நடப்பு நிகழ்வுகள் – 30 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 30 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 30 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 30 மே 2023

தேசிய செய்திகள்

IIFA 2023 வெற்றியாளர்களின் பட்டியல் வெளியீடு.
  • மே 27,2023 அன்று அபுதாபியில் நடைப்பெற்ற IIFA விருதுகள் 2023 நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான IIFA வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு,

பிரிவுகள் வெற்றியாளர்கள்  படம் 
சிறந்த திரைப்படம் த்ரிஷ்யம் 2
சிறந்த இயக்குனர் ஆர் மாதவன் ராக்கெட்ரி: நம்பி விளைவு
சிறந்த நடிகர்(பெண்) ஆலியா பட் கங்குபாய் கதியவாடி
சிறந்த நடிகர்(ஆண்) ஹ்ரிதிக் ரோஷன் விக்ரம் வேதா
இந்திய சினிமாவில் மிகச்சிறந்த சாதனை கமல்ஹாசன்
இந்தியாவினால் உருவாக்கப்படும் இரண்டாவது நீர்மின் திட்டத்திற்கு நேபாள அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • மே 28 அன்று நேபாளத்தில் இந்தியாவின் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் (SJVN) லிமிடெட் தனது இரண்டாவது நீர்மின் திட்டத்தை நேபாள நாட்டில் உருவாக்க அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
  • இந்த திட்டத்தின் மூலம் இந்தியா மற்றும் நேபாளத்தின் கூட்டுறவுகள் மேம்படும் என நேபாள பிரதமர் கூறியுள்ளார். இதில் முன்னதாகவே  SJVN ஆனது 900-MW அருண்-III நீர்மின் திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஷார்ஜா வணிக மற்றும் தொழில்துறையானது(SCCI) இந்தியாவிற்கான வர்த்தகப் பணி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறையானது இந்தியாவிற்கான வர்த்தக பணி திட்டத்தை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த தொடங்கியுள்ளது.
  • இந்த திட்டமானது  இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஷார்ஜா ஏற்றுமதி மேம்பாட்டு மையமானது (SEDC) ஏற்பாடு செய்திருந்த ஆராய்ச்சி பணியானது, மே 29 முதல் ஜூன் 2, 2023 வரை நடைபெற்று மேம்பாட்டு உத்திகளை வழங்கும் என ஷார்ஜா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

சீனாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானமானது தனது முதல் வணிகப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.
  • சீனாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் C919 விமானமானது மே 28 அன்று தனது முதல் வணிக விமானத்தில் ஷாங்காயிலிருந்து பெய்ஜிங்கிற்கு சுமார் இரண்டு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்களில் வெற்றிகரமாக பறந்தது.
  • சீன அரசாங்கத்தால் நடத்தப்படும் “சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சால்” உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் 160 பயணிகள் இருந்தனர் என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

ஜஸ்டின் டிரிட்டின் “Anatomy of a Fall” 2023 கேன்ஸ் திரைப்பட விழாவில் பால்ம் டி’ஓரை வென்றது. 
  • மே 27 அன்று பிரான்சில் நடைப்பெற்ற 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில், சாண்ட்ரா ஹுல்லர் நடித்த  கொலை-மர்ம பிரிவில் வெளிவந்த “Anatomy of a Fal” என்ற படத்திற்காக பிரெஞ்சு இயக்குனர் ஜஸ்டின் ட்ரைட் “பால்ம் டி’ஓர் பரிசைப் பெற்றுள்ளார்.
  • பாம் டி’ஓர் திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும். மதிப்புமிக்க இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றுள்ள மூன்றாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

அசாமின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.
  • அசாமின் முதல் அதிநவீன வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி மே 29 அன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த ரயில் சேவை இந்தியாவின் 18வது மற்றும் அசாமின் முதல் பாரத் ரயில் சேவையாகும். இந்த புதிய ரயில் சேவை கவுகாத்தி மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே 411 கிமீ தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்கும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கலாலி மோராவில் “ஹில் காக்கா தினம்” அனுசரிப்பு.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில், 2003 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது “பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள்” வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் வகையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் உள்ள மக்கள் அனைவராலும், கடந்த மே 27 அன்று “ஹில் காகா தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
  • 2003ஆம் ஆண்டில் எல்லை மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை ஒழிக்கும் சர்வினாஷ் என்ற நடவடிக்கையை(Operation Sarvinash) உள்ளூர்வாசிகளுடன் இந்திய ராணுவம் இணைந்து நடத்தியபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

