நடப்பு நிகழ்வுகள் – 31 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 31 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 31 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 31 மே 2023

தேசிய செய்திகள்

இளைஞர்கள் – SPIC MACAY மாநாடு நாக்பூரில் தொடக்கம்.
  • இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசையை ஊக்குவிப்பதற்கான அமைப்பின் 8வது சர்வதேச மாநாடானது -“SPIC MACAY” மே 29 அன்று நாக்பூரில் உள்ள “விஸ்வேஸ்வரயா தேசிய தொழிற்பயிற்சி கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இன்க்ரெடிபிள் இந்தியா அமைப்பும் மத்திய கலாச்சார அமைச்சகமும் இணைந்து இந்த கலாச்சார மாநாட்டை ஜூன் 4ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறையினருக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இசை கற்பவர்களுக்கு “குருகுல ஆசிரமம்” முறைப்படி சூழலை ஏற்படுத்துவதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஆனது துபாயில் “கிரிப்டோ தணிக்கை குறித்த தனித்துவமான மாநாட்டை” நடத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமானது(ICAI) துபாயில் ஒரு பொதுக் கொள்கை மற்றும் கிரிப்டோ, தணிக்கை துறையில் வளர்ந்து வரும் தரநிலைகளை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிடத்தக்க மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த மாநாடானது தணிக்கை நிறுவனங்களுக்குள் தர மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

புகை உமிழ்வை குறைக்க BPCL நிறுவனமானது “எத்தனால்-டீசல்” கலவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிலைத்தன்மைக்கான நிகர மதிப்பை பூஜ்ஜியமாக்குவதற்கும், புகை உமிழ்வைக் குறைப்பதற்கும் “டீசல்-எத்தனால்” இன் கலவையை அறிமுகப்படுத்தி உற்பத்தியை தொடங்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது அதன் முதன்மையான “நிகர பூஜ்ஜிய இலக்கை”(net zero goal) 2040 க்குள் எட்டும் என BPCL நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதியை 1 வருடத்திற்கு நீட்டித்துள்ளது.
  • 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதியின் காலத்தை நீடிப்பதற்கான திருத்த ஒப்பந்தம் மே 30 அன்று இலங்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 
  • இந்த கடன் வசதியானது “அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவியாகும்.

சர்வதேச செய்திகள்

2050 ஆம் ஆண்டுக்குள் “பூஜ்ஜிய புகை உமிழ்வு இல்லாத பொதுப் போக்குவரத்தை” அடைதல் – துபாய் இலக்கு. 
  • துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) 2050 ஆம் ஆண்டுக்குள் “பூஜ்ஜிய புகை உமிழ்வு இல்லாத பொதுப் போக்குவரத்தை” அடைவதை புதிய இலக்காக நிர்ணயித்துள்ளது.
  • பொது போக்குவரத்து, கட்டிடங்களின் வசதிகள் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய முக்கிய தொழிற் பகுதிகளிலும் “கார்பன் தடத்தை குறைப்பதையும், காலநிலை மாற்றத்தைக்  குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

தெலுங்கானாவின் அனைத்து மாவட்டங்களிலும் போதை ஒழிப்பு மையங்கள் திறப்பு.
  • “குடிப்பழக்கம் மற்றும் பிற போதைப்பொருட்களுக்கு” அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு போதை ஒழிப்பு மையமாவது நிறுவப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. 
  • இந்த மையத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு “இலவச சிகிச்சை, யோகா மற்றும் தொழிற்முறை ஆலோசனை வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இந்த முன்னெடுப்புக்கு முன்னோடியாக ஆந்திரப் பிரதேசத்தில் 2014 இல்,  13 மாவட்டங்களில் 18 போதை ஒழிப்பு மையங்களை உருவாக்கியுள்ளது.

