நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 23 & 24 2020

0
23rd & 24th February 2020 Current Affairs Tamil
23rd & 24th February 2020 Current Affairs Tamil

தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக  அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான மோட்டேரா மைதானத்தை திறந்துவைக்கவுள்ளார்.

மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் கூட்டாக உரையாற்றவுள்ளனர். நமஸ்தே டிரம்ப் நிகழ்வின் போது அரங்கத்தில் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை குறிக்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தேசிய ஆர்கானிக் உணவு விழாவை ஹர்சிம்ரத் கவுர் பாடல் திறந்து வைத்தார்

புதுடில்லியில் தேசிய ஆர்கானிக்  உணவு விழாவை உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த மூன்று நாள் தவிழா கரிம சந்தையை வலுப்படுத்துவதையும், கரிம விளைபொருட்களின் உற்பத்தியில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய இராணுவம் புதிய தலைமையகத்தைப் புது தில்லியில் நிறுவ உள்ளது

பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் டெல்லியில்  இராணுவ தலைமையகத்தின் புதிய கட்டிடமான “தல் சேனா பவன்” க்கு அடிக்கல் நாட்டினார். தல் சேனா பவன் ஆனது ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீடு விதிமுறைகளின் படி இக்கட்டிடம் கட்டப்பட உள்ளது. இது “உதய சூரியன்” போல வடிவமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 39 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.

இராணுவத் தலைமையகம் தற்போது டெல்லியின் ரைசினாவில்  உள்ள சவுத் பிளாக்கில் அமைந்துள்ளது.

சர்வதேச செய்திகள்

இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா சீனாவை விஞ்சியது

இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக அமெரிக்கா முதல் இடத்தில்  உள்ளது. இதேபோல், 2019-20 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 68 பில்லியன் டாலர்களாக இருந்தது, அதே காலகட்டத்தில் சீனாவுடன் வர்த்தகம்  கிட்டத்தட்ட 65 பில்லியன் டாலராக உள்ளது.

மொழி இயக்க தியாகிகள் தினம் “ஷாஹீத் திபாஷ் பங்களாதேஷில் அனுசரிக்கப்பட்டது

1952 பிப்ரவரி 21 ஆம் தேதி டாக்காவில் நடந்த பாகிஸ்தான் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது உயிர் இழந்த மொழி இயக்கத்தின் தியாகிகளை நினைவுகூருவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் பிப்ரவரி 21 ஆம் தேதி பங்களாதேஷில் ‘அமர் ஏகுஷே’ என்று அழைக்கப்படும் “ஷாஹீத் திபாஷ்” அனுசரிக்கப்பட்டது.

மாநில செய்திகள்

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் சித்ரா பாரதி திரைப்பட விழா கொண்டாடப்பட்டது

சித்ரா பாரதி திரைப்பட விழா (அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. இது இந்த திருவிழாவின் மூன்றாவது பதிப்பு ஆகும். முதலாவது பதிப்பு மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், 2016 ஆம் ஆண்டு  டெல்லியின் சிரி கோட்டை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ் காய் ஆகியோர் இவ்விழாவை திறந்து வைத்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்க இருப்புக்களை கண்டுபிடித்தது

இந்தியாவின் புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் தங்க இருப்புக்களைக் கண்டறிந்துள்ளது. இந்த இருப்புக்கள் சுமார் 3000 டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது இந்தியாவின் தற்போதைய தங்க இருப்புகளில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு ஆகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இருப்பு மதிப்பு ரூ .12 லட்சம் கோடி.

நியமனங்கள் மற்றும் ராஜினாமா

லியோ வரட்கர் அயர்லாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

லியோ வரட்கர் அயர்லாந்தின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் இடைக்காலத் தலைவராக நீடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் நாட்டின் தேர்தலுக்கு பின்னர் அடுத்த பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர் தொடர்ந்து இடைக்கால தலைவராக நீடிப்பார்.