நியமனங்கள்

மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக “பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா” பதவியேற்பு.
  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா பதவியேற்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, மே 29 அன்று ஸ்ரீவஸ்தவாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.தற்போதைய சிவிசி சுரேஷ் என் பட்டேலின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
  • திரு.ஸ்ரீவஸ்தவா,அசாம்-மேகாலயா பணிப்பகுதியில் (Cadre) 1988-தொகுதியை(Batch) சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியஆட்சிப்பணி அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இஸ்ரோ அடுத்த தலைமுறை “வழிசெலுத்தல்” செயற்கைக்கோளான “என்விஎஸ்-01” ஐ விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இஸ்ரோவானது மே 29 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்12ன் ரகமான “என்விஎஸ்-01” செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. 
  • சுமார் 2232 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளானது இந்தியாவின் வழிசெலுத்துதல்(NavIC) சேவைகளுடன் இணைந்து செயல்படுவதற்கு திட்டமிடப்பட்ட “இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களின்  பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.இந்த செயற்கைகோளில் முதன்முறையாக “உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுக் கடிகாரமானது இணைந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

விருதுகள்

கோவாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தாமோதர் மௌசோவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கோவாவை சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தாமோதர் மௌசோ  நாட்டின் இலக்கிய படைப்பிற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதை அம்மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையிடமிருந்து மே 27 அன்று பெற்றுள்ளார்.
  • இதற்கு முன் மௌசோவின் புகழ்பெற்ற ‘கார்மெலின்’ என்ற நாவலிற்கு 1983ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. மௌசோவின் 25 நூல்கள் கொங்கனி மொழியிலும் ஒன்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

ஹெச்எஸ் பிரணாய் முதல் BWF உலக டூர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இந்தியாவை சேர்ந்த எச்.எஸ்.பிரணாய், மலேசியா மாஸ்டர்ஸ் 2023ல் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கீழ் தங்கம் வென்றுள்ளார்.
  • HS பிரணாய், சீனாவின் வெங் ஹாங் யாங்கை 21-19, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் BWF உலக டூர் பட்டத்தை வென்றுள்ளார்.

CAVA மகளிர் சேலன்ஞ்ச் கோப்பை 2023க்கான போட்டியில் இந்தியா பட்டத்தை வென்றுள்ளது.
  • மே 28 அன்று காத்மாண்டுவில் உள்ள திரிபுரேஷ்வரின் தேசிய விளையாட்டு கவுன்சிலின் ஹாலில் நடைப்பெற்ற NSC-CAVA பெண்கள் வாலிபால் (கைப்பந்து) கோப்பை 2023ன் இறுதிப் போட்டியில் இந்தியா கஜகஸ்தானினுக்கிடையேயான இறுதி போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியா பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

 “13வது ஹாக்கி இந்தியா சப் ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் 2023” போட்டியில் உத்தரப் பிரதேச ஹாக்கி அணி வெற்றி. 
  • மே 28 அன்று ஒடிசாவின் பிர்சா முண்டா ஹாக்கி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஒடிசாவின் ஹாக்கி அணியை தோற்கடித்து, உத்தரபிரதேச ஹாக்கி அணியானது 13வது ஹாக்கி இந்தியா சப் ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் 2023 போட்டியை வென்றுள்ளது.
  • இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரபிரதேச ஹாக்கி அணியானது 7-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா ஹாக்கி அணியை தோற்கடித்து வெற்றி கண்டது என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும். 

உலகளாவிய  மொனாக்கோ ஜிபி 2023 போட்டியில் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வெற்றி.
  • 2023ன் ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பின் ஆறாவது சுற்றான “மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ்” போட்டியில் ரெட் புல் நிறுவனத்தை சார்ந்த ‘மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்” வெற்றி பெற்றுள்ளார்.
  • 2023 இல் அவர் தொடங்கியதில் இருந்து இது அவரது நான்காவது வெற்றியாகும்.இதுவரை தொடர்ந்து பெர்னாண்டோ அலோன்சோ மற்றும் எஸ்டெபன் ஓகான் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

முக்கிய தினம்

உலக செரிமான ஆரோக்கிய தினம் 2023
  • செரிமான கோளாறு குறித்த பொதுமக்களுக்கு தொழில்முறை விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கவனம் செலுத்துவதற்காக உலக செரிமான ஆரோக்கிய தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று கொண்டாடப்படுகிறது.
  • “Your Digestive Health: A Healthy Gut From the Start”-என்பது இந்த ஆண்டின் உலக செரிமான ஆரோக்கிய தினத்திற்கான உலக இரைப்பைக் குடலியல் அமைப்பானது (WGO) கருப்பொருளை அமைத்துள்ளது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!