆகும்.
இங்கிலாந்து அமைச்சர்கள்  டிரோன் பயனர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுவர் என  எச்சரித்துள்ளனர்
 • பிரிட்டனின் பாதுகாப்பு மந்திரி டிரோன்களை பொறுப்பற்ற முறையில் அல்லது குற்றம் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்  என்று கூறினார்.
வடகிழக்கு மற்றும் தென் கொரியா சேர்ந்து கொண்டாடும் முக்கிய நிகழ்வு
 • வட கொரியாவிற்கு தென் கொரிய பிரதிநிதி குழுவினர் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், இரண்டாக பிரிந்துள்ள தீபகற்பம் முழுவதும் சாலைகள் மற்றும் இரயில்வே இணைப்புகளை மீண்டும் இணைப்பதற்கான ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ரஷ்யா உக்ரேனில் பொருளாதார தடைகளை விரிவுபடுத்தியுள்ளது
 • நவம்பர் மாத தொடக்கத்தில் பிளாக்லிஸ்ட்டில் 250 க்கும் அதிகமான மக்கள் மற்றும் வணிகங்களை  சேர்த்ததன்  மூலம் ரஷ்யா அதன் பொருளாதாரத் தடைகளை உக்ரேனில் விரிவுபடுத்தியுள்ளது.
ஜப்பான் IWC ல் இருந்து விலக  முடிவு செய்துள்ளது
 • ஜப்பான் சர்வதேச திமிங்கல வேட்டை கமிஷன் ( IWC ) லிருந்து விலக முடிவு செய்துள்ளது மற்றும் அடுத்த ஆண்டு ஜூலையிலிருந்து திமிங்கல வர்த்தகம்  தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
 • சர்வதேச திமிங்கல வேட்டை கமிஷனின்(IWC) மூலம் அளிக்கப்பட்ட தடை எதிர்ப்பை மீறி ஜப்பான் இந்த முடிவை எடுத்துள்ளது. 1951-ஆம் ஆண்டிலிருந்து IWC உறுப்பினராக இருக்கும் ஜப்பான் திமிங்கல வர்த்தகத்தை இதுவரை தடைசெய்து வைத்திருந்தது.

வணிகம் & பொருளாதாரம்

பங்களிப்பு குறிப்புகள் மூலம் முதலீடு அதிகரிக்கிறது
 • இந்திய மூலதன சந்தையில் பங்களிப்பு குறிப்புகள் மூலம் ரூ. 79,247 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையின் பகுதியாக இருக்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பதிவு செய்யாமல் பங்களிப்பு குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

மாநாடுகள்

முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான பின்தொடர்தல் குழுவின் முதல் கூட்டம்
 • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கும் இடையில் முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான பின்தொடர்தல் குழுவின் முதல் கூட்டம் ஈரான் துறைமுக நகரமான சபாஹரில் நடைபெற்றது.

திட்டங்கள்

அடல் ஆயுஷ்மன் உத்தரகண்ட் யோஜனா
 • ‘அடல் ஆயுஷ்மன் உத்தரகண்ட் யோஜனா’ உத்தரகண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

விளையாட்டு செய்திகள்

16 வது மும்பை மராத்தான்
 • 16 வது மும்பை மராத்தான் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ம் தேதி நடைபெறும். சுமார் 50,000 பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ஐந்து பளு தூக்கும் வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்
 • 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட சிறுநீர் மாதிரிகள் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், ஐந்து பளு தூக்கும் வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பு பாரிஸில்  அறிவித்தது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here