தேச பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா செய்த சிறப்பான சம்பவம்.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!!
நேரடியாக போரில் ஈடுபடா விட்டாலும் சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. எனவே பாதுகாப்பு துறையில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்காக அதிக அளவில் ட்ரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IT துறையில் வேலை வேண்டுமா? HCL Tech நிறுவனத்தில் உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அதாவது, “கடற்படையை வலிமைப்படுத்தும் வகையில் பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்டு அரசுகளுக்கு இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் பிரான்ஸ் அரசு இந்தியாவிற்கு ஒற்றை இருக்கை கொண்ட 22 ரபேல் போர் விமானங்களும், இரட்டை இருக்கைகள் கொண்ட 4 போர் விமானங்களையும் இந்திய கடற்படைக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.


























