1.5 லட்சம் பேருக்கு சம்பள உயர்வு – ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

0
1.5 லட்சம் பேருக்கு சம்பள உயர்வு
1.5 லட்சம் பேருக்கு சம்பள உயர்வு

1.5 லட்சம் பேருக்கு சம்பள உயர்வு – ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

நாட்டில் நிலவிவரும் கொரோனா பிரச்சனை மத்தியிலும் ஒரு சில ஐடி நிறுவனங்கள் ஊதிய உயர்வுடன் சம்பளத்தினை கொடுத்திருப்பது ஊழியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட். இன்னும் சில நிறுவனங்கள் அதற்கும் மேல் பணி உயர்வும் கொடுத்துள்ளன.

சம்பள உயர்வு வழங்கும் நிறுவனங்கள்..!

பிரான்சின் கேப்ஜெமினி அடுத்ததாக அமெரிக்காவின் காக்னிசண்ட் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான பாரத்பே இப்படி சில நிறுவனங்கள் தான் இந்த அசாதாரண நிலையிலும் கூட ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை வாரி வழங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளாக இருந்தாலும் அங்கு கணிசமாக அளவு இந்திய ஊழியர்களும் உள்ளனர்.

70% பேருக்கு சம்பள உயர்வு..!

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான கேப்ஜெமினி அதன் ஊழியர்களின் 70% பேருக்கு சம்பள உயர்வினை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இதன் மூலம் இதன் இந்தியா பணியாளர்கள் சுமார் 1.5 லட்சம் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ஒற்றை இலக்கில் உயர்வை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் பரிதவிக்கும் லாரி ஓட்டுனர்கள் – கோரிக்கை நிறைவேறுமா.?

மேலும் ஏ மற்றும் பி தர ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இது குறித்து கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் யார்டி நாங்கள் எந்த ஊழியர்களுக்கும் சம்பள குறைப்பு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஊழியர்களுக்கு பலன்..!

டிஜிட்டல் பேமென்ட் ஸ்டார்டப் நிறுவனமான பாரத்பே நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வினை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான காக்ணிசன்ட் நிறுவனம் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 25% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
காக்ணிசன்ட் நிறுவனத்தில் அதிகளவு இந்திய ஊழியர்களே பணி புரிவதால் இதன் பலன் இந்திய ஊழியர்களுக்கு அதிகளவில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மத்திய அரசு அதிரடி முடிவு..!

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!