
சென்னையில் மின்சார ரயில்களின் நேரத்தில் மாற்றமா…?? ஜனவரி 2 ல் இருந்து எப்போது செயல்படும் என்று தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!
சென்னையில் வரும் ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து அனைத்து மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்க பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட ஆணையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி, சென்னை மூர்மார்க்கெட் – அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை – வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நேரங்கள் மாற்றியமைக்கபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் இணையதளத்தில் புதிதாக பதிவிட்ட அட்டவணையை பார்த்து நேரங்களை தெரிந்து கொள்ளலாம் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

























