CTET July Session 2023 தேர்வு முடிவுகள் எப்போது? – முழு விவரம் இதோ!

0
CTET July Session 2023 தேர்வு முடிவுகள் எப்போது? - முழு விவரம் இதோ!
CTET July Session 2023 தேர்வு முடிவுகள் எப்போது? - முழு விவரம் இதோ!
CTET July Session 2023 தேர்வு முடிவுகள் எப்போது? – முழு விவரம் இதோ!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

CTET July Session 2023 தேர்வு முடிவுகள்:

இந்த ஆண்டுக்கான CTET 2023 இந்தியா முழுவதும் 136 நகரங்களில் 3,121 தேர்வு மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 29,03,903 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர் அவர்களில் 15,01,719 பேர் தாள் 1 க்கும், 14,02,184 பேர் தாள் 2 க்கும் விண்ணப்பித்துள்ளனர். பதிவு செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் ஆகஸ்ட் 20 ஆம் தேதியான நேற்று தேர்வெழுதினர்.

Follow our Instagram for more Latest Updates

பசுமைப் புரட்சிக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், விண்ணப்பதாரர்களின் நலனுக்காகவும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) 2023 இன் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “இந்த முயற்சியின் மூலம், அதிக அளவு பணத்தையும், காகிதம், மரங்கள் மற்றும் நீர் போன்ற மதிப்புமிக்க வளங்களையும் சேமித்து, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்” என வாரியம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

Tata Steel நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.19,655/- || தேர்வு கிடையாது!

CTET 2023 முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு CBSE தற்காலிக பதில் விடை குறிப்பை வெளியிடும், மேலும் விண்ணப்பதாரர்கள் ஒ அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும். அதனை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு, ஜூலை 2023 தேர்வுக்கான இறுதி CTET விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in இல் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களின் டிஜிட்டல் மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!