‘பேரழிவு’ அச்சமூட்டும் சீனாவின் 6 மெகா திட்டங்கள்: ஒரு பார்வை
சீனா மேற்கொண்டு வரும் பிரம்மாண்ட அணை, நீர்மின், ரயில் மற்றும் நீர் மாற்றுத் திட்டங்கள் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பேரிடர் அபாயம் குறித்த கவலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, திபெத்தில் பிரம்மபுத்திராவின் மேல்பகுதியான யர்லுங் சாங்போ நதியில் மேற்கொள்ளப்படும் மெகா நீர்மின் திட்டம் இந்தியாவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர பைஹேடான் நீர்மின் நிலையம், சிசுவான்–திபெத் ரயில் திட்டம் மற்றும் தெற்கிலிருந்து வடக்குக்கு நீர் மாற்றுத் திட்டம் உள்ளிட்ட பிரம்மாண்ட முயற்சிகளும் கவனம் பெற்றுள்ளன.
நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்களின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.



