ஜப்பானின் ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி மதிப்பிலான முதலீட்டிற்கு தமிழக அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  கையெழுத்திடப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டிற்கு பல புதிய முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுவரவும், 2024 ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஜப்பானிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறை பயணமாக முதல்வர், ஜப்பானுக்கு சென்றிருந்த நிலையில் பல்வேறு நடவடிக்கை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக், மிட்சுபா, ஷிமிசு, கோயி,  சடோ-ஷோஜி மெட்டல் என 6 நிறுவனங்களுடன் தமிழகத்தின் பல்வேறு தொழிற்துறைகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியமனங்கள்

CAG கிரிஷ் சந்திர முர்மு WHO இன் கணக்காய்வாளராக மீண்டும் தேர்வு.
  • இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) கிரிஷ் சந்திர முர்மு 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) வெளிப்புற தணிக்கையாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் ஏற்கனவே 2019 முதல் 2023 வரையிலான நான்கு வருட காலத்திற்கு WHO இல் இந்த பதவியை வகித்து வந்தார். ஜெனீவாவில் உள்ள 76-ஆவது உலக சுகாதார சபையில் மே 29 அன்று நடைப்பெற்ற தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்பில் 156 வாக்குகளில் 114 பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராஷ்டிராவின் “ஸ்வச் முக் அபியானின்” புன்னகை தூதராக சச்சின் நியமனம்.
  • மே 30 அன்று மாநிலம் முழுவதும் “வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதை” நோக்கமாகக் கொண்ட மகாராஷ்டிராவின் ஸ்வச் முக் அபியான் திட்டத்திற்கு “புன்னகை தூதராக” சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • SMA என சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்வச் முக் அபியான் திட்டமானது, இந்திய குடிமக்கள் மத்தியில் வாய்வழி சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்திய பல் மருத்துவ சங்கத்தின் (IDA) தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

HAI இன் தலைவராக “திக்விஜய் சவுதாலா” தேர்வு.
  • இந்திய ஹேண்ட்பால் சங்கத்தின் (HAI) தலைவராக திக்விஜய் சவுதாலா மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளராக “ஜெகன் மோகன் ராவும்”சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த தேர்வானது இந்திய ஹேண்ட்பால் சங்கத்தில் எதிர்கொள்ளும் பல மாத பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) மே 29 அன்று என அறிவித்துள்ளது. 

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக “நாராயணசாமி” நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மருத்துவப் பணியில் 33 வருட அனுபவத்தைக் கொண்ட இவரின் நியமனம், மூன்று ஆண்டுகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகத்தின் “10வது துணைவேந்தராக” இருந்த டாக்டர் சுதா சேஷய்யனுக்குப் பிறகு நாராயணசாமி பதவியேற்றுள்ளார்.
  • கோவிட் தொற்றின் போது அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு மாநில அரசால் மதிப்பிற்குரிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தொல்லியல் ஆய்வுகள்

2100 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
  • மதுரை மாவட்டம், மேலுார் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்பு பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • புலி மலை பாறையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என, 100க்கும் மேற்பட்ட சிகப்பு நிற ஓவியங்கள் உள்ளன. இது, கற்காலத்தை சேர்ந்தவை என, கருதப்படுகிறது.மதுரையில் ஆறு இடங்களில் இதுபோன்ற ஓவியங்கள் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

ஐபிஎல் வரலாற்றில் 5வது முறையாக கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
  • மே 29 அன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தனது “5வது ஐபிஎல் பட்டத்தை” வென்றுள்ளது.
  • டெவோன் கான்வே “ஆட்ட நாயகன்” பட்டத்தையும், ஷுப்மான் கில் போட்டியின் “சிறந்த வீரர் பட்டத்தையும்” இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பெற்றுள்ளனர்.

இரங்கல் செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியான பாலு என்கிற சுரேஷ் தனோர்கர் காலமானார்.
  • மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான 47 வயது தனோர்கர் மே 26 அன்று, “சிறுநீரக கல் அறுவை சிகிச்சைக்காக” நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி மே 30 அன்று உயிர் துறந்தார்.
  • தற்போது ஆட்சியின் மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

புகையிலை எதிர்ப்பு தினம் 2023
  • புகைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் உடல்நல கோளாறுகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த “உலக புகையிலை எதிர்ப்பு தினம்” ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. 
  • “எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல”(We need food, not tobacco) என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

கோவா மாநில தினம்
  • மே 30, 1987 அன்று கோவா மாநில அந்தஸ்தைப் பெற்றது. பரப்பளவில் மிகச்சிறிய மாநிலமான கோவா,தனது 36வது ஆண்டு விழாவைக்  இந்த ஆண்டு கொண்டாடுகிறது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!