அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு விடுமுறை!!

0
அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு விடுமுறை!!
அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு விடுமுறை!!
அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு விடுமுறை!!

கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று:

கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பரவத் தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. நோய்த்தொற்றை தடுப்பதற்காக அரசு ஊரடங்கை பிறப்பித்தது. ஊரடங்கிற்கு பின்னர் தொற்று பரவலின் எண்ணிக்கை சற்று அதிகரித்து, பிறகு மெல்ல, மெல்ல குறைந்தது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

யுபிஎஸ்சி மாதிரி ஆளுமைத்தேர்வுகள் விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 3 கடைசி நாள்!!

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்த பின்னர் மாணவர்கள் தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்பினரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் பரவி வந்த காரணத்தால் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆசிரியருக்கு தொற்று:

கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியருக்கு 26ம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்பள்ளியில் 12ம் வகுப்பை சேர்ந்த 66 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர்.

விடுமுறை:

பிறகு, ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், “பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தேர்தல் முடிந்ததும் பள்ளி வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்படும்” என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!