நடைமுறைக்கு வந்தது ஸ்பாட் பைன்..!! இனி யாரும் தப்பிக்க முடியாது ..!! முழு விவரம் உள்ளே..!!
சென்னை மாநகராட்சி, அப்பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டுவோர் மற்றும் எரிப்பவர்கள் மீது ஸ்பாட் பைன் மிஷின் மூலம் அபராதம் விதிக்கப்படும் எனவும், இதனை கண்காணிக்க அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்படுவார்கள் எனவும் தெரிவித்து. இருந்தது. அந்த வகையில், தற்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும் , இதுவரை 289 இடங்களில் சுமார் 5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
























