2024 செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!!
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் 45 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூபாய். 25 லட்சம், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூபாய். 15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 24) வழங்கினார்.
“Double” மடங்கில் உயர்ந்த பங்கு விலை…|| ரூ. 1லட்சம் டூ ரூ. 2 லட்சம்…முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி”..!!
அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்குமாறு வீரர்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



