USIBC அதன்  புதிய தலைவராக விஜய் அத்வானியை நியமித்து உள்ளது

அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) விஜய் அத்வானியை அதன் உலகளாவிய இயக்குநர்கள் குழுவின் புதிய தலைவராக நியமித்துள்ளது. இதற்கு முன்னர், அவர் 2020 ஜனவரியில் வாரியத்தின் நிர்வாகத் தலைவராக பணியாற்றினார்.

உலகளாவிய இயக்குநர்கள் குழுவின் இரண்டு புதிய உறுப்பினர்கள் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணைத் தலைவர் டிம் காஹில் மற்றும் ஜி.இ. தெற்காசியா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாலாஷிகர் ஆகியோரை கவுன்சில் நியமித்து உள்ளது.

வணிக செய்திகள்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்  வளர்ச்சி 2019-20ல் 4.9% ஆக இருக்கும் என NCAER கணித்துள்ளது

NCAER , நடப்பு நிதியாண்டான 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது, இது தேசிய புள்ளிவிவர அலுவலகம்(National Statistical Office) மதிப்பிடத்தை விட 5 சதவீதம் குறைவாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்திய ரயில்வே  ASKDISHA போர்ட்டலின் மூலம் குரல் வலி சேவையை  புகுத்தியுள்ளது

வாடிக்கையாளர்களுடன் இந்தி மொழியில் உரையாட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ASK DISHA  சாட்போட்டின் சேவைகளை ரயில்வே அமைச்சகம் மேம்படுத்தி உள்ளது. இந்தியா ரயில்வேயில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பான  ரயில் பயணிகளின் கேள்விகளுக்கு விடையளிப்பது  இதன் நோக்கமாகும்.

செயற்கை நுண்ணறிவுஅடிப்படையிலான ASKDISHA வை  இந்திய ரயில்வே 2018 அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.

விளையாட்டு செய்திகள்

இந்தியாவின் 13 வயதான கிராண்ட்மாஸ்டர் டி குக்கேஷ் 34 வது கேன்ஸ் ஓபனில் வெற்றி பெற்றார்

இந்தியாவின் 13 வயதான கிராண்ட்மாஸ்டர் டி குக்கேஷ் பிரான்சில் நடந்த 34 வது கேன்ஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதி சுற்றில் குக்கேஷ் 7.5 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு

டென்மார்க்கில் நடந்த ஹில்லெரோட் 110 வது ஆண்டுவிழா ஓபன் போட்டியிலும் தமிழகத்தை சேர்ந்த  குக்கேஷ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AIBA உலகக் கோப்பை 2020 ஆம் ஆண்டிற்கான  பதிப்பை ரஷ்யா நடத்தவுள்ளது

ஐரோப்பாவின் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற கூட்டத்தில் AIBA  உலகக் கோப்பை 2020 ஆம் ஆண்டிற்கான பாதிப்பை நடத்தும் முதல் நாடு ரஷ்யா என முடிவு செய்யப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை போட்டியில்  75 வது ஆண்டு நினைவாக கருப்பொருள்  “அமைதிக்கான குத்துச்சண்டை” என்பதாகும்.

100 கிரிக்கெட் போட்டிகளை விளையாண்டுள்ள முதல் வீரர் என்ற என்ற பெருமையை ரோஸ் டெய்லர் பெற்றார்

நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ரோஸ் டெய்லர் ஏற்கனவே டெஸ்ட்  மற்றும் ஒருநாள் போட்டிகள் முறையே 7174 மற்றும் 8570 ரன்கள் எடுத்துள்ளார். மற்றும் டி 20 போட்டியில் 1909 ரன்கள் எடுத்துள்ளார்.

முக்கிய நாட்கள்

மத்திய கலால்(உற்பத்தி) வரி தினம் 24 பிப்ரவரி 2019 அன்று கொண்டாடப்பட்டது

மத்திய கலால் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி செலுத்துவதின் முக்கியத்துவத்தை இந்த நாள் உணர்த்துகிறது.

Download PDF Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!