TNPSC ஆட்சி மொழி பாடக்குறிப்புகள்

0

ஆட்சி மொழி

மத்திய அரசின் ஆட்சி மொழி

  • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி, தேவநாகரி எழுத்துருவில் இந்தி மொழியாகும். எண்களின் வடிவம், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகையில், இந்திய எண்களின் சர்வதேச வடிவங்களில் அமைந்தவையாகும்.
  • இந்திய அரசியல் சட்டத்தின் தொடக்க நாளிலிருந்து தொடர்ந்து வருகிற பதினைந்து வருட காலம் வரையில், மத்திய அரசின் அனைத்து அதிகாரப்ப10ர்வ அலுவலர்களுக்காவும் ஆங்கில மொழியே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும்; காரணம், இப்புதிய அரசியல் சட்டத் தொடகத்திற்கு முந்தைய உடனடிப் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலமே இருந்துள்ளது.
  • மேலே குறிப்பிடப்பட்ட காலத்தில் ஆங்கில மொழியுடன் கூடுதலாக இந்தி மொழியின் பயன்பாட்டையும் இந்திய எண்களின் சர்வதேச வடிவத்துடன் கூடுதலாக தேவநாகரி வடிவ எண்களின் பயன்பாட்டையும் ஓர் உத்தரவின் மூலம் குடியரசுத் தலைவர் அனுமதிக்கவும் செய்யலாம். இது மத்திய அரசின் வேறெந்த அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகவும் இருக்கலாம்.
  • இந்தப் பிரிவில் இடம் பெற்றிருப்பது எதுவாக இருப்பினும் சொல்லப்பட்ட பதினைந்து வருட காலத்திற்குப் பின் (அ) ஆங்கில மொழி, அல்லது (ஆ) தேவநாகரி வடிவ எண்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைள நோக்கங்களுக்காக நாடாளுமன்றம் ஒரு சட்டமியற்றி வழங்கலாம்.

அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி குறித்த நாடாளுமன்ற ஆணையம் மற்றும் குழு

  • இந்த அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரத் தொடங்கியதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்குப் பிறகு அத்தகைய தொடகத்தில் இருந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் ஒரு கமிஷனை அமைக்கலாம்.
  • அந்த ஆணையம், அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறுபட்ட மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டதாக இருக்கும். இவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்யலாம். ஆணையத்தில் பின்பற்றப்பட்ட வேண்டிய விதிமுறைகளை உத்தரவு வரையறுத்துத் தரும்.

பின்வரும் அம்சங்களின் மீது குடியரசுத் தலைவருக்குத் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டியது இந்த ஆணையத்தின் கடமையாகும்.

  • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நோக்கங்கள், பயன்பாடுகளுக்கு இந்தி மொழியைப் படிப்படியாகப் பயன்படுத்துவது.
  • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாடுகள் எல்லாவற்றுக்குமோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு அல்லது மேலும் அதிகமான குறிப்பிட்ட நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வேண்டிய மொழி
  • விதி 348-ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் எல்லாவற்றுக்குமோ அல்லது ஏதேனும் குறிப்பிட்டவற்றுக்கோ பயன்படுத்தப்பட வேண்டிய மொழி
  • மத்திய அரசின் ஏதாவது ஒரு அல்லது மேலும் அதிகமான குறிப்பிட்ட நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய எண்களின் வடிவம்.
  • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையேயான தகவல் தொடர்புக்கான மொழி மற்றம் ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்குமிடையேயான தகவல் தொடர்பு மொழி மற்றும் இவற்றின் பயன்பாடு தொடர்பாக குடியரசுத் தலைவரால் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வேறு எந்த ஓர் அம்சம்.
  • ஆணையம் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கையில் இந்தியாவின் தொழில், கலாச்சார மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு மதிப்பளித்து முடிவு செய்வதுடன், பொதுச் சேவைகள் தொடர்பான களங்களில், இந்தி மொழி பேசாத பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நலன்கள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் ஆகியவற்றுக்கும் உரிய மதிப்பளித்து முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • முப்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட முடியும். அவர்களுள் இருபது பேர் மக்களவை உறுப்பினர்களாகவும் எஞ்சிய பத்துப்பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.
  • இவர்களை முறையே மக்களவை உறுப்பினர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின் விதிகளுக்கேற்ப ஒற்றை மாற்றத்தக்க வாக்குமூலம் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி அல்லது மொழிகள்

மாநிலத்தின் எல்லாவிதமான அல்லது ஏதேனும் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக அந்த மாநில்த்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மொழி அல்லது மொழிகள் அல்லது இந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது கூடுதலான மொழிகள் மாநில சட்டமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் ஏற்பளித்துப் பயன்படுத்தி வரலாம்.

