நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 21 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 21 2018

தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம்

பல தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் கட்காரி

  • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் ரோயிங்கில் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். லோஹித் மற்றும் திபாங் ஆற்றின் மீது இரண்டு பாலங்களை அவர் திறந்து வைத்தார்.

மகாராஷ்டிரா

வெங்காய விவசாயிகளுக்கு ரூபாய் 150 கோடி நிவாரணம்

  • மகாராஷ்டிரா அமைச்சரவை நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை விற்கப்பட்ட வெங்காயத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 200 கூடுதலாக வழங்க ஒப்புதல்.
  • மிகக் குறைந்த விலையில் தங்கள் உற்பத்தியை விற்க வேண்டிய வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூபாய் 150 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது.

புது தில்லி

மூடுபனி பாதுகாப்பு சாதனங்கள்

  • மூடுபனி பாஸ்[PASS] சாதனம் என்பது ஒரு உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (ஜி.பி.எஸ்) அடிப்படையிலான கையடக்கக் கருவி, இது பனிக் காலத்தில் ஜியோ-ஃபென்ஸ் ரேஞ்சுக்குள்ளாக எந்தவொரு இடையூறு எப்போது வந்தாலும் குழுவினருக்கு ஒலி காட்சி எச்சரிக்கை மூலம் உதவுகிறது.

சர்வதேச செய்திகள்

.நா. பாதுகாப்பு சபை ஏமனுக்கு பார்வையாளர்களை அனுப்ப வாக்களிப்பு

  • ஐ.நாவின் பாதுகாப்புக் கவுன்சில் ஏமனின் ஹொடிடா பகுதியில் போரிடும் கட்சிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக ஏமனுக்கு பார்வையாளர்களை அனுப்ப, ஒப்பந்தத்தை கண்காணிப்பதற்கான மேம்பட்ட ஐ.நா. குழுவை அங்கீகரிக்க வாக்களிக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்

  • ஆப்கானிஸ்தானில் உள்ள 14,000 அமெரிக்க துருப்புக்களில் 5,000-க்கும் மேலான வீரர்களை திரும்பப் பெற அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டம்.

அறிவியல் செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்.நாசாவின் செரீனா அவுன்-சான்ஸ்லர், ரஷ்ய செர்ஜி ப்ரோகொபீவ் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி நிறுவன வீரரான அலெக்ஸாண்டர் கெர்ஸ்ட் ஆகியோருடன் ரஷ்ய சோயுஸ் காப்ஸ்யூல் கஜகஸ்தானில் பனி மூடிய புல்வெளியில் இறங்கியது.

வணிகம் & பொருளாதாரம்

ஸ்டார்ட் அப்கள் எதிர்நோக்கும் வரிப் பிரச்சினைகளைக் கண்காணிக்க குழு அமைப்பு

  • ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஏஞ்ஜல் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து வரி விவகாரங்களையும் ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தரவரிசை & குறியீடு

உலக பேட்மிண்டன் தரவரிசை

  • சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி பி.வி. சிந்து 3வது இடம் பிடித்துள்ளார்.

SDG இந்தியா குறியீடுஅடிப்படை அறிக்கை 2018

  • நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்கு,SDG இந்தியா குறியீடு : அடிப்படை அறிக்கை 2018- ஐ புது தில்லியில் வெளியிட உள்ளது. செப்டம்பர் 2015-இல் தொடங்கப்பட்ட SDG-கள், உலகளவில் செயல்படுத்தி மூன்று  ஆண்டுகள் நிறைவு.

நியமனங்கள்

  • WV ராமன் – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்

திட்டங்கள்

சிஎன்ஜி[CNG] வரிசை மேலாண்மை அமைப்பு (QMS)

  • பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்தின் (IGL) பல்வேறு டிஜிட்டல் வாடிக்கையாளர் முன்முயற்சிகளை தொடங்கிவைத்தார். இவை சிஎன்ஜி[CNG] வரிசை மேலாண்மை அமைப்பு (QMS) மற்றும் சமூக CRM ஆகியவை அடங்கும். சி.என்.ஜி-ல் இயக்கப்படும் பஸ்கள் விரைவில் பசுமைத் தாழ்வாரங்களில்[green corridors] தொடங்கப்படும்.

ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்கள்

  • கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு (SAM) மற்றும் மருத்துவ சிக்கல்களுடன் உள்ள குழந்தைகளுக்கு வசதி சார்ந்த பராமரிப்பு வழங்க நாடு முழுவதும் 1151 NRC க்கள் தேசிய சுகாதார மிஷன் (NHM) கீழ் நிறுவப்பட்டுள்ளன.

கலா ​​உத்சவ்

  • ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் சார்பில், கலா உத்சவ் என்ற கலாச்சார போட்டி, மாணவர்களுக்கு நடத்தப்படும். இசை, நடனம், ஓவியம், நாடகம், காண்கலை என, பல தலைப்புகளில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.  பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மத்திய அரசு, ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை, ஆண்டு தோறும் நடத்துகிறது.

விளையாட்டு செய்திகள்

பி.சி.சி.. ஊழல் எதிர்ப்பு அலகை விரிவுபடுத்துகிறது

  • பிசிசிஐ அமைப்பானது அதன் ஊழல் எதிர்ப்பு அலகை(ACU) விரிவுபடுத்துகிறது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!