சீனாவின் புதிய வகை வைரஸ் தொற்று.. தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து!!!

0
சீனாவின் புதிய வகை வைரஸ் தொற்று.. தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து!!!
சீனாவின் புதிய வகை வைரஸ் தொற்று.. தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து!!!
சீனாவின் புதிய வகை வைரஸ் தொற்று.. தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து!!!

சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அந்த பாதிப்பு இருக்கிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (நவ. 27) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய வைரஸ்

கொரோனாவின் தாயகமான சீனாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு போன்ற நுரையீரல் நோய்க்கான அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. இது குறித்து சீன அரசு கூறுகையில், சீனாவில் புதிய நோய் தொற்று கிருமி பாதிப்பு எதுவும் கண்டறியவில்லை என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் – மாநகராட்சி ஆணையர் அறிக்கை!

குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினருக்கு ஏற்கனவே தெரிந்த நிமோனியா தாக்குதல் தான் என விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் உள்ளதா என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் நிமோனியா தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!