  • மாநிலத்தின் எல்லாவிதமான அல்லது ஏதேனும் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக, அந்த மாநில்த்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மொழி அல்லது மொழிகள் அல்லது இந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது கூடுதலான மொழிகளை மாநில சட்டமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் ஏற்பளித்துப் பயன்படுத்தி வரலாம்.
  • இது அளிக்கப்பட்டிருப்பினும் மாநிலத்தின் சட்டமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் இவ்வாறு ஆட்சி மொழியைத் தேர்வு செய்யும் வரையில் மாநிலத்திற்குள் அத்தகைய அதிகாரப்ப10ர்வ நோக்கங்களுக்காக ஆங்கில மொழியே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துவரும்.
  • மாநிலத்திற்கும் இத்தகைய அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படத் தொடங்குவதற்கு முன்பு வரை உடனடிப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது ஆங்கில மொழியேயாகும்.

மத்திய அரசுக்கும், ஒரு மாநிலத்திற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்குமிடையேயான தகவல் தொடர்புகளுக்காக அதிகாரப்பூர்வ மொழிகள்

  • மத்திய அரசில் தற்போதைக்கு அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியே, ஒரு மாநிலத்திற்கும் அல்லது மற்றொரு மாநிலத்திற்குமிடையே அல்லது மத்திய அரசுக்கும், ஒரு மாநிலத்திற்குமிடையே அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு மொழியாகும்.
  • இவ்வாறு இருப்பினும், இரண்டு அல்லது அதற்கு மேல் மேலதிக எண்ணிக்கையில் மாநிலங்கள் இந்தி மொழியையே அத்தகைய மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு மொழியாகப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிற பட்சத்தில் அந்த மொழியே அத்தகைய. தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படலாம்.

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் ஒரு பகுதி மக்களால் பேசப்படுகிற மொழி தொடர்பான சிறப்பு விதி

அத்தகைய மாநில்த்தின் மக்கள் தொகையில் கணிசமானவர்களால் பேசப்படுகிற ஏதேனும் ஒரு மொழியை அந்த மாநில அரசு அங்கீகரிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர் என்று குடியரசுத் தலைவர் திருப்தியடையும் பட்சத்தில் அந்த மாநிலமும் முழுவதற்குமோ அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதிக்கோ அவர் வரையறுத்துக் குறிப்பிடும் பகுதிக்கு அந்த மொழியையும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அத்தகைய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படலாம் என்று ஆணையிடலாம்.

சட்டங்கள், மசோதாக்கள், பிறவற்றுக்காகவும் மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி

  • நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலமோ அல்லது வேறு வகையிலோ வழங்கும் வரையில் உச்சநீதிமன்றத்திலும் ஒவ்வோர் உயர்நீதிமன்றத்திலும் நடைபெறுகிற எல்லா செயல்முறைகளிலும் மற்றும் அதிகாரத்துவத் தன்மை வாய்ந்த அனைத்துப் பிரதிகளிலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டாக வேண்டும்.
  • இந்த சட்டப்பிரிவில் இடம்பெற்றுள்ள விதிகள் ஒருபுறம் இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மாநில்த்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தி மொழி அல்லது வேறு எந்த ஒரு மொழியும் அம்மாநிலத்தின் தனது முதன்மை இருப்பிடத்தைக் கொண்டுள்ள உயர்நீதிமன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்படுவதற்கு அதிகாரமளிக்கலாம்.
  • இவ்வாறு செய்வதற்கு அந்தமாநிலத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் மேற்கண்ட செயல்முறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்ப அம்மாநில ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் பதிப்பிக்கப்பட வேண்டும்.

மொழி தொடர்பான சில குறிப்பிட்ட சட்டங்களை நிறைவேற்றுவதற்கான சிறப்பு ஒழுங்குமுறை

  • இந்த அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரத் தொடங்கியதிலிருந்து பதினைந்து வருடங்கள் வரையிலான காலத்தில் மொழி தொடர்பான எந்த ஒரு மசோதா அல்லது சட்டத்திருத்தம் எதுவும் குடியரசுத்தலைவரின் முன் அனுமதியின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுள் எந்த ஒன்றிலும் அறிமுகம் செய்யப்படவோ அல்லது தாக்கல் செய்யப்படவோ கூடாது.
  • அரசியல் சட்டப் பிரிவு 344-ன் கீழ் நிறுவப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் அதே சட்டப்பிரிவின் கீழ் நிறுவப்பட்ட கமிட்டியின் அறிக்கை – இவையனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசீலனை செய்தபிறகு தவிர வேறெந்த சந்தர்ப்பத்திலும், குடியரசுத் தலைவர், அத்தகைய எந்த ஒரு மசோதாவையும் அறிமுகம் செய்வதற்கோ அல்லது அத்தகைய எந்த ஒரு திருத்தத்தையும் தாக்கல் செய்வதற்கோ தன்னுடைய அனுமதியை வழங்கக்கூடாது.

குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கோரிக்கை மனுக்களில் பயன்படுத்தப்பட்ட வேண்டிய மொழி

மத்திய அல்லது மாநிலத்தின் எந்த ஓர் அதிகாரி அல்லது அதிகாரத்துவ அமைப்பிற்கு எந்த ஒரு குறை தொடர்பாகவும் அதற்குத் தீர்வ காணும் பொருட்டு கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கு ஒவ்வொரு நபருக்கம் உரிமையுண்டு. அம்மனுவை மத்தியிலோ – மாநிலத்திலோ எது பொருந்துமோ அதற்கேற்ப பயன்படுத்தப்பட்டு வருகிற எந்த ஒரு மொழியிலும் சமர்ப்பிக்கலாம்.

தொடக்க நிலையில், தாய்மொழி வழியே கல்வி வழங்குவதற்கான வசதிகள்

  • ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வோர் உள்ளாட்சி அதிகார அமைப்பிலும் மொழிவாரி சிறுபான்மை மக்கள் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியின் தொடக்க நிலையில் கற்பித்தலுக்கான ஊடக மொழியாக தாய்மொழியையே பயன்படுத்துவதற்கப் போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தருவது. மாநில எல்லைக்குள் மேற்கண்ட அமைப்புகளின் கடுமையான அதிகபட்ச முயற்சியாக அமைய வேண்டும்.
  • மேலும் அத்தகைய வசதிகள் வழங்கப்படுமாறு செய்வதற்குப் பொருத்தமான அல்லது அத்தியாவசியமானவை என்று நாம் கருதும் அத்தகைய வழிகாட்டி நெறியாணைகளை எந்த ஒரு மாநிலத்திற்கம் குடியரசுத்தலைவர் பிறப்பிக்கலாம்.
    மொழிவாரி சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரி
  • மொழிவாரி சிறுபான்மை இன மக்களுக்காக ஒரு சிறப்பு அதிகாரி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாக வேண்டும். அரசியல் சட்டத்தின் கீழ் மொழிவாரி சிறுபான்மையின மக்களுக்காக என்று வழங்கப்பட்டுள்ள பாதுகாப்ப அம்சங்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் புலன் விசாரணை செய்தாக வேண்டிய கடமை இந்த சிறப்பு அதிகாரியினுடையதேயாகும்.
  • அவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்ட அனைத்து விவகாரங்கள் தொடர்பான தனது அறிக்கைகளை குடியரசுத் தலைவர் விதிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளுள் அந்த சிறப்பு அதிகாரி குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். குடியரசுத் தலைவர், தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய எல்லா அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தின் ஒவ்வோர் அவை முன்பும் தாக்கல் செய்வதற்கும், தொடர்புடைய மாநிலங்களின் அரசுகளுக்கு அவற்றை அனுப்பி வைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்.

இந்தி மொழியின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டி நெறி ஆணை

  • இந்தி மொழிமயின் பரவுதலுக்குரிய மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது மத்திய அரசினுடைய கடமையாகும். இந்தியாவின் பன்முகத் தன்மையில் அமைந்த கூட்டிணைவுக் கலாச்சாரத்தில் உள்ளடங்கியுள்ள எல்லாக் கூறுகளுக்காவும் உரிய ஒரு வெளிப்பாட்டு ஊடகமாகச் சேவை செய்யும் வண்ணம் இந்தியை வளர்த்தெடுப்பதும் மத்திய அரசின் கடமையாக உள்ளது.
  • எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற இந்திய மொழிகளிலும், இந்துஸ்தானியிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தி மொழியின் மேதைமை, வடிவங்கள் பாணி மற்றும் வெளிப்பாடுகளில் குறுக்கிட்டு இடையூறு செய்யாமல் அதனுடைய செழுமையைப் பாதுகாப்பதற்க அதை உள்வாங்கித் தன் வயமாகிக் சீரணித்துப் பயன்படுத்துவதும் அதன் கடமையே. அதே போல எங்கெல்லாம் தேவையோ அல்லது விரும்பத் தக்கதோ அங்கெல்லாம் அடிப்படையாக சமஸ்கிருதத்திலிருந்தும், இரண்டாவதாக பிற மொழிகளின் மீதிருந்தும் அதற்கான சொற்களஞ்சியத்திற்காக கோரிப் பெறுவதன் மூலமும் இந்தி மொழியின் செழுமையைப் பாதுகாப்பதும் மத்திய அரசின் கடமையே.

PDF Download

TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!